search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aston Martin"

    • புகைப்படங்களில் காரின் லைட்கள், பொனெட் மற்றும் கிரில் மட்டும் இடம்பெற்று இருக்கின்றன.
    • ஆஸ்டன் மார்டின் DB12 மாடலில் 5.2 லிட்டர் டுவின் டர்போ V12 என்ஜின் மற்றும் AMG-இன் 4.0 லிட்டர் பை டர்போ வி8 என்ஜின் வழங்கப்படலாம்.

    பிரிட்டன் நாட்டு கார் உற்பத்தியாளரான ஆஸ்டன் மார்டின் தனது அடுத்த ஃபிளாக்ஷிப் கிராண்ட் டூரர் மாடலின் டீசரை வெளியிட்டு உள்ளது. இதில் மூன்று புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாடல் DB12 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. ஆஸ்டன் மார்டின் DB12 மாடல் ஜேம்ஸ் பாண்ட்-இன் அடுத்த காராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மே 24 ஆம் தேதி அறிமுகமாக இருக்கும் புதிய ஆஸ்டன் மார்டின் DB12 கிராண்ட் டூரர் மாடலின் குறிப்பிட்ட சில விவரங்களே அம்பலமாகி இருக்கிறது. முதற்கட்ட புகைப்படங்களில் காரின் லைட்கள், பொனெட் மற்றும் கிரில் மட்டும் இடம்பெற்று இருக்கின்றன. இதன் ஹெட்லைட்களில் மூன்று கிளஸ்டர் யூனிட்கள் உள்ளன. பொனெட்டில் சக்திவாய்ந்த என்ஜின் கொண்டிருப்பதை உணர்த்தும் லைன்கள் உள்ளன.

    புதிய ஆஸ்டன் மார்டின் DB12 மாடலில் 5.2 லிட்டர் டுவின் டர்போ V12 என்ஜின் மற்றும் AMG-இன் 4.0 லிட்டர் பை டர்போ வி8 என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. காரின் இரண்டாவது படத்தில் பக்கவாட்டு பகுதி எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த மாடலில் ஃபிலஷ் டோர் ஹேண்டில்கள் உள்ளன.

     

    மூன்றாவது புகைப்படத்தில் காரின் இண்டீரியர் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த காரின் செண்டர் கன்சோல் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இன்ஃபோடெயின்மெண்டிற்கு புதிய டிஸ்ப்ளே, கிளைமேட் கண்ட்ரோல் செட்டிங்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் மேலும் சில பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் இந்த கார் பெண்ட்லி பெண்ட்யகா, பெராரி புரோசங் மற்றும் லம்போர்கினி உருஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    உலகின் சக்திவாய்ந்த ஆடம்பர் எஸ்யுவி மாடல்- ஆஸ்டன் மார்டின் DBX707 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஆஸ்டன் மார்டின் DBX707 விலை ரூ. 4 கோடியே 63 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஏற்கனவே இந்தியாவில் கிடைக்கும் ஆஸ்டன் மார்டின் DBX மாடலின் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆகும்.

    புதிய ஆஸ்டன் மார்டின் DBX707 பெயரில் உள்ள 707 என்பது இந்த கார் வெளிப்படும் திறனை குறிக்கிறது. அந்த வகையில் இது உலகின் சக்திவாய்ந்த ஆடம்பர எஸ்யுவி என்ற பெருமையை ஆஸ்டன் மார்டின் DBX707 பெற்று இருக்கிறது. இது லம்போர்கினி உருஸ் மாடலை விட வேகமானது ஆகும். மேலும் விலை உயர்ந்த ஆடம்பர எஸ்யுவி மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் பெண்ட்லி பெண்ட்யகா, பெராரி புரோசங் மற்றும் லம்போர்கினி உருஸ் போன்ற மாடல்களுக்கு புதிய ஆஸ்டன் மாமர்டின் DBX707 போட்டியாக அமைகிறது.

    ஆஸ்டன் மார்டின் DBX707 மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 707 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு வெட் கிளட்ச் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 311 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை ஆஸ்டன் மார்டின் DBX707 மாடலில் முற்றிலும் புதிய முன்புறம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது DBX மாடலில் இருப்பதை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த காரின் முன்புறம் பெரிய கிரில், புது தோற்றம் கொண்ட டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய ஏர் இண்டேக், பிரேக் கூலிங் டக்ட்கள், முன்புற ஸ்ப்லிட்டர் ப்ரோபைல் வழங்கப்பட்டு உள்ளன.

    ×