பனவடலிசத்திரத்தில் மின்னல் தாக்கி தொழுவம் இடிந்ததில் விவசாயி பலி

சுவரின் அருகே நின்று ஆடுகளை கட்டிக்கொண்டிருந்த தங்கவேல் மீது கற்கள் சரிந்து விழுந்தது. தகவல் அறிந்து அங்கு பனவடலிசத்திரம் போலீசார் விரைந்து சென்றனர்.
பனவடலிசத்திரத்தில் மின்னல் தாக்கி தொழுவம் இடிந்ததில் விவசாயி பலி
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள ஆவுடையாள்புரம் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 70). விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள்(65).

தங்கவேல் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று மாலை கணவன்-மனைவி 2 பேரும் வீட்டின் பின்புறம் தொழுவத்தில் ஆடுகளை கட்டிக்கொண்டிருந்தனர். அப்போது பயங்கரமாக இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது. இதில் தொழுவத்தில் மின்னல் தாக்கியதில், ஹாலோ பிளாக் கற்கள் சரிந்து விழுந்தது.

அந்த நேரத்தில் சுவரின் அருகே நின்று ஆடுகளை கட்டிக்கொண்டிருந்த தங்கவேல் மீது கற்கள் சரிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தில் அவரது அருகே நின்று கொண்டிருந்த வள்ளியம்மாள் படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்து அங்கு பனவடலிசத்திரம் போலீசார் விரைந்து சென்றனர். உயிரிழந்த தங்கவேல் உடலையும், படுகாயம் அடைந்த வள்ளியம்மாளையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com