என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • பாஜக அரசாங்கத்தின் கீழ் தலித்துகள், குறிப்பாக பெண்கள், சிறுமிகள் முற்றிலும் பாதுகாப்பற்றவர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன.
    • பாதிக்கப்பட்டவர்கள் உதவியற்றவர்கள் என்ற பாஜகவின் தலித் எதிர்ப்பு மற்றும் பெண்கள் விரோத மனநிலையின் விளைவு இது.

    உத்தரப் பிரதேசத்தில் ராம்பூரை சேர்ந்த 11 வயது காது கேளாத வாய் பேச முடியாத தலித் சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் காணாமல் போனாள். மறுநாள் காலை ஒரு வயலில் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். சிறுமியின் அந்தரங்கப் பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது.

    மேலும் சிறுமியின் உடலில் கடித்த அடையாளங்கள் இருந்தன. மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவதிற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் 11 வயது தலித் சிறுமி மீது நடத்தப்பட்ட கொடூரமும், கொடுமையும் மிகவும் வெட்கக்கேடானதும், அதிர்ச்சியளிப்பதும் ஆகும்.

    உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற குற்றங்கள், பாஜக அரசாங்கத்தின் கீழ் தலித்துகள், குறிப்பாக பெண்கள், சிறுமிகள் முற்றிலும் பாதுகாப்பற்றவர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன.

    குற்றவாளிகள் சட்டம் ஒழுங்கைப் பற்றி பயப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் உதவியற்றவர்கள் என்ற பாஜகவின் தலித் எதிர்ப்பு மற்றும் பெண்கள் விரோத மனநிலையின் விளைவு இது!. எல்லாவற்றிற்கும் மேலாக, உத்தரப் பிரதேசத்தின் மகள்கள் எவ்வளவு காலம் இத்தகைய மிருகத்தனத்திற்கு பலியாவார்கள்?

    குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விரைவில் நீதி வழங்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். 

    • அந்த சிகரெட்டை டாக்டர் பற்ற வைக்கிறார்.
    • டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிறுவன் சிகெரெட்டை பல முறை புகைக்கிறான்.

    உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் ஜலான் நகரில் சளி பிடித்ததால் 5 வயது சிறுவன் மாவட்ட சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

    அங்கு பணியில் இருந்த மருத்துவர் சுரேஷ் சந்திரா, சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி சிகரெட் பிடிக்க வைத்துள்ளார்.

    சிகெரட்டை சிறுவனிடம் கொடுத்து அவனின் வாயில் வைக்க சொல்லி, அந்த சிகரெட்டை டாக்டர் பற்ற வைக்கிறார். பின் டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிறுவன் சிகெரெட்டை பல முறை புகைக்கிறான்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

    இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவர் சுரேஷ் சந்திரா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
    • ன் மனைவியை நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்.

    உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரியல் எஸ்டேட் டீலர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குல்தீப் தியாகி (46) தனது வீட்டில் துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு, பிறகு தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நடக்கும் வீட்டில் இருந்த அவரது 2 மகன்களும் துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்,

    பின்னர் அம்மா, அப்பாவை அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் ஏற்கனேவே இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    குல்தீப்பின் அறையில் இருந்து ஒரு தற்கொலை கடிதத்த்தை போலீசார் கண்டிபிடித்தனர். அக்கடிதத்தில், "நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன், என் குடும்பத்தினருக்கு இது பற்றித் தெரியாது. என்னால் நீண்ட நாட்கள் வாழ முடியாது. என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நானும் என் மனைவியும் எப்போதும் ஒன்றாக இருப்போம் என்று சபதம் செய்துள்ளதால், என் மனைவியை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு" என்று குல்தீப் எழுதியுள்ளார்.

    துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • வழக்கமாக திருமணம் நிச்சயம் நடந்த பின்னர் மணமக்கள் ஜோடிதான் செல்போனில் மணிக்கணக்காக பேசுவார்கள்.
    • என்ன நடந்தாலும் நான் ராகுல்குமாருடன்தான் வாழ்வேன்.

    உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்த வாலிபருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    ஒரு வாரத்திற்கு பின் அந்த ஜோடி போலீசில் சரணடைந்தனர். அப்போது நான் எனது மருமகனையே திருமணம் செய்து கொள்வேன் என்று அந்த பெண் போலீசாரிடம் பிடிவாதமாக கூறி வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் சப்னா. இவரது கணவர் ஜிஜேந்திரகுமார். இந்த தம்பதியின் மகள் ஷிவானி. இவருக்கு திருமணம் செய்ய ராகுல் குமார் என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்தனர்.

    வழக்கமாக திருமணம் நிச்சயம் நடந்த பின்னர் மணமக்கள் ஜோடிதான் செல்போனில் மணிக்கணக்காக பேசுவார்கள். ஆனால் இங்கு வினோதமாக பெண்ணின் தாய் சப்னா மருமகன் ராகுல்குமாரிடம் மணிக்கணக்கில் பேசி வந்தார்.

    அப்போது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு ஏன் மருமகனிடம் போனில் அதிக நேரம் பேசுகிறாய் என்று கணவர் கேட்டுள்ளார். திருமண ஏற்பாடு சம்பந்தமாக பேசுவதாக அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த வாரம் மருமகன் ராகுல்குமாருடன் மாமியார் சப்னா திடீரென ஓட்டம் பிடித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சப்னா-ராகுல்குமார் ஜோடி டாடன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசாரிடம் சப்னா நான் ராகுல் குமாரையே திருமணம் செய்து கொள்வேன். நான் வீட்டில் இருந்து செல்லும் போது ஒரு செல்போனும், ரூ.200 மட்டுமே என்னிடம் இருந்தது.

    லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் நகைகளுடன் நான் ஓடி விட்டதாக எனது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். நான் எதையும் எடுத்து செல்லவில்லை. எனது கணவரும், மாமியார்களும் என்னை சித்ரவதை செய்தனர். எனது கணவர் குடித்து விட்டு வந்து என்னை அடித்து உதைப்பார். எனது மகளும் என்னிடம் அடிக்கடி சண்டையிடுவார் என குற்றம்சாட்டினார். இதனால்தான் இவ்வாறு செய்தேன் என்றார்.

    என்ன நடந்தாலும் நான் ராகுல்குமாருடன்தான் வாழ்வேன். அவரை திருமணம் செய்து கொண்டு நாங்கள் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துவோம் என்று அவர் பிடிவாதமாக போலீசாரிடம் கூறினார்.

    ராகுல்குமார் கூறும் போது, சப்னா தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியதால் அவருடன் ஓடிப்போக ஒப்புக் கொண்டேன். அலிகார் பஸ் நிலையத்தில் நான் அவரை சந்திக்கவில்லை என்றால் அவர் தற்கொலை செய்திருப்பார். அதனால்தான் நான் சென்றேன்.

    நாங்கள் முதலில் லக்னோவுக்கு சென்றோம். அங்கிருந்து முசாபர்பூருக்கு சென்றோம். போலீசார் தங்களை தேடுகிறார்கள் என்பதை அறிந்து சரணடைந்தோம் என்றார். சப்னாவை திருமணம் செய்து கொள்வீர்களா என்று போலீசார் கேட்டபோது, முதலில் அப்படி எதுவும் இல்லை என்று சொன்ன அவர் சிறிது நேர மவுனத்திற்கு பின்னர் அவரை திருமணம் செய்வேன் என்றார்.

    சப்னாவின் குடும்பத்தினர் எங்களுக்கு சப்னா திரும்ப வேண்டாம். அவர் வீட்டில் இருந்து எடுத்து சென்ற நகை, பணத்தை மட்டும் மீட்டு தாருங்கள் என்று போலீசாரிடம் கூறினர்.

    மகளுக்கு நிச்சயித்த மருமகனையே மாமியார் திருமணம் செய்து கொள்வேன் என்ற அடம்பிடித்த இந்த சம்பவம் போலீசார் மட்டும் அல்ல அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 



    • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.
    • முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    லக்னோ:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    முர்ஷிதாபாத் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி அமைதியாக இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் மிரட்டல்களுக்கு மேல் மிரட்டல்களை விடுக்கின்றனர்.

    வங்கதேசத்தில் நடந்ததை அவர்கள் வெட்கமின்றி ஆதரிக்கிறார்கள். வங்கதேசத்தை அவர்கள் விரும்பினால் அவர்கள் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் ஏன் இந்திய நிலத்திற்கு சுமையாக இருக்கிறார்கள்?

    வங்கதேசம் பற்றி எரிகிறது. மாநில முதல் மந்திரி அமைதியாக இருக்கிறார். மதச்சார்பின்மை என்ற பெயரில் கலவரக்காரர்களுக்கு, கலவரத்தை உருவாக்க அனைத்து சுதந்திரத்தையும் அளித்துள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக முழு முர்ஷிதாபாத் தீப்பிடித்து எரிகிறது. ஆனால் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. இத்தகைய அராஜகத்தை அடக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • ஒரு முஸ்லிம் பெண்ணின் பர்தாவை அகற்றச் சொல்லி ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலானது.
    • பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் பர்தாவை அகற்றச் சொல்லி ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் ஃபர்ஹீன். அவரின் தாயார் ஃபர்ஹானா உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடன் பெற்றவர்களிடம் இருந்து மாத தவணையை வசூலிக்கும் பொறுப்பில் அவர் உள்ளார்.

    இந்நிலையில், சுஜாது கிராமத்தில் வசிக்கும் ஷாமா என்பவரிடமிருந்து கடன் தொகையை வசூலிக்க தனது நிறுவனத்தில் உடன் வேலை செய்யும் சச்சின் என்ற நபருடன் தனது மகள் ஃபர்ஹீனை அனுப்பியுள்ளார்.

    ஃபர்ஹீனும் சச்சினும் ஒரு பைக்கில் அந்த கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சுமார் 10 ஆண்கள் அவர்களை வலுக்கட்டாயாமாக தடுத்து, இருவரையும் தாக்கியுள்ளனர். குறிப்பாக ஃபர்ஹீனின் பர்தாவை கழட்ட சொல்லி தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலைக்காக வெளியூர் சென்று வெள்ளிக்கிழமை வீடு திரும்புவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • ஆனால் வியாழக்கிழமை இரவே கணவர் வீடுதிரும்பினார்.

    உத்தரப் பிரதேசத்தில் மனைவியை பக்கத்து வீட்டுக் காரருடன் படுக்கையில் பார்த்த கணவன் செய்த விபரீத சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கான்பூரில் பாபுபூர்வா பகுதியில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வரும் கணவன் வேலைக்காக வெளியூர் சென்று  வெள்ளிக்கிழமை வீடு திரும்புவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் விளையக்கிழமை இரவே கணவர் வீடுதிரும்பினார்.

    அப்போது வீட்டில் படுக்கையில் தனது மனைவியுடன் பக்கத்துவீட்டு நபர் இருப்பதை கண்டு கணவர் ஆத்திரதமடைந்தார். அந்த நபர் அங்கிருந்த ஓட முயன்ற நிலையில் பெண்ணின் கணவன் அந்த நபரை பிடித்து அவரின் ஆணுறுப்பை பற்களால் கடித்துள்ளார்.

    இதில் அந்த நபரின் ஆணுறுப்பில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த ரத்தத்துடன் பயத்தில் அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்தை நோக்கி ஓடி அடைக்கலம்  புகுந்தார்.

    போலீசார் அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆணின் கண்முன்னே அவரது வருங்கால மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    • அவருக்கு மருத்துவ பரிசோதனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்சில் வருங்கால கணவர் கண்முன் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பெண்ணும் அவருக்கு நிச்சயக்கப்பட்ட ஆணும், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணியளவில், ஒரு கால்வாயின் அருகே சாலையோரத்தில் அமர்ந்திருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    அவர்கள் தனியாக இருப்பதைக் கண்டதும், ஒரு கும்பல் வந்து, அந்த நபரையும் பெண்ணையும் ஒரு தனிமையான இடத்துக்கு பிணை கைதிகளாக பிடித்துச் சென்று ஆணின் கண்முன்னே அவரது வருங்கால மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகள் அந்த நபரிடமிருந்து பணத்தையும் பறித்துச் சென்றனர்.

    பல ஆண்கள் தன்னை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று ஒவ்வொருவராக வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    அவருக்கு பரிசோதனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றாவளிகள் 8 பேரையும் அடையாளம் கண்டு தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  

    • தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்கப் போவது இல்லை.
    • அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து மாயாவதி அறிவிப்பு வெளியிட்டார்.

    மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவித்தார். அதோடு ஆகாஷ் ஆனந்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது வழங்கப்பட்டது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரை கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கினார். ஆனால் அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஆகாஷ் ஆனந்திற்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.

    இதற்கிடையே, மருமகனின் கட்சி விரோத நடவடிக்கைகளால் குறிப்பாக அவரது மாமனாருடன் சேர்ந்து கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்ததால் இரண்டாவது முறையாக ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மாயாவதி கடந்த மாதம் அதிரடியாக நீக்கினார்.

    தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்கப் போவது இல்லை. கட்சி விவகாரத்தை தானே பார்த்துக் கொள்கிறேன் என மாயாவதி அப்போது தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஆகாஷ் ஆனந்த் தனது செயலுக்கு நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'கட்சியில் இருந்து எனது நீக்கத்துக்கு காரணமான பதிவை எக்ஸ் தளத்தில் சில நாட்களுக்கு முன்பு போட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    எனது உறவினர்கள் அல்லது வெளிநபர்கள் அறிவுரைப்படி எந்த அரசியல் முடிவும் எடுக்கமாட்டேன் என உறுதியளிக்கிறேன்' என தெரிவித்தார்.

    ஆகாஷின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து மாயாவதி அறிவிப்பு வெளியிட்டார்.

    இதுகுறித்து மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில், தனது தவறை உணர்ந்து பொதுவெளியில் மன்னிப்பு கேட்டதால் ஆகாஷுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குவதாகவும் அதேநேரம் தான் ஆரோக்கியமாக இருக்கும் வரை, கட்சிக்கு எந்த வாரிசையும் நியமிக்கப்போவது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

    • நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

    லக்னோ:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தோனி கேப்டனாக இருப்பது நிச்சயம் எங்களுக்கு சாதகமான விஷயம் தான். ஆனால் அவரிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை. அவர் ஏதோ கையை வைத்தவுடன் அணி அப்படியே மாறிவிடும் என நினைக்கக் கூடாது. அப்படி இருந்திருந்தால் அவர் அதை முன்பே செய்திருப்பார்.

    நாங்கள் தற்போது தோனியுடன் இணைந்து சரியான திசையில் செல்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். அணியின் செயல்பாட்டை முன்னேற்ற முயற்சி செய்வோம்.

    கடந்த போட்டியில் எங்களுடைய செயல்பாடு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. கொஞ்சம் கூட எதிரணிக்கு சவால் அளிக்காமல் நாங்கள் தோற்ற விதம் எனக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே எங்களுக்குள்ளேயே நாங்கள் சுயபரிசோதனை செய்து எப்படி முன்னேறலாம் என்பது குறித்து கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

    எங்கள் அணி தோல்வியின் மூலம் பல காயங்களை ஏற்படுத்திவிட்டது. அந்தக் காயத்தை எல்லாம் நாங்கள் உத்வேகமாக மாற்றி வெற்றியை நோக்கிச் செல்ல முயற்சி செய்வோம்.

    வீரர்கள் தங்களது பார்மை கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். நாம் அனைவரும் சிக்சர்களைப் பற்றியே பேசிக் கொள்கிறோம். ஆனால் அதுவே அனைத்தும் கிடையாது. சிக்சர் அடிப்பதற்கும், பெரிய ஷாட் ஆடி ரன்களை சேர்ப்பதற்கும் ரசிகர்கள் இடையே நிறைய ஆர்வம் இருப்பது எனக்கு தெரியும். இதை சில அணிகள் சிறப்பாக செய்கின்றது.

    எனினும் நாம் ஒன்றும் பேஸ் பால் போட்டியில் இல்லை சிக்சர், பவுண்டரி பற்றி பேச. பந்திற்கும், பேட்டிற்கும் இடையே ஒரு நல்ல பேலன்ஸ் இருப்பதுதான் கிரிக்கெட்டின் அழகே.

    லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன் நிச்சயம் எங்களுக்கு அபாயத்தை கொடுப்பார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கின்றார். அவரை விரைவில் ஆட்டம் இழக்கவைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என தெரிவித்தார்.

    • கொடுத்த 6 லட்ச ரூபாய் பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ள வருமாறு அஞ்சலியிடம் சிவேந்திரா கூறியுள்ளார்.
    • அவரது உடலை தீவைத்து எரித்து, பாதி எரிந்த உடலை யமுனை ஆற்றில் வீசியுள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா பகுதியை சேர்ந்த இளம்பெண் அஞ்சலி (வயது 28). கணவனை இழந்த அஞ்சலிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    அஞ்சலி தான் வசித்துவந்த பகுதியில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக அதேபகுதியை சேர்ந்த சொத்து புரோக்கரான சிவேந்திரா யாதவ் (26) என்பவரிடம் பிளாட் நிலம் வாங்க 6 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.

    பணத்தை வாங்கிக்கொண்ட புரோக்கர் சிவேந்திரா நிலத்தின் பத்திரத்தை அஞ்சலியிடம் கொடுக்காமல் தாழ்த்தி வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி சிவேந்திராவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், அஞ்சலிக்கும், சிவேந்திராவுக்கு பிரச்சினை ஏற்பட்துள்ளது.

    இந்நிலையில், கொடுத்த 6 லட்ச ரூபாய் பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ள வருமாறு கடந்த 7ம் தேதி அஞ்சலியிடம் சிவேந்திரா கூறியுள்ளார்.

    அன்றைய தினமே சிவேந்திராவின் வீட்டிற்கு அஞ்சலி சென்றுள்ளார். அங்கு பணத்தை திரும்ப தராமல் சிவேந்திர மற்றும் அவரது கூட்டாளி கௌரவ் (19) அஞ்சலியை தாக்கியுள்ளனர்.

    மேலும் அவரை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து, அவர் போதையானதும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின் அவரது உடலை தீவைத்து எரித்து, பாதி எரிந்த உடலை யமுனை ஆற்றில் வீசியுள்ளனர்.

    சிவேந்திராவை பார்க்க செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி அன்று இரவுக்குள் வீட்டுக்கு திரும்பி வராதது குறித்து அஞ்சலியின் சகோதரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து மறுநாள் அவர் போலீசில் புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக சிவேந்திராவிடம் விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. அஞ்சலியின் உடலை நேற்று (சனிக்கிழமை) ஆற்றின் அருகே மோசமான நிலையில் கண்டெடுத்தனர். இதைத்தொடர்ந்து சிவானந்தா மற்றும அவரது கூட்டாளி கௌரவை போலீசார் கைது செய்தனர்.  

    • 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் விளையாட்டுத்தனமாக தனது தாத்தாவின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துச் சென்றான்.
    • ஓடி வந்து பார்த்த பொது சிறுவன் அதிர்ச்சியில் மயங்கிய நிலையிலும், இளைஞன் உயிரிழந்த நிலையிலும் இருப்பதை கண்டனர்.

    உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் 18 வயது இளைஞனை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கஜூரி கிராமத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் விளையாட்டுத்தனமாக தனது தாத்தாவின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனது பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளான்.

    பெற்றோர் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற நிலையில் அங்கு வீட்டில் தனியாக தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டியை பார்த்துகொண்டுருந்த 18 வயது இளைஞன் முகமது கைஃப்பை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளான்.

    அப்போது சிறுவனின் விரல் தவறுதலாக துப்பாக்கி டிரகரில் பட்டு இளைஞன் மீது குண்டு பாய்ந்துள்ளது. இதில் அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். துப்பாக்கி சுடப்பட்ட சத்தம் கேட்டு அக்கபக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சிறுவன் அதிர்ச்சியில் மயங்கிய நிலையிலும், இளைஞன் உயிரிழந்த நிலையிலும் இருப்பதை கண்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் துப்பாக்கியை கைப்பற்றி இளைஞனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்கம் தெளிந்தபின் சிறுவனை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். 

    ×