என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறைக்கும் இ-பாஸ் கட்டாயம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
    X

    ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறைக்கும் இ-பாஸ் கட்டாயம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

    • வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம்
    • போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை

    ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. உயர்நீதிமன்ற ஆணைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து உள்ள வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், www.tnepass.tngov.in என்ற இணையதளத்தில் வால்பாறைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் சோதனை சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் இதனை கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வால்பாறைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

    Next Story
    ×