search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி பலி"

    • விவசாயி சரவணன் இடது குதிகாலில் ஒரு பாம்பு கடித்தது
    • சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்

    ஈரோடு மாவட்டம் சிவகிரி குமாரவலசு அருகே உள்ள் ஒரு கரும்புத் தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சரவணன் (வயது 56) என்பவர் தண்ணீர்பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அவரது இடது குதிகாலில் ஒரு பாம்பு கடித்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு வந்து மனைவியிடம் கூறியுள்ளார்,

    இதையடுத்து அவர் உறவினரின் காரின் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சரவணனை கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்ட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

    • சுவரின் அருகே நின்று ஆடுகளை கட்டிக்கொண்டிருந்த தங்கவேல் மீது கற்கள் சரிந்து விழுந்தது.
    • தகவல் அறிந்து அங்கு பனவடலிசத்திரம் போலீசார் விரைந்து சென்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள ஆவுடையாள்புரம் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 70). விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள்(65).

    தங்கவேல் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று மாலை கணவன்-மனைவி 2 பேரும் வீட்டின் பின்புறம் தொழுவத்தில் ஆடுகளை கட்டிக்கொண்டிருந்தனர். அப்போது பயங்கரமாக இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது. இதில் தொழுவத்தில் மின்னல் தாக்கியதில், ஹாலோ பிளாக் கற்கள் சரிந்து விழுந்தது.

    அந்த நேரத்தில் சுவரின் அருகே நின்று ஆடுகளை கட்டிக்கொண்டிருந்த தங்கவேல் மீது கற்கள் சரிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தில் அவரது அருகே நின்று கொண்டிருந்த வள்ளியம்மாள் படுகாயம் அடைந்தார்.

    தகவல் அறிந்து அங்கு பனவடலிசத்திரம் போலீசார் விரைந்து சென்றனர். உயிரிழந்த தங்கவேல் உடலையும், படுகாயம் அடைந்த வள்ளியம்மாளையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிந்தன் (வயது 40),விவசாயி. இவர் பொன்னன் என்பவரது வயலில் வேலை செய்து வந்தார்.
    • டிராக்டர் மேடான பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பட்டை இழந்து ஓடி கவிழ்ந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ளது பெலாக்காடு. இந்த ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 40),விவசாயி. இவர் பொன்னன் என்பவரது வயலில் வேலை செய்து வந்தார். நேற்று கோவிந்தன் வயலில் இருந்து டிராக்டரை ஓட்டிக்கொண்டு பெலாக் காட்டிற்கு வந்து கொண்டி ருந்தார்.டிராக்டரில் பெலாக் காட்டைச் சேர்ந்த தொழிலா ளிகள் பழனிசாமி, இன்னொரு பழனிசாமி ஆகியோர் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். டிராக்டர் மேடான பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பட்டை இழந்து ஓடி கவிழ்ந்தது.

    இதில் கோவிந்தன் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். பலத்த காயம் அடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.டிராக்ட ரில் இருந்த கூலி தொழிலா ளர்கள் பழனிசாமி உள்ளிட்ட 2 பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பி னர். இதுபற்றி ஏற்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சேலம் ரூரல் டி.எஸ்.பி. தையல்நாயகி மற்றும் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியான விவசாயி கோவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

    • முத்துராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
    • ஆலங்குளம் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அருணாச்சலபேரி சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது47), விவசாயி.

    இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அதில் அவர் அகத்திக்கீரை பயிருட்டுள்ளார்.

    வனவிலங்குகள் இரவு நேரத்தில் புகாமல் இருப்பதற்காக தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்துள்ளார். வழக்கமாக இரவு நேரத்தில் மின்வேலியை ஆன் செய்து விட்டு பகலில் சென்று அதனை அணைப்பது வழக்கம்.

    அதன்படி இன்று காலை மின்வேலிக்கு செல்லும் மின்சாரத்தை துண்டிப்பதற்காக கனகராஜ் சென்றார். அப்போது மின்வேலி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியது.

    இதனால் அவர் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தில் இருந்த விவசாயி முத்துராஜ் (40) என்பவர் விரைந்து வந்து கனகராஜை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே முத்துராஜ் உடல் கருகி பலியானார். கனகராஜ் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று பலத்த காயம் அடைந்த கனகராஜை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து முத்துராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனவிலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
    • யானை தாக்கியதில் விவசாயி மற்றும் கன்றுகுட்டி பலியானது

    ஒட்டன்சத்திரம்:

    பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டுபன்றி, முயல், கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    பழனி அருகே சிந்தல வாடம்பட்டி, ராமபட்டி ணம்புதூரை சேர்ந்தவர் தண்டபாணி(52). இவர் தென்னந்தோப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலைபார்த்து வருகிறார். இந்தோட்டத்தில் திடீரென காட்டுயானை புகுந்து தண்டபாணியை தாக்கியதில் படுகாயமடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தண்டபாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து சத்திரபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தா.புதுக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது ேதாட்டத்தில் கன்றுகுட்டி கட்டப்பட்டி ருந்தது. வனப்பகுதியில் இருந்து வழி மாறி வந்த காட்டுயானை தோட்டத்தி ற்குள் புகுந்தது.

    அங்கிருந்த கன்று குட்டியை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அது பலியானது. தகவல் அறிந்து வந்த கால்நடை டாக்டர் கன்றுகுட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் தோட்டத்திலேயே உடல் புதைக்கப்பட்டது. காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடை ந்துள்ளனர்.

    எனவே வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை நட மாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பன்னீர்செல்வம். விவசாயி, மோட்டார் சைக்கிளில்மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதுஇவரும் சின்னையன் என்பவரும் தவறி கீழே விழுந்தனர்.
    • பின்னால் வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரி ழந்தார்,.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாயி. இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சிறுப்புலியூரை சேர்ந்தசின்னையன் என்பவருடன் சேமக் கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். திருவாமூர் பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது குண்டு ம்குழியுமான சாலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

    அப்போது பின்னால் வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயேஉடல் நசுங்கி பரிதாபமாக உயிரி ழந்தார். சின்னையன் படுகாயத்துடன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபோக்குவரத்தை சரி செய்துவிபத்தில் பலியான பன்னீர் செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • எதிர்பாரதவிதமாக தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
    • மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னச்சந்திரம் அருகேயுள்ள அவல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 50).

    விவசாயியான காளியப்பன் தனக்கு சொந்தமான மரத்தில் ஏறி புளியம்பழம் பறிக்க முயன்றார்.

    அப்போது எதிர்பாரதவிதமாக தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் எல்லப்பன் கொடுத்த புகாரின்பேரில் குருபரபள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தருமபுரி மாவட்டம் எச். கோபிநாதம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் (28) என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகேயுள்ள மல்லூரில் செல்போன் டவருக்கு குழிதோண்டும் பணியில் ஈடுபட்டார். குடிபோதையில் இருந்த சுரேஷ் அந்த குழிக்குள்ளேயே விழுந்து உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது தந்தை முனுசாமி தந்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்டு யானை இவரை விடாமல் துரத்தி வந்து தூக்கி வீசியது. இதில் ராதாகிருஷ்ணனின் நெஞ்சு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • சிறுமுகை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட உலியூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(58). விவசாயி.

    இவர் உலியூர் வனப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.

    அப்போது வனப்பகுதியில் புதர் மறைவில் இருந்த ஒற்றை யானை திடீரென ராதாகிருஷ்ணனை தாக்க முயற்சித்தது. யானை வருவதை பார்த்ததும் ராதாகிருஷ்ணன் திடீரென அங்கிருந்து அலறி அடித்து ஓடினார்.

    ஆனாலும் காட்டு யானை இவரை விடாமல் துரத்தி வந்து தூக்கி வீசியது. இதில் ராதாகிருஷ்ணனின் நெஞ்சு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காட்டு யானையை விரட்டினர். தொடர்ந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நாயனசெருவு ஊராட்சி பந்தூ ரான் வட்டத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 48), விவசாயி. இவரது மனைவி சுசிலா (35). நேற்று மாலை இருவரும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மல்லானூரில் உள்ள மருத் துவமனைக்கு சென்றனர்.

    தகரகுப்பம் அருகில் உள்ள வளை வில் சென்ற போது தொட்டிகிணறு பகுதியில் இருந்து நாட் றம்பள்ளி நோக்கி வந்த அரசு டவுன் பஸ் திடீரென மோட் டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சிவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுசிலா படுகா யம் அடைந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் சுசிலாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீசார் சம் பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அலகுமலை செல்லும் சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
    • அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த காளியப்ப கவுண்டர் என்பவரது மகன் சுப்பிரமணி (வயது 50). விவசாயி. இவர் சம்பவத்தன்று அலகுமலை செல்லும் சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மகாலட்சுமி(45) என்பவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கீழே விழுந்ததில் சுப்பிரமணிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. மகாலட்சுமிக்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மகாலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • விவசாய கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்த பூச்சிப்பாண்டி வழக்கம் போல் வயலுக்கு வேலைக்கு சென்றார்.
    • வழக்கமாக மதியம் சாப்பிட வீட்டுக்கு வர வேண்டியவர் வரவில்லை.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஆலங்கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி (வயது55), விவசாயி.

    இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதனால் பூச்சிப்பாண்டி தனது மனைவியுடன் வசித்து வந்தார். மேலும் விவசாய கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்த பூச்சிப்பாண்டி வழக்கம் போல் நேற்று வயலுக்கு வேலைக்கு சென்றார்.

    வழக்கமாக மதியம் சாப்பிட வீட்டுக்கு வர வேண்டியவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், மாலையில் அவர் வேலை பார்த்த விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பூச்சிப்பாண்டி மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பூச்சிப்பாண்டியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விவசாயி பூச்சிப்பாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வயலில் இருந்த மோட்டார் சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காட்டெருமைகள் வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் நீர் இல்லாமல் கிராமங்களை நோக்கியும், சாலைகளை நோக்கியும் வரும் சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
    • விவசாய நிலங்களை காட்டெருமைகள் அழித்து வருவது தொடர்கதையாக உள்ளது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூர் மலையாண்டி கோவில்பட்டியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 46). விவசாயியான இவர் இன்று காலை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்கு சாட்சி சொல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தனது ஊரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    தெத்தூர் மருதம்பட்டி சாலையில் தெத்தூர் நர்சரி கார்டன் அருகே சென்று கொண்டிருந்த போது, 7 காட்டெருமைகள் சாலையில் கூட்டமாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிவஞானம் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்த முயற்சித்தார்.

    இதற்கிடையே கூட்டத்தில் இருந்த ஒரு காட்டெருமை திடீரென்று பாய்ந்து வந்து சிவஞானத்தின் மார்பு பகுதியில் குத்தி சாய்த்தது. இதில் நிலைகுலைந்த அவர் அருகே உள்ள மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதினார். இதில் நெஞ்சு சிதைந்து சிவஞானம் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்தவர்கள் அவரை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

    பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துவரங்குறிச்சி, புத்தானத்தம், கண்ணூத்து, மருங்காபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகளில் அதிக அளவில் காட்டெருமைகள் வசித்து வருகின்றன.

    இந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் நீர் இல்லாமல் கிராமங்களை நோக்கியும், சாலைகளை நோக்கியும் வரும் சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. விவசாய நிலங்களை காட்டெருமைகள் அழித்து வருவது தொடர்கதையாக உள்ளது.

    இது ஒருபுறமிருக்க மணப்பாறை துவரங்குறிச்சி சாலையில் காவல்காரன்பட்டி, எதிர்மேடு உள்ளிட்ட பல இடங்களில் காட்டெருமைகள் குத்தி சிலர் படுகாயமடைந்து உள்ளனர். இதுபோன்ற நிலையில் காட்டெருமைகள் வனப்பகுதியை விட்டு வெளியில் வராமல் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆண்டுக்கணக்கில் கோரிக்கை விடுத்தும் அதற்கு தற்போது வரை தீர்வு காணப்படவில்லை.

    இந்தநிலையில் தான் காட்டெருமை முட்டி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் வனத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் வைக்கின்ற மிகப்பிரதான கோரிக்கை இந்த காட்டெருமைகள் விளை நிலங்களுக்குள் புகுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான்.

    ஆனால் கூட்டத்தை முடித்தால் போதும் என்ற நிலையில் இருக்கின்ற காரணத்தினால் தான் இப்படி காட்டெருமைகள் தொடர்ந்து வருவதும், உயிரிழப்பை சந்திக்க வேண்டிய துயர நிகழ்வும் ஏற்படுகிறது.

    தமிழக அரசும், வனத்துறை உயர் அதிகாரிகளும் காட்டு மாடுகள் விவசாய நிலங்கள் மற்றும் கிராம பகுதிக்குள் புகுவதை கட்டுப்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×