என் மலர்tooltip icon

    இந்தியா

    நீரில் நச்சுக் கழிவுகள்.. உ.பி. கிராமத்தில் 15 நாளில் 13 பேர் உயிரிழப்பு
    X

    நீரில் நச்சுக் கழிவுகள்.. உ.பி. கிராமத்தில் 15 நாளில் 13 பேர் உயிரிழப்பு

    • சர்க்கரை ஆலைகளிலிருந்து இரசாயனக் கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது.
    • அனைவரும் நீண்டகால நோயாளிகள் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டம், புத்பூர் கிராமத்தில் கடந்த 15 நாட்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அருகிலுள்ள வடிகாலில் வெளியேற்றப்படும் நச்சு கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதே இதற்குக் காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சர்க்கரை ஆலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனக் கழிவுகளும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் நிலத்தடி நீரை மாசுபடுத்துவதாகக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குடிநீர் அசுத்தமாகி, கால்நடைகள் மற்றும் பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்த விவகாரம் குறித்து 9 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் நீண்டகால நோயாளிகள் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    ராஷ்டிரிய லோக் தல் கட்சியை சேர்ந்த பாக்பட் எம்.பி. ராஜ்குமார் சங்வான், இது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாக்பட்டில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாததும் ஒரு பெரிய கவலை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×