search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேண்டும்"

    • தாளவாடி அருகே வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து கொன்றது.
    • மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தாளவாடி வனச் சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரசுவாமி (49)இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார் வழக்கம் போல் மாடுகளை அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார் நேற்று மதியம் மாடுகளை அழைத்தை வர சென்ற போது ஓரு பசு மாடு இறந்துகிடந்தது மாடு இறந்துகிடந்த இடம் கர்நாடக வனப்பகுக்கு உட்பட்டது.

    இதுபற்றி தாளவாடி வனத்துறை மற்றும் கர்நாடக வனத்துறைக்கு தகவல் அளித்தார் சம்பவயி–டத்திக்கு வந்த வனத்துறை இறந்த மாட்டை ஆய்வு செய்தனர் புலி தாக்கி பசு மாடு இறந்தது தெரியவந்தது.

    இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக கால்நடை வளர்போர் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-

    கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்றனர்.

    • கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    ஈரோடு:

    கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சபையின் 2021 -2022-ம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுகள் நிதிஅறிக்கை ஏற்றுக்கொள்ள பட்டுள்ளது.

    கீழ்பவானி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது ஆனால் தொடர்ந்து நடைபெற வில்லை. இதனால் கீழ்பவானி ஊஞ்சலூர் பகிர்மான கால்வாயில் பாசனம் பெறும் எம் 8 ஏ பாசன சபையிலுள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

    எனவே சீரமைப்பு வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையையே பாதுகாக்கும் வகையில் வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி சிவகிரியில் கீழ்பவானி ஆயக்கட்டு உரிமை பாதுகாப்பு நடைபெறும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற வேண்டும் என தண்டோரா மூலம் நகராட்சி அறிவிப்பு விடுத்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் 600 பஸ்கள் சென்று வருகின்றன. சேலம், கடலூர், திருச்சி, விழுப்புரம், சென்னை, மதுரை, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர், திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் பயணிகள் அமர்வதற்கு இடம் இருக்காது.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் பயணிகள் நிழலுக்கு நிற்பதற்கு கூட இடமில்லாமல் கடை உரிமையாளர்கள் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு வந்த புகாரின் பேரில் ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாஜலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். நகராட்சி குத்தகைதாரர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது கடைகளை உடனே அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குத்தகை உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வழங்கி தண்டோரா மூலம் நகராட்சி ஊழியர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

    • கொடுமுடி அருகே இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மேலும் பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே சுள்ளிமடை பகுதியில் இருந்து குதிரைக்கல் மேடு பகுதி வரை கீழ்பவானி வாய்க்கால் செல்கின்றது. இந்த வாய்க்காலில் சுமார் 12 அடியில் ஒரு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தான் விவசாய நிலங்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சென்று பாசனம் செய்து வந்தார்கள்.

    மேலும் பள்ளக்காட்டூர், வெட்டுக்காட்டூர், ராசா ம்பாளையம், பழனியாண்ட வர் கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாய நிலத்துக்கு செல்பவர்கள் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் பயன்படுத்தி வந்த பாலத்தின் அடியில் தண்ணீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டது. இதனை தெடர்ந்து பொதுப்பணித் துறை ஊழியர்கள் பாலத்தை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு இடித்து அடைப்பை எடுத்து சரி செய்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்தனர்.

    இடிக்கப்பட்ட பாலத்தை மீண்டும் கட்டித் தர இப்பகுதி மக்களும், விவசாயிகளும் பல முறை தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதுவரை இந்த பாலம் கட்ட எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பொது மக்களும், விவசாயிகளும் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.

    இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகிறார்கள். எனவே உடனடியாக இடிக்கப்பட்ட பாலத்தை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வைத்து உள்ளனர்.

    மேலும் பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ×