என் மலர்
நீங்கள் தேடியது "மறுவாழ்வு மையம்"
- இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
- தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று அப்பெண் கோரியுள்ளார்.
கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த இந்து பெண்ணுக்கு இந்து முறைப்படி இஸ்லாமியர் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் கடினம்குளம் மறுவாழ்வு மையத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த ராக்கி என்ற 44 வயது பெண் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராக்கி, தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இஸ்லாமியரான சஃபீர் தானே முன்வந்து இந்து முறைப்படி அப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.
இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு இஸ்லாம் மதம் எனக்கு தடையாக இருக்கவில்லை என்று சஃபீர் தெரிவித்தார்.
சஃபீரின் இச்செயலுக்கு உள்ளூர் ஜமாத் மற்றும் கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.
- முகிலன் 9-ம் வகுப்பு படித்து முடித்து, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
- முகிலன் இறந்துவிட்டதாக மைய நிர்வாகிகள் கூறியதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் மாவட்டம் கீவளூரை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் முகிலன்(17). மகள் சத்தியபிரியா(15). செல்வம் டீ கடை நடத்தி வருகிறார். முகிலன் சிறு வயது முதல் திக்கி, திக்கி பேசிவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முகிலன் 9-ம் வகுப்பு படித்து முடித்து, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த ஓராண்டாக, முகிலன் திடீரென ஆக்ரோஷமாகி, வீட்டில் உள்ளவர்களை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நாகப்பட்டினம் மற்றும் பட்டுகோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கீழ்பாக்கம் டாக்டர்கள் முகிலன் சரியாகிவிட்டதாக கூறியதன்பேரில், முகிலனை தந்தை வீட்டுக்கு அழைந்துவந்துள்ளார். வீட்டுக்கு வந்தவுடன், அதே ஆக்ரோஷத்துடன் குடும்ப உறுப்பினர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், நண்பரின் ஆலோசனையின் பேரில், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தனியார்ம றுவாழ்வு மையத்தில் கடந்த 6-ந் தேதி சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். 2 நாட்கள் கழித்து சென்று முகிலனை பார்க்க சென்றபோது, அங்குள்ள நிர்வாகிகள் முகிலனை பார்க்க விடவில்லையென கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மைய மானேஜர் சத்தியராஜ், செல்வத்திற்கு போன் செய்து, முகிலனுக்கு வலிப்பு வருமா என கேட்டதாகவும், பிறகு, 9.30 மணிக்கு, முகிலன் ஆரஞ்சு பழம் சாப்பிடும் போது, தொண்டையில் சிக்கிகொண்டதால், காரைக்கால் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு முகிலன் இறந்துவிட்டதாக மைய நிர்வாகிகள் கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து, செல்வம் கோட்டுச்சேரி போலீசில், எனது மகன் முகிலன் இறப்புக்கு காரணம் அறிந்து நடவடிக்கை எடுக்குமாறும், உரிய நிதி வழங்குமாறும் தந்தை செல்வம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






