என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக வெற்றிக்கழகத்தினர் கூறிய சதி குற்றச்சாட்டுக்கு விடை தேட உள்ளனர்.
- சி.பி.ஐ. விசாரணை குழுவில் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து 6 சி.பி.ஐ. அதிகாரிகள் வந்து இணைந்துள்ளனர்.
கரூர்:
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. குஜராத் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான குழுவினர் கரூர் பயணியர் மாளிகையில் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கரூர் திரும்பினர். அதைத்தொடர்ந்து மீண்டும் சி.பி.ஐ. விசாரணை சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சில தினங்களுக்கு முன்பு கரூர் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடந்தபோது, அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்கள் மூலமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அவர்களை கரூர் பயணியர் மாளிகைக்கு வரவழைத்து இன்று விசாரணை மேற்கொள்கின்றனர்.
இதில் நெரிசலுக்கான காரணம் குறித்து துப்பு துலக்குகிறார்கள். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தினர் கூறிய சதி குற்றச்சாட்டுக்கும் விடை தேட உள்ளனர்.
முன்னதாக வழக்கு பதிவு செய்த கரூர் நகர ஆய்வாளர் மணிவண்ணனிடம் நேற்று முதல்கட்ட விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், வழக்கின் முகாந்திரம் என்ன? என்ன மாதிரியான விசாரணை மற்றும் தகவல் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது?
முதல் கட்டமாக யாராரிடம் விசாரணை நடத்தப்பட்டது? அதில் பெறப்பட்ட தகவல் என்ன? கூட்டத்திற்குள் சென்ற முதல் ஆம்புலன்ஸ் வாகனம் எது? எந்த தகவல் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சென்றார்? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தவெக நிர்வாகிகள், சி.பி.ஐ.யில் வழக்கு தொடர்ந்த பிரபாகரன் ஆகியோரிடம் என அடுத்தடுத்து பலர் விசாரணைக்கு ஆஜர் ஆவார்கள் என தெரிய வருகிறது.
இந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணை குழுவில் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து 6 சி.பி.ஐ. அதிகாரிகள் வந்து இணைந்துள்ளனர். இதன் காரணமாக சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து விசாரணை மேலும் தீவிரமாகவும் என தெரிய வருகிறது.
- தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனையாகிறது.
- வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தங்கம் விலை ஏற்றம் கண்டு, கடந்த 18-ந்தேதியில் இருந்து விலை குறையத் தொடங்கியது. கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வரை சென்றது. தொடர்ந்து விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து மிரட்டியது.
தங்கம் விலை நேற்று குறைந்தது. காலை விலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் குறைந்த நிலையில், பின்னர் பிற்பகல் விலையில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
30-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400
29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600
28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600
27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600
26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
30-10-2025- ஒரு கிராம் ரூ.165
29-10-2025- ஒரு கிராம் ரூ.166
28-10-2025- ஒரு கிராம் ரூ.165
27-10-2025- ஒரு கிராம் ரூ.170
26-10-2025- ஒரு கிராம் ரூ.170
- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது.
- வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது.
வேலூர்:
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 3-ந்தேதி வேலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், கட்சியினர் சார்பிலும் செய்யப்பட்டு வருகிறது.
அவர் 4-ந் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக அங்கு விழா மேடை அமைப்பது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் கடலுக்கு செல்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள ஆறுகளை புனரமைக்க பூகோலப்படி, சாத்தியமா என ஆய்வு செய்கிறோம். அவ்வாறு ஆய்வுக்கு பின்னர் நிதி வசதி இருந்தால் செய்யலாம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது. இது ஆபத்து தான்.
ஒரே இடத்தில் 700 இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றால், அவர்களை வாக்காளர் சிறப்பு திருத்தத்தில் நீக்கிவிட்டு அவர்களின் பெயரை சேர்த்து விடுவார்கள்.
வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது. அதுதான் பிரச்சனையே. ஆண்டாண்டு காலமாக இங்கிருந்து வாக்களிப்பவர்களை இல்லையென்று ஆக்கிவிடுவார்கள்.
எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 14 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி 9 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- சென்னை சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (12839), வழக்கமான நேரத்தைவிட 55 நிமிடம் தாமதமாக சென்டிரல் வந்தடையும்.
- வழக்கமான நேரத்தைவிட 50 நிமிடம் தாமதமாக கோவை வந்தடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* வருகிற நவம்பர் 15-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து கா்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12292), இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு (25 நிமிடம் தாமதம்) செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடமும், சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 3,5,8,12,13,15 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வழக்கமான நேரத்தைவிட 30 நிமிடமும் தாமதமாக மதுரை சென்றடையும்.
நாகர்கோவில்-காச்சிகுடா
* நாகர்கோவிலில் இருந்த வருகிற நவம்பர் 8,15 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16354), வழக்கமான நேரத்தைவிட 3 மணி நேரம் தாமதமாக காச்சிகுடா சென்றடையும்.
* மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து வருகிற நவம்பர் 12-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (12839), வழக்கமான நேரத்தைவிட 55 நிமிடம் தாமதமாக சென்டிரல் வந்தடையும்.
* அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து வருகிற நவம்பர் 11-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12516), வழக்கமான நேரத்தைவிட 50 நிமிடம் தாமதமாக கோவை வந்தடையும்.
* சண்டிகாரில் இருந்து வருகிற நவம்பர் 5-ந்தேதி காலை 8.05 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20494), வழக்கமான நேரத்தைவிட 40 நிமிடம் தாமதமாக மதுரை வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சென்னை:
தமிழகத்தில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கு விற்பனையானது.
- சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியது.
கடந்த 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சவரனுக்கு ரூ.9 ஆயிரம் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து குறைந்துவந்த தங்கம் விலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேற்று மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.88 ஆயிரத்து 600-க்கும் விற்பனையான நிலையில், நேற்று காலை மற்றும் பிற்பகல் 2 வேளைகளில் விலை உயர்ந்து இருந்தது.
காலையில் சவரனுக்கு ரூ.1,080-ம், பிற்பகலில் சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்து காணப்பட்டது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்தை தாண்டியது.
இதனையடுத்து இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் மாலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 11, 300-க்கும், சவரன் 1600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,400-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை ஏறுமா, இறங்குமா, தங்கம் வாங்கலாமா வேண்டாமா என நடுத்தர மக்களை இந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600
28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600
27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600
26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
25-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-10-2025- ஒரு கிராம் ரூ.166
28-10-2025- ஒரு கிராம் ரூ.165
27-10-2025- ஒரு கிராம் ரூ.170
26-10-2025- ஒரு கிராம் ரூ.170
25-10-2025- ஒரு கிராம் ரூ.170
- முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? என்றார் அண்ணாமலை.
- தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் UDISE+ அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு.
2020-21ல் தொடக்கப்பள்ளிகளில் 0.6 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் இன்று 2024-25ல் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதுபோல, உயர்நிலைப் பள்ளிகளில் 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் மும்மொழிக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள், ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் எங்கும் நடைபெறாத மாணவர்களிடையேயான ஜாதிய மோதல்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடக்கின்றன.
கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, பல மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், கட்டிடமே இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்துவதும், திமுக கட்சிக்காரர்கள் கட்டும் தரமற்ற பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், அரசுப் பள்ளிகளை அவல நிலையில் தள்ளியிருக்கின்றன. இது தவிர, முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது. மேலும், தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.
இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 2.39 லட்சமாக இருக்கையில், தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக, 5.26 லட்சம் மாணவர்கள் சேர்கின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை நிலைமை இப்படி இருக்க, வீண் விளம்பரம் செய்து, தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி ஒன்றாகி இணைய முடியும்.
- எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் துரோகிகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.
மதுரை மாவட்டம் கப்பலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் கூட்டாக இணைந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இபிஎஸ் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
துரோகிகளாகல் தான் கடந்த தேர்தலில் அதிமுகவால் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது. கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி ஒன்றாகி இணைய முடியும்.
எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் துரோகிகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரும் திமுகவின் பி டீம்.
பயிர் வளர வேண்டும் என்றால் களை எடுக்க வேண்டும். கட்சியில் உள்ள களைகள் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வந்து ஆட்சியை கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம்
- போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை
ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. உயர்நீதிமன்ற ஆணைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து உள்ள வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், www.tnepass.tngov.in என்ற இணையதளத்தில் வால்பாறைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் சோதனை சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் இதனை கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வால்பாறைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
- சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியுள்ளதில் இருந்து இனப்பெருக்கமாகி ஏ.டி.எஸ் கொசு இந்த வைரசை பரப்பி வருகிறது.
- டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் கணிசமாக பல இடங்களில் கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 9 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வருகின்றன.
சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியுள்ளதில் இருந்து இனப்பெருக்கமாகி ஏ.டி.எஸ் கொசு இந்த வைரசை பரப்பி வருகிறது. இந்த கொசுக்களின் பெருக்கத்தை தடுப்பதற்கு நீர் தேங்காமலும் அதில் இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு முழுமையான விழிப்பு ணர்வை அளித்தும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளை மக்கள் உதவியுடன் சுத்தம் செய்ய உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சி, மாநகராட்சி துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கடுமையான அறிகுறிகள் ஏற்படாத வண்ணம் முறையான மருத்துவ சிகிச்சையை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களும், பொது சுகாதார நிலையமும், மருத்துவ கல்லூரிகளும் முழுவீச்சுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






