என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rehabilitation center"

    • இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
    • தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று அப்பெண் கோரியுள்ளார்.

    கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த இந்து பெண்ணுக்கு இந்து முறைப்படி இஸ்லாமியர் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம் கடினம்குளம் மறுவாழ்வு மையத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த ராக்கி என்ற 44 வயது பெண் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராக்கி, தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

    உயிரிழந்த பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இஸ்லாமியரான சஃபீர் தானே முன்வந்து இந்து முறைப்படி அப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

    இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு இஸ்லாம் மதம் எனக்கு தடையாக இருக்கவில்லை என்று சஃபீர் தெரிவித்தார்.

    சஃபீரின் இச்செயலுக்கு உள்ளூர் ஜமாத் மற்றும் கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.

    • போதை மறுவாழ்வு மையத்தில் இருந்தவர் திடீரென ரத்தவாந்தி எடுத்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
    • இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்ட:

    தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் சாலை அம்சாபுரத்தை சேர்ந்தவர் முருகன்(52). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் பிரச்சிைன ஏற்பட்டது. எனவே குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட ஆண்டிபட்டி அருகே வைகை அணை சாலையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு முருகன் திடீரென ரத்தவாந்தி எடுத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி பாரஸ்ட்ரோடு பகுதியை சேர்ந்தவர் போஸ்(60). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மதுஅருந்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் வயிற்றுவலி ஏற்பட்டு மனஉளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×