என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற வேண்டும்
    X

    ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி நகராட்சி ஊழியர்கள் தண்டோரா மூலம்அறிவித்த காட்சி.

    ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற வேண்டும்

    ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற வேண்டும் என தண்டோரா மூலம் நகராட்சி அறிவிப்பு விடுத்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் 600 பஸ்கள் சென்று வருகின்றன. சேலம், கடலூர், திருச்சி, விழுப்புரம், சென்னை, மதுரை, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர், திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் பயணிகள் அமர்வதற்கு இடம் இருக்காது.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் பயணிகள் நிழலுக்கு நிற்பதற்கு கூட இடமில்லாமல் கடை உரிமையாளர்கள் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு வந்த புகாரின் பேரில் ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாஜலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். நகராட்சி குத்தகைதாரர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது கடைகளை உடனே அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குத்தகை உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வழங்கி தண்டோரா மூலம் நகராட்சி ஊழியர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×