search icon
என் மலர்tooltip icon
    • ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ N53 மாடல் அளவில் 7.49mm தடிமனாக இருக்கிறது.
    • புகைப்படங்களை எடுக்க நார்சோ N53 மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நார்சோ N சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. நார்சோ N53 என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட LCD ஸ்கிரீன், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இது மினி கேப்சியுல் கொண்ட மூன்றாவது ரியல்மி ஸ்மார்ட்போன் ஆகும். முன்னதாக ரியல்மி C55 மற்றும் ரியல்மி நார்சோ N55 மாடல்களில் மினி கேப்சியுல் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் விவரங்கள், பேட்டரி தீர்ந்து போவதை உணர்த்தும் நோட்டிஃபிகேஷன், டேட்டா பயன்பாடு, தினசரி நடக்கும் தூரம் பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும்.




     


    இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் T612 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, ஃபிளாட் டிசைன், பக்கவாட்டில் கைரேகை சென்சார், கோல்டு கோட்டிங், கலிஃபோர்னியா சன்ஷைன் டிசைன், 90 டிகிரி பெசல் உள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் நார்சோ N53 மாடலில் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ரியல்மி நார்சோ N53 அம்சங்கள்:

    6.74 இன்ச் HD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    யுனிசாக் T612 பிராசஸர்

    மாலி G57 GPU

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ T எடிஷன்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி நார்சோ N53 ஸ்மார்ட்போன் ஃபெதர் கோல்டு மற்றும் ஃபெதர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 24 ஆம் தேதி ஆஃப்லைன் தளங்களில் துவங்குகிறது. மே 22 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஆன்லைனில் மட்டும் சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது.

    அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தி 4 ஜிபி ரேம் வெர்ஷனை வாங்கும் போது ரூ. 750, 6 ஜிபி ரேம் வெர்ஷனை வாங்கும் போது ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள ஜியோ பலன்களும் வழங்கப்படுகிறது.

    • இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
    • சுமார் இரண்டு மணி நேரம் கார் சேசிங் நடைபெற்றது.

    பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் தம்பதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில், பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற அறக்கட்டளை ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்த கிளம்ப ஆயத்தமான ஹாரி மற்றும் மேகன் தம்பதியை புகைப்பட கலைஞர்கள் துரத்தியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இவர்களுடன் மேகனின் தாயாரும் பயணம் செய்திருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரம் கார் சேசிங் நடைபெற்றதாக இளவரசர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவல்களில் அரை டஜன் கார்கள் சேசிங்கில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இறுதியில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவானது. எனினும், ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. 

    இதே போன்று 1997 ஆம் ஆண்டு புகைப்பட கலைஞர்கள் படம் எடுப்பதற்காக வாகனத்தை துரத்திய போது ஏற்பட்ட கோர விபத்தில் ஹாரியன் தாயார் இளவரசி டயானா பலியானது குறிப்பிடத்தக்கது.

    • 87 வயதான இந்துஜா குழும தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
    • பிரிட்டனை சேர்ந்த எஸ்பி இந்துஜாவின் உயிர் லண்டனில் பிரிந்தது.

    இந்துஜா குழும தலைவரும், இந்துஜா குடும்பத்தின் மூத்தவருமான ஸ்ரீசந்த் பரம்சந்த் இந்துஜா உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 87. கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், லண்டனில் அவரது உயிர் பிரிந்தது.

    முன்னதாக இந்துஜா குழும தலைவர் மற்றும் அவரது சகோதரர்கள் கோபிசந்த் மற்றும் பிரகாஷ் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆயுத உற்பத்தியாளரான ஏபி போஃபோர்ஸ்-க்கு இந்திய அரசின் ஒப்பந்தத்தை வாங்கி கொடுக்க இந்திய மதிப்பில் ரூ. 63 கோடியே 87 லட்சத்து 48 ஆயிரத்து 048 வரை சட்டவிரோதமாக பணம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பின் இவர்கள் மீது எந்த தப்பும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    "கோபிசந்த், பிரகாஷ், அசோக் மற்றும் இந்துஜா குழுமத்தை சேர்ந்த அனைவரின் சார்பாக எங்களது குடும்ப தலைவர் மற்றும் இந்துஜா குழும தலைவருமான எஸ்.பி. இந்துஜா இன்று உயிரிழந்தார் என்பதை கனத்த மனதோடு அறிவிக்கிறோம்," என்று இந்துஜா குழும செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 

    • இந்த குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த தகவல் ஏராளமானோருக்கு பரவி வருவதை அடுத்து பி.ஐ.பி எச்சரிக்கை தகவல் விடுத்துள்ளது.

    பாரத ஸ்டேட் வங்கி பயனர்களின் அக்கவுண்ட் முடக்கப்பட்டு விட்டதாக கூறும் குறுந்தகவல் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்குரிய பரிமாற்றம் நடைபெற்றதால், வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    அதனை க்ளிக் செய்யும் போது திறக்கும் மற்றொரு வலைதளம் பயனர்களிடம் சில வழிமுறைகளை பின்பற்றி அக்கவுண்ட்-ஐ அன்லாக் செய்யக் கோருகிறது. இந்த தகவல் ஏராளமானோருக்கு பரவி வருவதை அடுத்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் (பி.ஐ.பி) எச்சரிக்கை தகவல் விடுத்துள்ளது. மேலும் அந்த தகவல் போலியான ஒன்று என தெரிவித்து இருக்கிறது.

     

    "எஸ்பிஐ சார்பில் அனுப்பப்பட்டதாக கூறும் குறுந்தகவல், பயனரின் அக்கவுண்ட் தற்காலிகமாக லாக் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுபோன்று வங்கி கணக்கு விவரங்களை கேட்கும் மின்னஞ்சல் / எஸ்எம்எஸ்-களுக்கு பதில் அனுப்ப வேண்டாம். இது போன்ற குறுந்தகவல்களை உடனடியாக report.phishing@sbi.co.in முகவரியில் தெரிவிக்க வேண்டும்," என்று பிஐபி டுவிட்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது போன்ற வலைதள முகவரிகளை க்ளிக் செய்யும் போது உங்களின் தனிப்பட்ட விவரங்களை இயக்குவதற்கான வசதியை ஹேக்கர்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போகவும், தனிப்பட்ட விவரங்களை இழக்கவும் நேரிடும். இதுபோன்ற வலைதள முகவரிகளை க்ளிக் செய்யும் போது, ஹேக்கர் உங்களது அக்கவுண்டை இயக்குவதற்கான வசதியை பெற்றிடுவர். 

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் சிப்செட் கொண்டிருக்கும் என்று தகவல்.
    • இந்த மாடலில் 108MP பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    அதன்படி சாம்சங் நிறுவனத்தின் புதிய F54 5ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் எக்சைனோஸ் 1380 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    இத்துடன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, டூயல் சிம் ஸ்லாட்கள், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5, 6.7 இன்ச் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மெமரியை பொருத்தவரை இந்த மாடல் 128 ஜிபி, 256 ஜிபி என்று இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    விலை விவரங்கள்:

    பிரபல டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி F54 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • புகைப்படங்களில் காரின் லைட்கள், பொனெட் மற்றும் கிரில் மட்டும் இடம்பெற்று இருக்கின்றன.
    • ஆஸ்டன் மார்டின் DB12 மாடலில் 5.2 லிட்டர் டுவின் டர்போ V12 என்ஜின் மற்றும் AMG-இன் 4.0 லிட்டர் பை டர்போ வி8 என்ஜின் வழங்கப்படலாம்.

    பிரிட்டன் நாட்டு கார் உற்பத்தியாளரான ஆஸ்டன் மார்டின் தனது அடுத்த ஃபிளாக்ஷிப் கிராண்ட் டூரர் மாடலின் டீசரை வெளியிட்டு உள்ளது. இதில் மூன்று புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாடல் DB12 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. ஆஸ்டன் மார்டின் DB12 மாடல் ஜேம்ஸ் பாண்ட்-இன் அடுத்த காராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மே 24 ஆம் தேதி அறிமுகமாக இருக்கும் புதிய ஆஸ்டன் மார்டின் DB12 கிராண்ட் டூரர் மாடலின் குறிப்பிட்ட சில விவரங்களே அம்பலமாகி இருக்கிறது. முதற்கட்ட புகைப்படங்களில் காரின் லைட்கள், பொனெட் மற்றும் கிரில் மட்டும் இடம்பெற்று இருக்கின்றன. இதன் ஹெட்லைட்களில் மூன்று கிளஸ்டர் யூனிட்கள் உள்ளன. பொனெட்டில் சக்திவாய்ந்த என்ஜின் கொண்டிருப்பதை உணர்த்தும் லைன்கள் உள்ளன.

    புதிய ஆஸ்டன் மார்டின் DB12 மாடலில் 5.2 லிட்டர் டுவின் டர்போ V12 என்ஜின் மற்றும் AMG-இன் 4.0 லிட்டர் பை டர்போ வி8 என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. காரின் இரண்டாவது படத்தில் பக்கவாட்டு பகுதி எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த மாடலில் ஃபிலஷ் டோர் ஹேண்டில்கள் உள்ளன.

     

    மூன்றாவது புகைப்படத்தில் காரின் இண்டீரியர் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த காரின் செண்டர் கன்சோல் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இன்ஃபோடெயின்மெண்டிற்கு புதிய டிஸ்ப்ளே, கிளைமேட் கண்ட்ரோல் செட்டிங்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் மேலும் சில பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • காரின் முன்புறம் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி டிஆர்எல் பொனெட் லைனின் கீழ் பொருத்தப்பட்டு உள்ளது.
    • காரின் பின்புறம் ரியர் வைப்பர், ஹை மவுண்ட் ஸ்டாப் லேம்ப், எல்இடி டிரை-ஏரோ டெயில் லைட்கள் உள்ளன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த மாடல் டாடா பன்ச் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    2025 ஆண்டிற்குள் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் டாடா பன்ச் EV மாடலும் இடம்பெற்று இருக்கும் என்று கூறப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் அதன் ஐசி என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என்று தெரிகிறது.

     

    இந்த காரின் முன்புறம் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி டிஆர்எல் பொனெட் லைனின் கீழ் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த காரின் கிரில் பகுதி ரிடிசைன் செய்யப்பட்டு, முழுமையாக பிளான்க்டு ஆஃப் செய்யப்பட்டு EV பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. காரின் பின்புறம் ரியர் வைப்பர், ஹை மவுண்ட் ஸ்டாப் லேம்ப், எல்இடி டிரை-ஏரோ டெயில் லைட்கள் உள்ளன.

    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டிகோர், டியாகோ மற்றும் நெக்சான் ஐசி என்ஜின் கார்களை எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வரிசையில், தற்போது டாடா பன்ச் மாடலும் இணைய இருக்கிறது. ஸ்பை படங்களின் படி இந்த காரின் பின்புற வீலில் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.

    பவர்டிரெயின் மற்றும் அம்சங்களின் படி பன்ச் EV மாடல் டியாகோ EV மாடலின் மேல் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. விலையை பொருத்தவரை டாடா பன்ச் EV மாடல் ரூ. 9 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    Photo courtesy: photulogy

    • ஹீரோ எக்ஸ்பல்ஸ் சீரிசின் ரேலி எடிஷன் தற்போது ப்ரோ வேரியண்ட் என்று அழைக்கப்படுகிறது.
    • 2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில்: ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி என மூன்று ரைடு மோட்கள் உள்ளன.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2023 எக்ஸ்பல்ஸ் 200 4V மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம் என்று துவங்குகிறது. எக்ஸ்பல்ஸ் சீரிசின் ரேலி எடிஷன் தற்போது ப்ரோ வேரியண்ட் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட், 60mm அளவில் உயரமான விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட பெரிய ஹேண்ட் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் உள்ள 200சிசி ஆயில் கூல்டு என்ஜின் புதிய OBD-2 விதிகள் மற்றும் E20 ரக எரிபொருளில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில்: ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி என மூன்று ரைடு மோட்கள், சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் ரைடர் டிரையாங்கில் டுவீக் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜர் காக்பிட் அருகில் மாற்றப்பட்டுள்ளது. இதன் ப்ரோ வேரியண்டில் ரேலி கிட் ஸ்டாண்டர்டு ஃபிட்மெண்ட் ஆக வழங்கப்படுகிறது.

    • ரியல்மி 11, ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் ரியல்மி 11 சீரிஸ் மாடல்கள் ஜூன் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக ரியல்மி 11, ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியா உள்பட மேலும் சில நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

    அந்த வரிசையில், ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் 5ஜி மாடல்களின் வெளியீட்டை உறுதிப்படுத்தும் பதிவு வெளியாகி இருக்கிறது. சர்வதேச சந்தையிலும் ரியல்மி 11 சீரிஸ் மாடல்கள் ஜூன் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், ரியல்மி ப்ரோ மாடல்களுடன் ரியல்மி 11 அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

     

    ரியல்மி 11 ப்ரோ, ரியல்மி 11 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:

    6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FUll HD+ வளைந்த AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்

    மாலி G68 MC4 GPU

    8 ஜிபி, 12 ஜிபி ரேம்

    256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி மெமரி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0

    ரியல்மி 11 ப்ரோ - 108MP பிரைமரி கேமரா, OIS

    2MP மேக்ரோ லென்ஸ், எல்இடி ஃபிளாஷ்

    ரியல்மி 11ப்ரோ பிளஸ் - 200MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    ரியல்மி 11 ப்ரோ - 16MP செல்ஃபி கேமரா

    ரியல்மி 11 ப்ரோ பிளஸ் - 32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    ரியல்மி 11 ப்ரோ 67 வாட் சார்ஜிங்

    ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 100 வாட் சார்ஜிங் 

    • முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன.
    • பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் (சிஎம்ஆர்எல்) சேவையை பயன்படுத்துவோர் இன்று (மே 17) முதல் ரெயில் டிக்கெட்களை வாட்ஸ்அப் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு அறிமுகம் செய்த இரண்டு மாதங்கள் கழித்து வாட்ஸ்அப் மூலம் இ-டிக்கெட்களை வினியோகம் செய்யும் பணிகளை சிஎம்ஆர்எல் துவங்கி இருக்கிறது.

    பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுக்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஞ்ச் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும், அந்த எண்ணில் இருந்து மெட்ரோ ரெயில் நிலைய விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அதில் செல்ல வேண்டிய ரெயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

     

    இனி, டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் ஆப்ஷன்கள் திரையில் தோன்றும். அதன்படி பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே போன்ற சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். புதிய வசதி மூலம் பயனர்கள் அவசர கால பயணத்திற்கோ அல்லது, எப்போதாவது பயணம் செய்பவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மெட்ரோ ரெயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில், முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன. பின் டோக்கன்கள் வரிசையில், ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கியூஆர் கோடு முறையில் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வரிசையில் தான் தற்போது வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. "கியூஆர் கோடு டிக்கெட்களை தவிர வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் அவசர கதியில் மெட்ரோ சேவையை பயன்படுத்துவோருக்கும், வரிசையில் நின்று டிக்கெட் வாங்க நேரமில்லாத பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயண அட்டையை ரிசார்ஜ் செய்ய நேரமில்லாதவர்களும் அவசரத்திற்கு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று மெட்ரோ ரெயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்வை சந்தித்து பேசினார்.
    • முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்ற கருத்து டிகே சிவக்குமாரிடம் கேட்கப்பட்டதாக தகவல்.

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மாநிலத்தில் ஆட்சியமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வரை காங்கிரஸ் கட்சி மேலிடம் தேர்வு செய்யும் என்று கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று டெல்லி சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்வை சந்தித்து பேசினார். இவரைத் தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இன்று (மே 16) டெல்லி புறப்பட்டு சென்றார்.

    இன்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை டிகே சிவக்குமார் சந்தித்து பேசினார். இருவரின் பேச்சுவார்த்தையின் போது, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்று அவரிடம் யாரும் தெரவிக்கவில்லை என்றும், அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்ற கருத்து டிகே சிவக்குமாரிடம் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    'எனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்றால், நான் சாதாரண சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்ற தயார். சித்தராமையா கட்சியில் இணைந்தது முதல், ஒன்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அல்லது முதலமைச்சர் என்று அதிகாரத்திலேயே இருந்து வந்துள்ளார்,' என்று டிகே சிவக்குமார் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    • ஹோண்டா e:Ny1 மாடலில் 68.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹோண்டா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் வாகனம் e:Ny1 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹோண்டா e ஹேச்பேக் மாடலை தொடர்ந்து ஐரோப்பிய சந்தையில் ஹோண்டா அறிமுகம் செய்திருக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    டிசைனை பொருத்தவரை e:Ny1 மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் ஹோண்டா HR-V மற்றும் e:NS1 போன்றே காட்சியளிக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. HR-V மாடலை பொருத்தவரை அப்ரைட் டிசைன், ஹோண்டாவின் புதிய தலைமுறை மாடல்களை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

    இந்த காரில் வழக்கமாக வழங்கப்படும் கிரில் மாற்றப்பட்டு புதிதாக என்க்லோஸ் செய்யப்பட்ட பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பம்ப்பரின் கீழ்புறம் ஏர் வெண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது எலெக்ட்ரிக் பவர்டிரெயினுக்கு தேவையான காற்றோட்டத்தை உறுதி செய்கிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய e:N ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் e:Ny1 மாடலில் 68.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 412 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 201 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    ×