search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry money robbery"

    • சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • சூட்கேசில் இருந்த 5 பவுன் நகை திருடர்களிடமிருந்து தப்பியது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வண்டிக்கார தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி (33) இவரது மனைவி சரண்யா( 31). இவர்கள் இங்கு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சரண்யா திட்டக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு சரண்யா இரவு காவலர் பணிக்கு சென்றுள்ளார். இவரது கணவர் மனைவிக்கு இரவு உணவு எடுத்துக்கொண்டு கொடுத்துவிட்டு இரவு மனைவியுடன் அங்கேயே தங்கி உள்ளார்.

    இன்று காலை சுமார் 7 மணி அளவில் சத்தியமூர்த்தி தனது வீட்டிற்கு வந்து பார்க்கும்போது முன் பகுதியில் உள்ள பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகிலுள்ள திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்த ஐந்தே முக்கால் பவுன் நகை, ,ரூ.40ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளது தெரிய வந்தது .

    அங்கு வைத்திருந்த சூட்கேசில் இருந்த 5 பவுன் நகை திருடர்களிடமிருந்து தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரங்கநாதன், அன்பரசன் ஆகியோர் மீது கொள்ளையர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து தூவினர்.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த வழிப்பறியால் நிலை குலைந்த ரங்கநாதன் அலறி கூச்சலிட்டார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்.

    இவர், குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் இருந்து தங்க நகைகளை கொள்முதல் செய்து, வெவ்வேறு நகைக்கடைகளுக்கு கொண்டுசென்று கொடுப்பதோடு, அதற்கான தொகையை வசூல் செய்யும் ஏஜெண்ட்டாக வேலை செய்கிறார்.

    இந்நிலையில் ரங்கநாதன், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அன்பரசன் என்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு, நேற்று வழக்கம் போல் தன்னுடைய பணியில் ஈடுபட்டார்.

    பின்னர் பரதராமி பகுதியில் வேலைகளை முடித்துக் கொண்டு, 2 பேரும் குடியாத்தம் நோக்கி ஒரே பைக்கில் நேற்று இரவு புறப்பட்டனர்.

    அப்போது குட்லவாரிபள்ளி அருகே வந்தபோது, இவர்களை பின் தொடர்ந்து 2 பைக்குகளில் வந்த 4 பேர் மர்மகும்பல் வந்தனர். திடீரென ரங்கநாதனை வழிமறித்தனர்.

    மேலும் ரங்கநாதன், அன்பரசன் ஆகியோர் மீது கொள்ளையர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து தூவினர்.

    இதனால் 2 பேரும் நிலை தடுமாறினர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், ரங்கநாதனிடம் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த வழிப்பறியால் நிலை குலைந்த ரங்கநாதன் அலறி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடி வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து ரங்கநாதன் பரதராமி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் குடியாத்தம், எர்தாங்கல் பரதராமி, பேர்ணாம்பட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத்தீப்போல் பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரங்கநாதனை பல நாட்களாக பின்தொடர்ந்த மர்மநபர்கள்தான், இந்த செயலில் ஈடுபட்டிருக்க கூடும் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    எனவே, சம்பவம் நடந்த இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம். கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சம்பவத்தன்று சீனிவாசன் காலையில் தனது வீட்டில் இருந்து கிளம்பி பணி நிமித்தமாக வெளியில் சென்றுள்ளார்.
    • வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று சீனிவாசன் காலையில் தனது வீட்டில் இருந்து கிளம்பி பணி நிமித்தமாக வெளியில் சென்றுள்ளார்.

    பணிகளை முடித்து விட்டு மீண்டும் பிற்பகலில் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்து உள்ளார். அப்பொழுது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 24 1/2 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதனை கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மேரி ஸ்டெல்லா ராணி மண்டைக்காடு அருகே பெரிய விளையில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
    • கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ராஜாக்கமங்கலம்:

    வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி (வயது 58). இவர் பணக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மேரி ஸ்டெல்லா ராணி. இவர் மண்டைக்காடு அருகே பெரிய விளையில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் தூத்துக்குடியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    ஜான்கென்னடியும், மேரிடெல்லா ராணியும் இங்கு வசித்து வந்தனர். இவர்கள் தினமும் காலை வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று காலையில் வழக்கம்போல் இருவரும் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்குச்சென்றனர். மாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜான்கென்னடி, மேரி ஸ்டெல்லா ராணி இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்து 35 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளையடித்து இருந்தனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெள்ளிச்சந்தை போலீசார் மற்றும் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஜான்கென்னடி, மேரி ஸ்டெல்லா ராணி இருவரும் வீட்டில் இல்லாததை தெரிந்தே கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    எனவே உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பழைய கொள்ளையர்களின் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கடந்த 10-ந்தேதி சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்தஊரான தஞ்சாவூருக்கு சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வண்டலூர்:

    ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூர் கிராமம், கவின் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு அலுவலகத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி புவனேஸ்வரியுடன் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருகிறார். மேல் தளத்தில் அவர்களது ஒரு மகன் குடும்பத்துடன் உள்ளார்.

    இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்தஊரான தஞ்சாவூருக்கு சென்றார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், பூஜை பொருட்கள், இரண்டு லேப்டாப் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.

    வீட்டின் மேல் தளத்தில் உள்ள சீனிவாசனின் மகன் தங்கி இருந்த அறைக்கு கொள்ளையர்கள் செல்லாததால் அங்கிருந்த 30 பவுன் நகை தப்பியது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • மூதாட்டி சுசித்ரா கொள்ளை குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
    • அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அண்ணாநகர்:

    சென்னை, அண்ணாநகர், வி பிளாக், 4-வது அவென்யூவில் வசித்து வருபவர் சுசித்ரா(வயது76). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன் அமெரிக்காவில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார்.

    இதையடுத்து சுசித்ரா மட்டும் வீட்டில் தனியாக வசித்தார். அவருக்கு உதவியாக சிவகாசியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் வீட்டு வேலைகள் செய்து அவருடனேயே தங்கி உள்ளார்.

    நேற்று இரவு சுசித்ராவும், மகாலட்சுமியும் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். அதிகாலை 3 மணியளவில் 2 வாலிபர்கள் கத்தியுடன் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் அறையில் தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டி சுசித்ரா, மற்றும் வேலைக்கார பெண் மகாலட்சுமியை கத்திமுனையில் மிரட்டினர். அலறினால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி அமர வைத்தனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதைத்தொடர்ந்து மர்மநபர்கள் 2 பேரும் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் மூதாட்டி சுசித்ரா, வேலைக்கார பெண் மகாலட்சுமி அணிந்து இருந்த நகைகள் மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து மூதாட்டி சுசித்ரா கொள்ளை குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் உருவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர் வீட்டில் அதிக பணம் மற்றும் நகை இருப்பதை அங்கு வேலை செய்து வந்த வெள்ளிமலையை சோ்ந்த அண்ணாதுரை நோட்டமிட்டுள்ளார்.
    • கார்களின் எண்களை வைத்து போலீசார் கொள்ளையர்களை மடக்கினர்.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த சாவடிப்பாளையம் பகுதியை சோ்ந்தவா் குணசேகரன் ( வயது 47). அப்பகுதியில் தேங்காய் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறாா். ஆலையின் வளாகத்தில் உள்ள வீட்டில் மனைவி செல்வி (43), மகன்கள் தனுஷ் (20), நிதா்ஷன் (14) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

    கடந்த 30-ந்தேதி இரவு குணசேகரன் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளை கும்பல் குணசேகரன் குடும்பத்தினரை கட்டி போட்டு விட்டு, பீரோவில் இருந்த 25 பவுன் நகை , ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனா். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் தேங்காய் எண்ணெய் ஆலையில் வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையை சோ்ந்த அண்ணாதுரை (32) சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீசாா், அவா் அளித்த தகவலின்பேரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், ஆராம்பூண்டி பகுதியைச் சோ்ந்த ராமநாதன் (35), சூா்யா (27), ஆத்தூரை சோ்ந்த பிரசாந்த் (25), பெத்தநாயக்கன் பாளையத்தை சோ்ந்த முருகன் (21), சாமிதுரை (46), ஜான் கிருபா (37), விஜயகாந்த் (31), கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையை சோ்ந்த சௌந்தா் (25), செல்வம் (37) ஆகிய 10 பேரை கைது செய்தனா்.

    அவா்களிடம் இருந்து 16 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம், 3 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனா். மேலும், கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்திய 2 காா்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைது செய்யப்பட்ட 10 பேரும் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, பின்னா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

    தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர் குணசேகரன் வீட்டில் அதிக பணம் மற்றும் நகை இருப்பதை அங்கு வேலை செய்து வந்த வெள்ளி மலையை சோ்ந்த அண்ணாதுரை நோட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் சேலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து கொள்ளையடிப்பதற்காக 9 பேரும் 2 கார்களில் காங்கயம் வந்துள்ளனர். குணசேகரன் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் கார்களை நிறுத்தி விட்டு நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு கார்களில் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து காங்கயம் பகுதி சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கார்களை வைத்து ஆய்வு செய்த போது கொள்ளையர்கள் பயன்படுத்திய கார்கள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த கார்களின் எண்களை வைத்து போலீசார் கொள்ளையர்களை மடக்கினர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சதீஷ்குமார் பெங்களூரில் இருந்து புறப்பட்ட பிறகு ரெயிலில் அயர்ந்து தூங்கியதாக தெரிகிறது.
    • கொள்ளை தொடர்பாக ரெயிலில் வந்த வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 44 வயதான இவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தொழில் விஷயமாக பெங்களூரு சென்றுவிட்டு ரெயிலில் சென்னை திரும்பினார்.

    தனது பையில் ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்து வந்தார்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து பார்த்த போது பையில் வைத்திருந்த பணம் மற்றும் வெள்ளியை காணாமல் திடுக்கிட்டார். இது தொடர்பாக ரெயில்வே போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சதீஷ்குமார் பெங்களூரில் இருந்து புறப்பட்ட பிறகு ரெயிலில் அயர்ந்து தூங்கியதாக தெரிகிறது.

    இதனை பயன்படுத்தியே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அவர்கள் யார்? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக ரெயிலில் வந்த வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • வீட்டிலிருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
    • அண்ணன், தம்பி இருவரும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அன்டராயநல்லூர் பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வருபவர்கள் அரிதாஸ் (வயது 52), தண்டபாணி (47). அண்ணன், தம்பியான இவர்கள் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் அவரவர் குடும்பத்துடன் தனித்தனி அறையில் நேற்று இரவு படுத்து தூங்கினர். இன்று காலை கண் விழித்து எழுந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டில் உள்ள பொருட்கள் உள்ளதா என்று அண்ணன், தம்பி இருவரும் பார்த்தனர்.

    அப்போது வீட்டிலிருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதனுள் இருந்த பாதுகாப்பு பெட்டகமும் உடைக்கப்பட்டு 12 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதனையடுத்து அண்ணன், தம்பி இருவரும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், புனிதவதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விவசாயம் செய்து வரும் அண்ணன், தம்பி வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • காலையில் எழுந்த பூங்கொடி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    திட்டக்குடி:

    திட்டக்குடி அடுத்த தொளார் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பூங்கொடி (வயது 35) 3 குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார். இவர்களுடன் வெங்கடேசனின் தந்தை முத்துவேலும் உள்ளார்.

    நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு அனைவரும் வழக்கம் போல தூங்கிவிட்டனர். காலையில் எழுந்த பூங்கொடி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், உள்ளே சென்று பீரோவை பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி கொலுசு, சுய உதவிக்குழு பணம் ரூ.45 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தை பார்த்து பூங்கொடி மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெண்ணாடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட ஓடுபோட்ட வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் நகை பெட்டிகள் இருப்பதை கண்டனர். மேலும், வீட்டை சுற்றிலும் அமைக்கப்பட்ட வேலியை பிரித்து உள்ளே வந்து சென்றதையும் கண்டறிந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், அதே ஊரில் பிள்ளையார்கோவில் தெருவில் வசிப்பவர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராமர். இவர் வீட்டின் பின்புற கதவு சேதப்படுத்தப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே நுழைய திருடர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால், கதவை உடைக்க முடியாததால், வீட்டிற்குள் செல்ல முடியாமல் கொள்ளையர்கள் திரும்ப சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

    தொளார் குடிகாடு கிராமத்தில் ஒரு வீட்டில் திருட்டு சம்பவம் நடத்ததும், மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பீரோவில் வைத்திருந்த மூன்றரைப் பவுன் நகை, ரூ.2000 ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
    • போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உடன் வருகை தந்து சோதனை நடத்தினர்.

    திருச்சி:

    திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 53). ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இவர் தற்போது துவாக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

    இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். அடுத்த நாள் அவர்கள் ஊர் திருப்பினர். பின்னர் வீட்டிற்கு சென்ற போது முன்பக்க கதவு பூட்டு போட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த மூன்றரைப் பவுன் நகை, ரூ.2000 ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் குமார் நவல்பட்டு போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உடன் வருகை தந்து சோதனை நடத்தினர். இதில் இருவரின் கைரேகைகள் பதிவாகி உள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் நகைகள், ரூ.3.90 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சேனூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் டெல்லி. இவர் பீடி மண்டி நடத்தி வருகிறார். இவரது மனைவி கவுரி.

    இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஜாப்ராபேட்டையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 11 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் நகைகள், ரூ.3.90 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து கவுரி விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    விசாரணையின் போது இதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கவுரியின் வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்ததாக தெரிவித்தனர்.

    சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அவர் நகை, பணம் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மாணவரின் வீட்டு மாட்டு கொட்டகையில் பையில் பதுக்கி வைத்திருந்த நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    ×