என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பில் விஜய் ஈடுபட இருக்கிறார்.
    • மக்கள் சந்திப்பு தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை கட்சி மேலிடம் வழங்கியுள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகம் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக பூத் கமிட்டி மாநாட்டை கோவையில் அக்கட்சி நடத்தியது.

    இதைத்தொடர்ந்து, திருச்சி, வேலூர், தர்மபுரி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.

    இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதனிடையே அவர் நடித்து வரும் கடைசி படமான 'ஜனநாயகன்' படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. எனவே இனி முழு வீச்சில் தமிழகம் முழுவதும் கட்சி வளர்ச்சி பணிகளை முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 10 மாதங்களே இருப்பதால், மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்துவதற்கான பணிகளில் விஜய் இறங்கி இருக்கிறார். இதற்கான வழித்தட அமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பில் விஜய் ஈடுபட இருக்கிறார்.

    ஜூலை 2-வது வாரம் அல்லது ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி அல்லது மதுரையில் இருந்து இதனை தொடங்கலாமா? என்று விஜய் யோசித்து வருகிறார். இதற்காக பிரசார வேனும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    மக்கள் சந்திப்பு தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை கட்சி மேலிடம் வழங்கியுள்ளது. மக்கள் சந்திப்பு வழித்தடம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார். அதில், 'கட்சி நிர்வாகிகளிடம் கோஷ்டி பூசல் எதுவும் இருக்க கூடாது, அப்படி ஏதாவது இருந்தால் கண்டிப்பாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.

    நமது இலக்கு 2026 என்பதை மறந்து விடாதீர்கள், இலக்கை நோக்கி பயணிப்போம், நம்மை நோக்கி வரும் எதிர்ப்பு கணைகளை பற்றி கவலைப்படாதீர்கள், விமர்சனங்களுக்கு பதில் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம். நமக்கு இலக்கு மட்டும் தான் முக்கியம்' என்று கூறி இருக்கிறார்.

    விஜய் மேற்கொள்ள இருக்கும் மக்கள் சந்திப்பு பயணம் குறித்து நிர்வாகிகள் கூறும்போது, 'தேர்தலுக்கு குறைவான காலமே இருக்கிறது. தற்போது எங்களுக்கு வார்டு மாநாடு, கட்சி ஆலோசனை கூட்டம் என்று பணிகள் நிறைய இருக்கிறது. சென்னையைத் தாண்டி எங்கள் தலைவரின் குரல் கிராமங்களில் ஒலிக்க இருக்கிறது. இந்த மக்கள் சந்திப்பை திருப்புமுனை சந்திப்பாக மாற்றி காட்டுவோம்' என்றனர்.

    • நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6000 கன அடியாக வந்தது.
    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    தருமபுரி:

    தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6000 கன அடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரத்து 500 கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நாடு முழுவதும் 11 கோடியே 92 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களாக பதிவு செய்துள்ளனர்.
    • ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 11 கோடியே 92 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களாக பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 88 லட்சத்து 16 ஆயிரத்து 448 பேர் உள்ளனர்.

    மேலும் இந்த தொழிலாளர்களுக்கு, அந்த மாநிலத்தின் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 2025-26-ம் நிதியாண்டிற்கான சம்பளத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி தமிழகத்தில் ஒரு நாள் சம்பளம் ரூ.319-ல் இருந்து ரூ.336 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ரூ.17 கூடியிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கடந்தாண்டு மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்காக ரூ.2,900 கோடி ஒதுக்கியது. அதில் சம்பளம் போக, பொருட்கள் வாங்கியதற்கு வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை நிலுவை வைத்து உள்ளது.

    அதேபோல பல்வேறு மாநிலங்களுக்கும் நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. ஆனால் விரைவில் இந்த தொகை விடுவிக்கப்பட உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தாண்டு தமிழகத்துக்கு முதல்கட்டமாக சம்பளத்திற்கு வழங்க வேண்டிய ரூ.920 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது என்பது குறிப்பிடக்கத்தக்கது.

    • டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.

    கோவை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2025 சீசனின் முதல் போட்டி கோவையில் இன்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

    பாலசுப்ரமணியன் சச்சின் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். ஆந்த்ரே சித்தார்த் 23 பந்தில் 25 ரன்களும், ஷாருக் கான் 14 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் அஸ்வின், சந்தீப் வாரியர், ஜி.பெரியசாமி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அஸ்வின் 15 ரன்னில் வெளியேறினார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அணியை கடைசி வரை நின்று வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஷிவம் சிங் 82 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    • பாமகவில் தற்போது இருப்பது உட்கட்சி பிரச்சனை.
    • சமாதானமாக அனைவரும் ஓர் அணியில் சேர்ந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும்.

    கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வேல்முருகன் கொச்சையாக பேசினார் என்றால் அது அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். யாரும் யாரையும் தரைக்குறைவாக பேசக்கூடாது.

    பாமகவில் தற்போது இருப்பது உட்கட்சி பிரச்சனை. அப்பா- மகன் இடையேயான அவர்களது சொந்த பிரச்சனை. அது குறித்து பேசுவது நாகரீகமாக இருக்காது. அவர்கள் பேசிக் தீர்த்துக் கொள்வார்கள்.

    பாஜக ஆதரவாளர்கள், ஆர்எஸ்எஸ் சேர்ந்தவர்கள் சமரசம் செய்ய சென்றார்கள் என்றால் அது அவர்கள் தனிப்பட்ட முறையில் சென்றிருக்கிறார்கள். அதற்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை.

    சமாதானமாக அனைவரும் ஓர் அணியில் சேர்ந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களுடையே நோக்கமும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜூன் 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஒரு ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி இம்மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது. தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. வழக்கறிஞர் வில்சன், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் நாளை நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கோயிலை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (6-6-2025) விடுமுறை அறிவிப்பு.
    • விடுமுறைக்கு ஈடாக வரும் 21.08.2025 (சனிக்கிழமை கீழ்காணும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி அக்கோயிலை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (6-6-2025) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாவட்டம், புரசைவாக்கம் கட்டம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அ/மி கங்காதரேசுலார் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாயின் ஒரு பகுதியாக வருகிற 00.06.25 / வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரண்டு திருத்தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது என்பதால், இத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு 06.06.2025 (நாளை) இக்கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கீழ்க்காணும் பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.

    இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.08.2025 (சனிக்கிழமை கீழ்காணும் பள்ளிகள் இயங்கும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டைத்தை ஒட்டி நாளை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் மட்டும் ‘ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் (1,21,00,000)’ மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • மண் மற்றும் நீரால் ஊட்டம் பெறும் அனைவரும் இந்த இயக்கத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும்.

    ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம், கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 1.36 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவர்களின் நிலங்களில் நடவு செய்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

    நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாட்டில் மட்டும் 'ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் (1,21,00,000)' மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதன் துவக்க விழா, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று (05-06-2025) ஓசூர், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

    இதனுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரச மரங்கள் நடப்பட்டன.

    இது தொடர்பாக சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முறையான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் மூலம் வளம் இழந்த நிலத்தை மீண்டும் வளமாக்க முடியும் என்பதை காவேரி கூக்குரல் இயக்கம் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. மண் மற்றும் நீரால் ஊட்டம் பெறும் அனைவரும் இந்த இயக்கத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

    இவ்வியக்கம் மூலம், கடந்த நிதி ஆண்டில் (2024 – 25) 34,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் 1.36 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 50,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஆண்டு இந்த சுற்றுச்சூழல் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் (2025 - 2026) தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் தொடக்க விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

    இது குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஆனந்த் எத்திராஜலு கூறுகையில், "UNFCCC இன் COP29 மற்றும் UNCCD இன் COP16 உச்சி மாநாடுகளில் நாங்கள் முன்நிறுத்திய முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, உலகளாவிய காலநிலை நிதியில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே விவசாயம் மற்றும் உணவு அமைப்புகளை அடைகிறது என்பதாகும்.

    காலநிலை மாற்றத்தை வளிமண்டலத்தில் சரிசெய்ய முடியாது. அதை மண்ணில் மட்டுமே சரிசெய்ய முடியும். மரம் சார்ந்த விவசாயம் மூலம் மண் புத்துயிர் பெறுவதற்கு அதிக கவனமும் முதலீடும் அவசியம், இது தான் உடனடியாக செய்யப்பட வேண்டியது. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்" எனக் கூறினார்.

    காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து வருகிறது. அதனுடன் கூடுதலாக பேரூர் ஆதீனத்துடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள 12,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 33,000-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அரச மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டு "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" என்ற திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் முதல்கட்டமாக கிருஷ்ணகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்தத் திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுத்தும் வகையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற பகுதிகளில் அரச மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்த மரம் நடும் விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" திட்டத்தின் மூலம் நடவு செய்த அரச மரக்கன்றுகள், அந்தந்த வட்டாரத்தை சேர்ந்த தன்னார்வலர் குழுக்களால் பராமரிக்கப்பட உள்ளன.

    காவேரி கூக்குரல் இயக்கம் 2024 ஆம் ஆண்டில், மரம் சார்ந்த விவசாயம் குறித்த மாநில அளவில் 2 பெரிய பயிற்சி நிகழ்ச்சிகளையும், மண்டல அளவில் 6 நிகழ்ச்சிகளையும் நடத்தியது. இதில் 8,721 விவசாயிகள் பங்கேற்றனர்.

    தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM), மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் மரம் சார்ந்த விவசாயம் குறித்து நுட்பங்களை விவசாயிகளுடன் பகிர்ந்தனர்.

    இவ்வியக்கம் மூலம் 2024 ஆம் ஆண்டில், உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5), வன மகோற்சவ வாரம் (ஜூலை 1-7), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), மற்றும் உலக மண் தினம் (டிசம்பர் 5) போன்ற முக்கிய நாட்களில், 506 மரம் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மொத்தம் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    ஈஷா நர்சரிகள் மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் குறைந்த விலையில் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன. இதற்காக கடலூரில் 85 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஒரு நர்சரியும், திருவண்ணாமலையில் 15 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஒரு நர்சரியும் இவ்வியக்கம் மூலம் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் தமிழ்நாட்டில் 40 விநியோக நர்சரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

    • கிரேக்கம், லத்தீன் மொழிகளைவிட தொன்மையானது தமிழ் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
    • கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தக் லைஃப் பட ப்ரோமோஷன் விழாவில் கமல் பேசும்போது "தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்" எனக் குறிப்பிட்டார்.

    இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளப்பியது. கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கமல் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும், கர்நாடகா மாநிலத்தில் தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்தார்.

    அப்போது அவர்," கமல் கூறிய கருத்தில் தவறில்லை" என்றார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழ் குறித்த கமல் கருத்தில் எந்த தவறும் இல்லை. தமிழில் இருந்து பிறந்ததுதான் சமஸ்கிருதம்.

    அதை 24,000 பேர்தான் பேசுகின்றனர். கிரேக்கம், லத்தீன் மொழிகளைவிட தொன்மையானது தமிழ் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குப்பைகளை விதிகளின்படி அகற்றுவதற்கு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
    • கடந்த 2 நாட்களில் மட்டும் 300 டன் அளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் நடந்த தூய்மை மிஷன் திட்ட ஆய்வுக் கூட்டத்தை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அரசு அலுவலகங்களில் முதற்கட்டமாக தொடங்கும் இத்திட்டம் படிப்படியாக வீடுதோறும் விரிவாக்கம் செய்யப்படும்.

    தூய்மை மிஷன் திட்டம் அடுத்தகட்டமாக அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்தப்படும்

    அனைத்து மாவட்டங்களிலும் தூய்மைப் பணிகளை கண்காணிக்க சென்னையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.

    குப்பைகளை விதிகளின்படி அகற்றுவதற்கு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த 2 நாட்களில் மட்டும் 300 டன் அளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டை தூய்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மறுசுழற்சிக்காக தனித்தனியாக குப்பைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது.
    • மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

    சேலத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. இங்குள்ள கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. அவர் பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.

    இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி,

    12ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், ஜே.இ.இ. நுழைவு தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து,

    ஐ.ஐ.டியில்-ல் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன்.

    மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    தனது தந்தையாரை கடந்த 2024-ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது. கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

    அவரது பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, மாணவி ராஜேஸ்வரியின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், மாணவி ராஜேஸ்வரிக்கான படிப்பு செலவுகளை அதிமுக கட்சியே ஏற்கும்.

    • மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.
    • ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார்.

    ராஜேஸ்வரி பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.

    இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார்.

    இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில், மாணவி ராஜேஸ்வரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் #Salute!

    அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

    ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் #IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது #DravidianModel அரசு தொடர்ந்து உழைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×