என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
    X

    வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

    • 5 பவுன் நகை அபேஸ்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே மல்லபள்ளி கனிகார்ச்சி வட்டம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெய்ஸ்ரீ (வயது 28) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

    பள்ளி விடுமுறை என்பதால் ஜெயஸ்ரீ தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீடான கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வெங்கட்டாபுரம் பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார்.

    வீட்டில் மாமியார் தனியாக இருந்தார். வீட்டில் இருந்து மாமியார் அருகில் உள்ள கொட்டாவூர் பகுதியில் நடைபெறும் திருவிழாவில் தெருக்கூத்து நாடகம் பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் இரவு சென்றார்.

    பின்னர் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந் தார்.

    இதுகுறித்து அவர் ஜெயஸ்ரீக்கு போனில் கூறினார். அவர் வந்து பார்த்த போது பீரோவில் வைத்து இருந்த 5 பவுன் நகை, 750 கிராம் வெள்ளி நகைகள், ரூ.4 ஆயிரம் மற்றும் எல்.இ.டி. டி.வி. திருட்டு போனது தெரியவந்தது. பின்னர் இது சம்பந்தமாக ஜெயஸ்ரீ நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×