பண்ருட்டி அருகே கார் மோதி விவசாயி பலி

பன்னீர்செல்வம். விவசாயி, மோட்டார் சைக்கிளில்மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதுஇவரும் சின்னையன் என்பவரும் தவறி கீழே விழுந்தனர்.பின்னால் வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரி ழந்தார்,.
பண்ருட்டி அருகே   கார் மோதி விவசாயி பலி
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாயி. இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சிறுப்புலியூரை சேர்ந்தசின்னையன் என்பவருடன் சேமக் கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். திருவாமூர் பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது குண்டு ம்குழியுமான சாலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

அப்போது பின்னால் வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயேஉடல் நசுங்கி பரிதாபமாக உயிரி ழந்தார். சின்னையன் படுகாயத்துடன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபோக்குவரத்தை சரி செய்துவிபத்தில் பலியான பன்னீர் செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com