அட்டகாசம் செய்யும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

தாளவாடி அருகே வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து கொன்றது.மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அட்டகாசம் செய்யும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
Published on

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தாளவாடி வனச் சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்தநிலையில் கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரசுவாமி (49)இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார் வழக்கம் போல் மாடுகளை அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார் நேற்று மதியம் மாடுகளை அழைத்தை வர சென்ற போது ஓரு பசு மாடு இறந்துகிடந்தது மாடு இறந்துகிடந்த இடம் கர்நாடக வனப்பகுக்கு உட்பட்டது.

இதுபற்றி தாளவாடி வனத்துறை மற்றும் கர்நாடக வனத்துறைக்கு தகவல் அளித்தார் சம்பவயி–டத்திக்கு வந்த வனத்துறை இறந்த மாட்டை ஆய்வு செய்தனர் புலி தாக்கி பசு மாடு இறந்தது தெரியவந்தது.

இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக கால்நடை வளர்போர் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-

கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com