search icon
என் மலர்tooltip icon
    • பியாஜியோ நிறுவனத்தின் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் வெஸ்பா டூயல் VXL 125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்குகிறது.

    பியாஜியோ நிறுவனத்தின் புதிய வெஸ்பா டூயல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெஸ்பா டூயல் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்குகிறது. புதிய டூயல் வேரியண்ட் 125சிசி மற்றும் 150சிசி என்று இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் OBD 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

    இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வெஸ்பா டூயல் ஸ்கூட்டர் விசேஷமாக டூயல் டோன் லிவெரி மற்றும் அழகிய ஃபூட்போர்டு கொண்டிருக்கிறது. புதிய டூயல் டோன் நிறங்கள் வழக்கமான மோனோக்ரோம் ஸ்கூட்டர்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

     

    இதன் VXL ரேஞ்ச் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ரியர் வியூ மிரர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் SXL வேரியண்ட் செவ்வக வடிவம் கொண்ட ஹெட்லைட் மற்றும் ரியர் வியூ மிரர்கள் உள்ளன. புதிய வெஸ்பா டூயல் மாடல் நாடு முழுக்க 250-க்கும் அதிக பிரத்யேக விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது.

    விலையை பொருத்தவரை வெஸ்பா டூயல் VXL 125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்கி டாப் எண்ட் வெஸ்பா டூயல் SXL 150 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • பிடிரான் பாஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
    • இந்த இயர்பட்ஸ் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    பிடிரான் பேஸ்பட்ஸ் என்கோர் மாடலை தொடர்ந்து பிடிரான் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ்- பேஸ்பட்ஸ் நியோ என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் பயனர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அதிக சவுகரியமானதாகவும், அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இந்த இயர்பட்ஸ் அதன் சார்ஜிங் கேஸ் உடன் எளிதில் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த இயர்பட்ஸ் அன்றாட பயன்பாடுகளுக்கும் சவுகிரயமானதாக இருக்கும். இதில் 13 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இது தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

    இத்துடன் ட்ரூ டாக் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம், அழைப்புகளின் போது பின்னணியில் ஏற்படும் சத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் உள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் இதர ப்ளூடூத் மோடம் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தலாம்.

    பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இந்த இயர்பட்ஸ்-ஐ 150 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். இத்துடன் போர்டபில் சார்ஜிங் கேஸ், டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ்-ஐ மேலும் 35 மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. டச் கண்ட்ரோல் வசதி மூலம் அழைப்புகள், மியூசிக் உள்ளிட்ட அம்சங்களை எளிதில் இயக்க முடியும்.

    பிடிரான் பாஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 899 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் பிளாக், புளூ மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    • புதிய சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.
    • வெப் வெர்ஷனில் மேற்கொண்ட சாட் ஹிஸ்ட்ரி அதன் செயலியில் சின்க் செய்யப்படுகிறது.

    ஒபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வ சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலியை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஐபோன் வைத்திருக்கும் பயனர்கள் பிரபல ஏஐ சாட்பாட் சேவையை முன்பை விட எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி செயலி அதன் வெப் வெர்ஷன் சாட் ஹிஸ்ட்ரியை சின்க் செய்து வழங்குகிறது.

    மேலும் ஒபன் ஏஐ நிறுவனத்தின் ஒபன்-சோர்ஸ் ஸ்பீச் ரெகஃனிஷன் மாடலான (Speech Recognition Model) விஸ்பர் மூலம் ஐஒஎஸ் ஆப் வாய்ஸ் இன்புட் வசதியை வழங்குகிறது. பயனர்கள் வெப் வெர்ஷனில் மேற்கொண்ட சாட் ஹிஸ்ட்ரி அதன் செயலியிலும் சின்க் செய்யப்பட்டு விடுகிறது. இதனால் வெப் வெர்ஷனில் இருந்த சாட்கள் செயலியிலும் பார்க்க முடியும்.

     

    சாட்ஜிபிடி பிளஸ் சந்தாதாரர்கள் ஐஒஎஸ் செயலியில் பிரத்யேக பலன்களை பெற முடியும். இதில் ஜிபிடி-4 மேம்பட்ட திறன்கள், புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதி, அதிவேகமாக பதில்களை பெறும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சாட்ஜிபிடி செயலி உடனடி தீர்வுகள் மட்டுமின்றி, அறிவுரை, தொழில்முறை கருத்துக்கள் என்று பல்வித கேள்விகளுக்கு நேர்த்தியாக பதில் அளிக்கிறது.

    புதிய சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் இந்த செயலி கிடைக்கிறது. விரைவில் மற்ற நாடுகளிலும் இந்த செயலி வெளியிடப்பட இருக்கிறது. ஐஒஎஸ்-ஐ தொடர்ந்து ஆண்ட்ராய்டு வெர்ஷன் செயலியும் விரைவில் வெளியிடப்படும் என்று ஒபன்ஏஐ தெரிவித்துள்ளது.

    • ரெட்மி A2 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஒஎஸ் உள்ளது.
    • ரெட்மி A2 சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி A2 சீரிஸ்- ரெட்மி A2 மற்றும் ரெட்மி A2 பிளஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 6.52 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், ஆக்டா கோர் ஹீலியோ G36 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஒஎஸ், 8MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 5MP செல்ஃபி கேமரா, லெதர் போன்ற பேக் பேனல், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி A2 பிளஸ் மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

     

    ரெட்மி A2 மற்றும் A2 பிளஸ் அம்சங்கள்:

    6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ IPS LCD ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர்

    IMG PowerVR GE8320 GPU

    2 ஜிபி, 3 ஜிபி, 4 ஜிபி ரேம்

    32 ஜிபி, 64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) ஒஎஸ்

    டூயல் சிம் ஸ்லாட்

    8MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ

    பின்புறம் கைரேகை சென்சார் (A2 பிளஸ்)

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரெட்மி A2 மற்றும் ரெட்மி A2 பிளஸ் மாடல்கள் சீ கிரீன், அக்வா புளூ மற்றும் கிளாசிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 299 என்றும் 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 799 என்றும், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என்றும் நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது.

    ரெட்மி A2 பிளஸ் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை அமேசான், Mi வலைதளம், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் இதர ஆஃப்லைன் ஸ்டோர்களில் மே 23 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    அறிமுக சலுகை விவரங்கள்:

    புதிய ரெட்மி A2 (2 ஜிபி, 32 ஜிபி மெமரி) மாடலுக்கு ரூ. 300, 4 ஜிபி, 64 ஜிபி மெமரி மாடல் வாங்குவோர் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 599 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.

    • சமீபத்தில் டாடா ஹேரியர் மாடல் பிஎஸ் 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டது.
    • மைல்கல் பற்றிய தகவல் டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டியுள்ளது. உற்பத்தி ஆலையில் இருந்து ஹேரியர் மாடலின் ஒரு லட்சமாவது யூனிட் வெளியிடப்பட்டு இருக்கிறது. 2019 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, ஹேரியர் மாடல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் டாடா ஹேரியர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது 19 வெவ்வேறு வேரியண்ட்கள், ஆறு வித நிறங்களில் கிடைக்கும் எஸ்யுவி-யாக ஹேரியர் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் என்று துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 06 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய விற்பனை மைல்கல் பற்றிய தகவலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் மாடலை பிஎஸ் 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து இருந்தது. இதில் பானரோமிக் சன்ரூஃப், 6 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர் வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அப்கிரேடு செய்யப்பட்டு, பெரியதாக 10.25 இன்ச் அளவில் டிஸ்ப்ளே, புதிய ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, iRA கனெக்டெட் வெஹிகில் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 200-க்கும் அதிக வாய்ஸ் கமாண்ட்களை, ஆறு வித்தியாசமான மொழிகளில் இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. 

    • 1 லட்சம் அடி உயரத்திற்கு சென்றதும், விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளலாம்.
    • விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    திருமணம் செய்யும் பாரம்பரியம் தற்போது பல எல்லைகளை கடந்துவிட்டது. திருமணம் செய்து கொள்ளும் இடத்தில் துவங்கி, ஆடை, அணிகலன், உணவு என்று எல்லாவற்றுக்குமே ஏராளமான ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. வித்தியாசமான இடங்களில் திருமணம் செய்து கொள்வது, இயற்கை அழகியல் நிறைந்த பகுதியில் மாலை மாற்றிக் கொள்வது போன்ற சம்பவங்கள் தற்போதைய டிரெண்ட் ஆக இருக்கின்றன.

    இந்த வரிசையில், யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் வசதியை தனியார் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. அந்த வகையில் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ. 1 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்று அழைக்கப்படும் புதிய நிறுவனம் திருணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகளை கார்பன் நியூட்ரல் பலூன் ஒன்றில் விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த ராட்சத பலூனில் ஏராளமான ஜன்னல்கள் உள்ளன. பூமியில் இருந்து கிளம்பும் ஜோடி, சரியாக 1 லட்சம் அடி உயரத்திற்கு சென்றதும், விண்வெளியில் இருந்தபடி பூமியின் அழகை கண்டுகளித்துக் கொண்டே திருமணம் செய்து கொள்ளலாம்.

    திருமணம் முடிந்ததும் திருமண தம்பதிகளாக அவர்கள் மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படுவர். இந்த முறையில் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற திருமண சேவையை, அடுத்த ஆண்டில் இருந்து துவங்கி வைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    • இரண்டு முறை F1 பந்தயம் வென்ற மைகா ஹகினென் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.
    • வெர்ஜ் மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் ஹப்லெஸ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஃபின்லாந்தை சேர்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான வெர்ஜ் மோட்டார்சைக்கிள்ஸ் தனது லிமிடெட் மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த இ பைக் மொத்தத்திலேயே 100 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதன் விலை 80 ஆயிரம் யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 71 லட்சத்து 48 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வெர்ஜா மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடல் வெர்ஜ் மற்றும் மைகா ஹகினென் இடையேயான கூட்டணியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. இரண்டு முறை F1 பந்தயம் வென்ற மைகா ஹகினென் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதோடு, இந்த பைக்கின் டிசைனிங் பணிகளில் உதவியாக இருந்து வந்துள்ளார்.

     

    வெர்ஜ் மோட்டார்சைக்கிள்ஸ்-இன் TS ப்ரோ மோட்டார்சைக்கிளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் மைகா ஹகினென் எடிஷன் டார்க் கிரே மற்றும் சில்வர் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இந்த பெயிண்ட் ஸ்கீம்1998 மர்றும் 1999 ஆண்டுகளில் மைகா ஹகினென் பயன்படுத்திய மெக்லாரென் ஃபார்முலா 1 மாடல்களை நினைவூட்டும் வகையில் உள்ளது.

    வெர்ஜ் மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் ஹப்லெஸ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 136.78 ஹெச்பி பவர், 1000 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.

    மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் 20.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் உள்ளது. இந்த பைக்கை முழு சார்ஜ் செய்தால் 563 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதன் பேட்டரி 25 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இது 35 நிமிடங்களில் பைக்கை சார்ஜ் செய்துவிடுகிறது. 

    • காணாமல் போன மொபைல் போனின் IMEI நம்பர் மற்றும் காவல் துறை அறிக்கைகளை தளத்தில் சமர்பிக்க வேண்டும்.
    • தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, டெலிகாம் சேவை நிறுவனங்கள் மற்றும் சட்டத்துறை நிறுவனங்களுடன் பகிரப்படும்.

    மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் சஞ்சர் சாதி (Sanchar Saathi) எனும் முனையம் துவங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். மத்திய தகவல் தொடர்பு, ரெயில்வே மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் இந்த முனையத்தை துவங்கி வைத்தார்.

    இதில் பயனர்கள் பதிவு செய்யப்பட்ட இணைப்புகளை சரிபார்ப்பது, தேவையற்ற அல்லது சந்தேகத்திற்குரிய இணைப்புகளை சரிபார்ப்பது, தொலைந்து போன மொபைல் போன்களை பிலாக் செய்வது, IMEI நம்பர்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது போன்ற சேவைகளை பெற முடியும்.

     

    சஞ்சர் சாதி முனையத்தின் மிக முக்கிய அங்கம் தான் மத்திய உபகரணங்கள் அடையாள பதிவு (CEIR). இதில் காணாமல் போன மொபைல் போனின் IMEI நம்பர் மற்றும் காவல் துறை வழங்கிய அறிக்கைகளை தளத்தில் சமர்பிக்க வேண்டும். இந்த தளத்தில் பதிவிடப்படும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, டெலிகாம் சேவை நிறுவனங்கள் மற்றும் சட்டத்துறை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

    இந்த தகவல்கள் முழுமையாக ஆய்வு செய்தபின், திருடப்பட்ட மொபைல் போன்கள் இந்திய நெட்வொர்க்குகளில் இயங்க முடியாத அளவுக்கு மாற்றப்பட்டு விடும். சட்டத் துறை நிறுவனங்கள் திருடப்பட்ட சாதனத்தை டிராக் செய்யும். திருடப்பட்ட சாதனம் மீட்கப்பட்டதும், பயனர்கள் சஞ்சர் சாதி முனையத்தில் வைத்து, அதனை அன்லக் செய்துவிடும்.

     

    திருடப்பட்ட மொபைல் போன்கள் மட்டுமின்றி, தவறான அல்லது ஃபோர்ஜ் செய்யப்பட்ட IMEI கொண்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுவதை இந்த சிஸ்டம் தடுத்துவிடும். இத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் "Know Your Mobile" அம்சம் கொண்டு IMEI நம்பர் மூலம் மொபைல் சாதனங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

    திருடுபோன மொபைல் போனை டிராக் அல்லது பிலாக் செய்வது எப்படி?

    - சஞ்சர் சாதி CEIR வலைதளம் செல்ல வேண்டும்.

    - இனி Block Stolen/Lost Mobile ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    - உங்களின் பெயர், மொபைல் நம்பர், IMEI நம்பர் மற்றும் சாதனத்தின் விவரங்களை பதிவிட வேண்டும். மொபைல் வாங்கியதற்கான இன்வாய்ஸ்-ஐ அப்லோடு செய்ய வேண்டும்.

    - நகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் சாதனம் தொலைந்து போன தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.

    - மொபைல் நம்பர் ஒடிபி மூலம் விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

    - இனி Submit பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இல் இயங்கும் xrOS சார்ந்த அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியாகலாம்.
    • ஜூன் மாத வாக்கில் ஆப்பிள் AR/VR ஹெட்செட் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

    ஆப்பிள் நிறுவனம் ஜூன் 5 ஆம் தேதி "சிறப்பு நிகழ்ச்சி" நடத்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆப்பிள் WWDC 2023 டெவலப்பர் நிகழ்வின் அங்கமாக நடைபெற இருக்கிறது. 2023 ஆண்டிற்கான ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு ஜூன் 5 ஆம் தேதி துவங்கி ஜூன் 9 வரை நடைபெறவுள்ளது. சிறப்பு நிகழ்ச்சி குறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இல் இயங்கும் xrOS சார்ந்த அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த வரிசையில் ஆப்பிள் ஹெட்செட்டும் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் ஆப்பிள் AR/VR ஹெட்செட் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

     

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் ரியாலிட்டி ப்ரோ ஹெட்செட் மிகவும் சக்திவாய்ந்த XR ஹெட்செட் ஆக இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் இதன் விலையும் பிரீமியம் பிரிவிலேயே நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த ஹெட்செட் 4K மைக்ரோ OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் சோனி, டூயல் பிராசஸர்கள் TSMC, 12 கேமராக்கள் மற்றும் வெளிப்புற பவர் சப்ளை வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெட்செட்டில் இருந்தபடி ஆக்மெண்டெட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி மோட்களிடையே ஸ்விட்ச் செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஆப்பிள் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் விலை 3 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    • சிறப்பு சலுகை பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும்.
    • இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு குறுகிய காலத்திற்கு சிறப்பு சலுகைகள் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 10-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி டுகாட்டி ஃபிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர் மாடலான, மல்டிஸ்டிராடா வி4 மற்றும் பனிகேல் வி4 சார்ந்த ரோட்ஸ்டர் மாடல், ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 மாடல்களுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மான்ஸ்டர், ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 மற்றும் மல்டிஸ்டிராடா வி2 போன்ற மாடல்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

     

    இத்தாலி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தியாளர் டுகாட்டி, இந்த பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், பயனர்கள் இந்த தொகையை கொண்டு டுகாட்டி ஆடை, பயனர் வாங்கும் மோட்டார்சைக்கிளுக்கான அக்சஸரீக்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்று டுகாட்டி இந்தியா அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் தான் டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது மான்ஸ்டர் எஸ்பி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என்று துவங்குகிறது. இது அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 3 லட்சம் வரை அதிகம் ஆகும்.

    • ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணைத்தில் வெளியாகி உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மாடல் உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான நார்டு 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக நார்டு 3 ஸ்மார்ட்போன் உருவாகி இருக்கிறது. புதிய நார்டு 3 மாடல் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு 3 வெளியீடு, விலை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

    இந்த வரிசையில், டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நார்டு 3 அம்சங்கள், இந்திய வெளியீடு மற்றும் விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர நார்டு 3 ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஏஸ் 2V போன்றே காட்சியளிக்கிறது.

     

    ஒன்பிளஸ் நார்டு 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.74 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட பன்ச் ஹோல் டிஸ்ப்ளே

    மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர்

    12 ஜிபி, 16 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ்

    50MP பிரைமரி கேமரா

    8MP இரண்டாவது லென்ஸ்

    2MP மூன்றாவது கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு 3 மாடலின் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதன் வெளியீடு ஜூன் மாத வாக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    • 2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடல் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த காரிலும் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் இந்தியா தனது டிகுவான் எஸ்யுவி மாடலின் 2023 வெர்ஷனை அறிமுகம் செய்தது. புதிய 2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் விலை ரூ. 34 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட ரூ. 50 ஆயிரம் அதிகம் ஆகும்.

    2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பதோடு, புதிய RDE விதிகளுக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. காரின் வெளிப்புறம் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய டிகுவான் மாடல் நைட்ஷேட் புளூ, ஆரிக்ஸ் வைட், டால்ஃபின் கிரே, டீப் பிளாக் மற்றும் ரிஃப்ளெக்ஸ் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

     

    காரின் உள்புறம் டூயல் டோன் கிரே இண்டீரியர் செய்யப்பட்டு, கேபின் ஆல் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை வயர்லெஸ் போன் சார்ஜர், பார்கிங் அசிஸ்டண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒற்றை பட்டனை க்ளிக் செய்ததும் ஆக்டிவேட் ஆகும் பார்கிங் அசிஸ்டண்ட் மிகவும் குறுகிய பாதைகளில் காரை பார்க் செய்ய உதவுகிறது.

    இத்துடன் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், 10-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 8.0 இன்ச் டச் ஸ்கிரீன், ஹீடெட் முன்புற இருக்கைகள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் சீட், 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு டெயில்கேட், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய 2023 டிகுவான் மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 188 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    ×