search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மிருதி இரானி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்மிருதி இரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாட வாழ்க்கையில் புதுப்பிப்புகளை அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.
    • வீடியோவில் ஸ்மிருதி இரானி சேலை அணிந்து நின்று கொண்டு ஸ்டிரைக்கரை கவனமாக விளையாடுவது தெரிகிறது.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கேரம் விளையாடும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ஒரு நகைச்சுவையான தலைப்பையும் சேர்த்துள்ளார். அதாவது 'அமைதியாக இருங்கள் மற்றும் கேரம்' விளையாடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் ஸ்மிருதி இரானி சேலை அணிந்து நின்று கொண்டு ஸ்டிரைக்கரை கவனமாக விளையாடுவது தெரிகிறது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    ஏற்கனவே ஸ்மிருதி இரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாட வாழ்க்கையில் புதுப்பிப்புகளை அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.

    அந்த வகையில் சமீபத்தில் அவர் காசி சென்றிருந்த போது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார்.

    • அதானி குழும விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் 2 நாட்களாக பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
    • பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி இடையூறு செய்து வருகிறது என மத்திய மந்திரி தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி நிறுவனங்கள் விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து 2 நாட்களாக சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. எந்த அலுவலும் நடைபெறவில்லை.

    இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    எந்தவொரு விவாதத்துக்கும் தயார் என்று அரசு மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் அதைத் தொடங்க ஏன் அவர்கள் (காங்கிரஸ்) அனுமதிக்கக் கூடாது?

    எதிர்க்கட்சி எப்போதுமே ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளது என்பது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கும் உரையை மட்டுமல்ல, நமது தற்போதைய வளத்தையும் காட்டும் உரையை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றி இருக்கிறார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

    அந்த மதிப்பை ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சி ஏன் தர மறுக்கிறது? ஆனால் ஜனாதிபதி பதவியேற்ற நாள் முதல் அவர்கள் அவருக்கு அளிக்கும் மரியாதையை மறுப்பதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்மீது அவர்கள் கொண்டுள்ள பகைமையின் பிரதிபலிப்புதான் இது. பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்கிறார்கள் என தெரிவித்தார்.

    • 1875-ம் ஆண்டு இயற்றப்பட்ட முதிர்ச்சி சட்டம், 1999-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.
    • கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மாநிலங்களவையில், "ஒருமித்து ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து (செக்ஸ்) உறவு கொள்வதற்கான வயது 18 என்பதை 16 ஆக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா?" என கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்த கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இல்லை என அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

    அந்த பதிலில் அவர் கூறி இருப்பதாவது:-

    கருத்தொருமித்து ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து (செக்ஸ்) உறவு கொள்வதற்கான வயது 18 என்பதை 16 ஆக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்ற கேள்விக்கே இடம் இல்லை.

    போக்சோ சட்டம், 2012, குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காகத்தான் இயற்றப்பட்டது. இந்த சட்டம், 18 வயதுக்கு கீழே உள்ள எந்த நபரையும் குழந்தை என்றுதான் வரையறை செய்துள்ளது.

    குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களை செய்வோருக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கவும், குழந்தைகள் மீதான இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் 2019-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

    ஆனால் குழந்தையால் குற்றம் செய்யப்பட்டால் போக்சோ சட்டத்தின் பிரிவு 34, குழந்தையால் குற்றம் செய்யப்படுவது மற்றும் சிறப்பு கோர்ட்டால் வயதை நிர்ணயம் செய்வதற்கான நடைமுறையை வழங்குகிறது.

    ஒரு நபர் குழந்தையா, இல்லையா என்கிற கேள்வி, சிறப்பு கோர்ட்டில் எழுந்தால், அந்த நபரின் வயது தொடர்பாக திருப்தி அடைந்து, சிறப்பு கோர்ட்டே தீர்மானிக்கலாம். அப்படி தீர்மானிக்கிறபோது அதற்கான காரணங்களை கோர்ட்டு பதிவு செய்ய வேண்டும்.

    1875-ம் ஆண்டு இயற்றப்பட்ட முதிர்ச்சி சட்டம், 1999-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இது முதிர்ச்சி அடைவதற்கான வயது 18 என்று கூறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பால்ய விவாகம் என்று அழைக்கப்படுகிற குழந்தை திருமணம் பற்றிய மற்றொரு கேள்விக்கும் மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்து வடிவில் பதில் அளித்துள்ளார்.

    அதில் அவர், "தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள், கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என காட்டுகின்றன. ஆனால் இது குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை, இது தொடர்பான அதிகரித்த விழிப்புணர்வு காரணமாக இந்தளவுக்கு குழந்தைகள் திருமணங்கள் நடந்திருப்பது புகார் செய்யப்பட்டு இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு 523 குழந்தை திருமணங்களும், 2020-ல் 785 குழந்தை திருமணங்களும், 2021-ம் ஆண்டு 1,050 குழந்தை திருமணங்களும் நடந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

    • வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.
    • 2021-22-ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற மாநிலங்கள் அவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஸ்மிருதி சுபின் இரானி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: 


    வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் வாயிலாக ஷகாரி வக்பு விகாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள வக்பு நிலங்களில், வர்த்தக வளாகங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், குளிர்பதனக் கிடங்குகள் உள்ளிட்டவற்றை அமைக்க வக்பு நிறுவனங்கள், வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.

    அதன்படி 2020-2021 ஆண்டில் ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டில் ரூ.ஒரு கோடி நிதி அளிக்கப் பட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த, மிகவும் பின்தங்கியோர், சிறுபான்மையினர் உட்பட அனைத்துப்பிரிவினரின் நலன் மற்றும் வாழ்வாதார உயர்வுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குழந்தைகளின் எடை குறைவு பாதிப்பு 35.8 சதவீதத்தில் இருந்து 32.1 சதவீதமாக குறைந்துள்ளது
    • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 49.7 சதவீதத்தில் இருந்து 41.9 சதவீதமாகவும் குறைந்துள்ளது

    புதுடெல்லி:

    ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்பு இல்லை என்றும்,

    2015-16 மற்றும் 2019-21க்கு இடையில் குழந்தைகளின் எடை குறைவு பாதிப்பு 35.8 சதவீதத்தில் இருந்து 32.1 சதவீதமாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 49.7 சதவீதத்தில் இருந்து 41.9 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்றும் ஸ்மிருதி இரானி பேசினார்.

    மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, ஆள் கடத்தல் (பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா என்பது அடிமட்ட உண்மை நிலவரம் மற்றும் தேவைகளுக்கு முறையாகப் பதிலளிக்கும் நோக்கத்துடன் மறு வரைவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

    • காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க தீர்மானம் போட்டவர்களுடன் பாத யாத்திரை செல்கிறார்.
    • சிதைந்து போன இந்தியாவைக் காண விரும்புவோரை ஆதரிக்கிறார்.

    சிம்லா:

    சட்டசபைத் தேர்தலையொட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முந்தைய மக்களவைத் தேர்தலில் தனது கோட்டையான அமேதியில் தோல்வியடைந்தார், ஆனால் கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் எங்கு சென்றாலும், அங்கு நிலைமை என்ன? காங்கிரஸ் தொடர்ந்த தேர்தலில் தோல்வியை சந்தித்து வருகிறது.

    நாட்டை விமர்சித்தவர்களுடன் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் மாடுகளை அறுத்து புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்களுடன் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார்.

    காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்களுடன் அவர்கள் யாத்திரை நடத்தினார்கள். சிதைந்து போன இந்தியாவைக் காண விரும்புவோரை உங்கள் தலைவர் ஆதரிக்கும் போது, ​​உங்கள் (காங்கிரசார்) ரத்தம் கொதிக்காதா, உங்கள் தலைவர் பசுவைக் கொல்பவர்களின் முதுகில் தட்டும்போது, ​​உங்கள் ரத்தம் கொதிக்காதா?

    ஒருபுறம் தங்கள் தேசத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்பவர்களுக்கும், மறுபுறம், தங்கள் நாட்டை அவமானப்படுத்துபவர்களுக்கும், சிதைந்த இந்தியாவைக் காண விரும்புவோரை ஆதரிப்பவர்களுக்கும் இடையேதான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கோவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ரூ.1300 கோடி பட்ஜெட் செலவில் திறன் மேம்பாடு கிடைத்தது என்றார்.

    மங்கலம் :

    கோவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஜவுளி தொழில் அமைப்புகள் ,சைமா,மற்றும் பல்வேறு வர்த்தக அமைப்பினர் சார்பில் ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கைககளுக்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது .

    விழாவிற்கு தலைமை வகித்து பேசிய இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ,அமைச்சர் ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரின் முயற்சியால் ஜவுளித்துறையில் ரூ.1300 கோடி பட்ஜெட் செலவில் திறன் மேம்பாடு கிடைத்தது என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் செயலாளர் இரா.வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன்,அமைப்புச்செயலாளர் பா. கந்தவேல், தலைமை ஆலோசகர்வி.டி.கருணாநிதி,தொழில்நுட்ப ஆலோசகர் ஆர். சிவலிங்கம், பல்லடம் விசைத்தறி சங்க துணைச் செயலாளர் பாலாஜி, கண்ணம்பாளையம் விசைத்தறி சங்க செயலாளர் செல்வகுமார்,மங்கலம் விசைத்தறி சங்க செயலாளர் பழனிச்சாமி, மங்கலம் விசைத்தறி சங்க துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர். கோபால் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டனர். 

    • கோவாவில் செயல்பட்டு வரும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி குடும்பத்தினரால் நடத்தப்படும் உணவகம் சர்ச்சையில் சிக்கியது.
    • தனது மகள் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்தி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஸ்மிருதி இரானி மறுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    கோவாவின் அசகாவோவில் செயல்பட்டு வரும் சில்லி சோல்ஸ் கஃபே மற்றும் பார் என்பது மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் குடும்பத்தினரால் நடத்தப்படும் உணவகமாகும். இதை ஸ்மிருதியின் மகள் ஜோயிஷ் இரானி இயக்குவதாக கூறப்படுகிறது.

    இந்த உணவகம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இறந்தவரின் பெயரிலேயே அந்த உணவகத்திற்கான குடி உரிமை பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

    கோவா மாநில கலால் வரி விதிகளின்படி ஏற்கனவே உள்ள உணவகம் மட்டுமே மதுபானம் அல்லது பார் உரிமம் பெறமுடியும். ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட சில்லி சோல்ஸ் கஃபே இன்னும் உணவக உரிமம் பெறவில்லை. அதில் மதுக்கடை நடத்தப்படுகிறது. அந்த உணவகத்தின் மதுபான உரிமம் ஆண்டனி டிகாமாவின் பெயரில் உள்ளது. மேலும் கடந்த மாதம் தான் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்தோனி டிகாமா என்ற உரிமத்தில் பெயரிடப்பட்ட நபர் மே 2021-ல் காலமானார். இந்த அந்தோணி திகாமா மும்பையின் வைல் பார்லேயில் வசிப்பவர். மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அவரது மரணத்தை உறுதி செய்து இறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது.

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ரோட்ரிக்ஸ் இந்த மோசடியை அம்பலப்படுத்தினார்.

    மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் குடும்பத்தினர், தொழில்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்துகளுடன் கலந்தாலோசித்து மெகா மோசடி குறித்து முழுமையான விசாரணை கோரி வழக்கறிஞர் ரோட்ரிக்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதி வர உள்ளது.

    இந்த சர்ச்சையை வழக்கறிஞர் ரோட்ரிக்ஸ் வெளிப்படுத்தியுள்ள போதிலும், கோவா அரசின் கலைத்துறை அந்த உணவகத்திற்கு நிகழ்ச்சி குறித்த செய்தியை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இது காங்கிரஸ் தலைமையின் தூண்டுதலின் படி செய்யப்படுகிறது. எனது மகள் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு தவறானது. அவரது குணத்தை படுகொலை செய்வது மட்டுமல்லாமல், என்னை அரசியல் ரீதியாக கேவலப்படுத்தும் செயல் ஆகும் என தெரிவித்தார்.

    மேலும், தனது 18 வயது மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்தி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ள ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தோண்டர்கள் போஒராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் காந்தி குடும்பத்தினர் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையில் ஆர்வம் காட்டுவது ஏன் என ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.

    புது டெல்லி:

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைக்கேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து அந்த அலுவலகத்தின் முன்பு ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் குவிந்தனர். ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், திக்விஜய சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், கவுரவ் கோகோய், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றார் இதனையடுத்து தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிரான தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தி விசாரணை அலுவலகத்திற்குச் சென்றார்.

    இதையடுத்து ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவங்கள் குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை மந்திரி ஸ்மிருதி இராணி கருத்து தெரிவித்துள்ளார்.

    ஸ்மிருதி இரானி கூறியதாவது:-

    நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாகவே ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார். இது தனிப்பட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையெல்லாம் இல்லை. காங்கிரஸ் தலைவா்களின் ஊழல் அம்பலமாகி விட்டதால், தற்போது அமலாக்கத்துறைக்கு அழுத்தம் கொடுக்க தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது காந்தி குடும்பத்தின் ரூ.2000 கோடி மதிப்பிலான சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியாகும். இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் காந்தி குடும்பத்தினர் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையில் ஆர்வம் காட்டுவது ஏன் என்பதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

    ×