search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளாத்திகுளம்"

    • மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாலதி மின்னல் தாக்கி உயிரிழந்தார்
    • தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (வயது 47) கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயப் பணியை முடித்துவிட்டு மார்த்தா ண்டம்பட்டி கிராமத்திற்கு இடையே பாலத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது.இதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் அறிந்த நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று மார்க்கண்ேடயன் எம்.எல்.ஏ. குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று உயிரிழந்த மாலதி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும் தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.

    குடும்பத்தார் தரப்பிலும் தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்கிட கோரிக்கை விடுத்தனர்.

    உயிரிழந்த மாலதிக்கு தங்கப்பிரகாஷ் (24) என்ற மகனும், தங்கமாரி (22), கன்னிகா (18) என்ற 2மகள்களும் உள்ளனர்.

    நிகழ்ச்சியில் கோவில் பட்டி வருவாய் கோட்டா ட்சியர் மகா லட்சுமி, விளா த்தி குளம் வட்டாட்சியர் சசிக்குமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் நகர செயலாளர்

    வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மார்த்தா ண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்து கரும்புலி, குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மழைநீர் தேங்கும் இடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.
    • வாறுகால் வசதியை மேம்படுத்துவது குறித்தும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் காமராஜ் நகர் 13-வது வார்டு 4-வது தெருவில் மழைநீர் தேங்கும் இடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு மழைநீர் செல்லுவதற்கு ஏதுவாக சாலை வசதியை மேம்படுத்தவும், வாறுகால் வசதியை மேம்படுத்தவும் ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி செண்பகராஜ், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், வார்டு செயலாளர் லெனின், சூரங்குடி கூட்டுறவு சங்க செயலர் ராமச்சந்திரன், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, வார்டு பிரதிநிதி இளையராஜா, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • குளத்தூரில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்தது.
    • விழாவில் பனைமரத்தில் விளையும் பொருட்களால் ஆன கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் குளத்தூரில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் பனைமரத்தில் விளையும் பொருட்களால் ஆன கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் நுங்கு, பண ஓலையினால் செய்யப்பட்ட கொழுக்கட்டை, என கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பொருட்கள் அனைத்துதரப்பினைரையும் கவர்ந்தது.

    இந்த நிகழ்வில் வட்ட வளர்ச்சி அலுவலர் தங்கவேல் குளத்தூர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, மாவட்ட குழு உறுப்பினர் மிக்கேல், நவமணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தூர் பாண்டியன், ராஜேந்திரன், ராஜ் மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பால்பாண்டி, ஒன்றிய அவைத் தலைவர் கெங்கு மணி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை மற்றும் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவா்களுக்கு செயல்விளக்கம் நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள், கேஸ் சிலிண்டர் இருக்கும் இடங்கள், கூரை வீடு, வைக்கோல் படப்புகள் ஆகிய இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது. அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பயிற்சியில் தலைமையாசிரியை ரோஸ்லின் சாந்தி, மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வேம்பார் கடற்கரையை தூய்மை செய்யும் பணியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
    • வேம்பார் காமராஜர் சிலையிலிருந்து கடலும் கடற்கரையும் நமது வளமும் பேரணி தொடங்கி கடற்கரையில் நிறைவுற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரையை தூய்மை செய்யும் பணியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள உலகளாவிய வளம்குன்றா வளர்ச்சிக்கான இலக்குகள் வாரத்தினை முன்னிட்டு விளாத்திகுளம் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சார்பாக புனித சார்லஸ் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகளோடு கதையாடுவோம் என்ற தலைப்பில் நீதிமணி, குழந்தைகளுக்கு கதைகள் மற்றும் குழந்தைகள் பாடல்களை வேடமிட்டு குழந்தைகள் மொழியில் பயிற்சியளித்தார். இந்நிகழ்வில் கரிசல் வட்டார எழுத்தாளர் செயப்பிரகாசம் கலந்து கொண்டார்.

    மேலும்,கடல் வளங்களை பாதுகாத்தலுக்காக வேம்பார் காமராஜர் சிலையிலிருந்து கடலும் கடற்கரையும் நமது வளமும் பேரணி தொடங்கி கடற்கரையில் நிறைவுற்றது. இதன் தொடக்க நிகழ்வில் வேம்பார் தெற்கு தோமையார் ஆலய பங்குதந்தை அந்தோணிதாசன், வேம்பார் தூய ஆவியர் ஆலய பங்குதந்தை ரோசன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.

    வேம்பு மக்கள் சக்தி இயக்க ஒருங்கிணைப்பாளர் செயசீலன் வரவேற்புரை யாற்றினார். இயக்குநர் அருட்பணி பரத்ஜெயராஜ் நோக்கவுரையாற்றினார். வேம்பார் ஊராட்சி தலைவர் ஆரோக்கியராஜ் கொடியசைத்து கடற்கரை சுத்தம் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.

    வாதலக்கரை, கோடங்கி பட்டி, சங்கரலிங்கபுரம், விளாத்திகுளம் வேம்பார் பீட்டர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கடற்கரையை சுத்தம் செய்தனர். இந்நிகழ்வில் விசை படகு மீனவர் சங்க தலைவர் அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1 கோடி மரங்கள் நடும் திட்டத்தில் முதற்கட்ட பணிகள் 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளன.
    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை எவ்வாறு பராமரிப்பது தொடர்பாக அறிவுரை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில்1 கோடி மரங்கள் நடும் திட்டத்தில் முதற்கட்ட பணிகள் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலும், மார்த்தாண்டம்பட்டி, வேலிடுபட்டி, கரிசல்குளம், தலைகாட்டுபுரம், ஆற்றங்கரை, எப்போதும்வென்றான், அயன் பொம்மையாபுரம், கீழ விளாத்திகுளம், காட்டுநாயக்கன்பட்டி, வில்வமரத்துபட்டி, பி.மீனாட்சிபுரம், ஆதனூர், கே.சுந்தரேஸ்வரபுரம், ராமச்சந்திராபுரம், டி.சண்முகபுரம், கமலாபுரம் உள்ளிட்ட 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளன. இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடந்தது. கூடுதல் ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை எவ்வாறு பராமரிப்பது தொடர்பாக அறிவுரை வழங்கினார். கூட்டத்தில், உதவி வன காப்பாளர் சக்திவேல், வனச்சரகர் கவின், வட்டாட்சியர்கள் சசிகுமார், கிருஷ்ணகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், சிவபாலன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், சந்தரவேல், வெங்கடாசலம், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகள் ராகவன், சந்திரசேகர், தி.மு.க . ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், நவநீதக்கண்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், நகர செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், மருதுபாண்டி, பேரூராட்சித் தலைவர்கள் ராமலட்சுமி, சூர்யா அய்யன்ராஜ், வனிதா அழகுராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணி நேற்று தொடங்கியது.
    • பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.27 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணியையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஜே.எஸ்.டபுள்யூ. நிறுவனம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணி நேற்று தொடங்கியது.

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணை தலைவர் வேலுச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல், ஜே.எஸ்.டபுள்யூ நிறுவனம் சார்பில் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.27 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    • கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி சமுதாய நலக்கூடம் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ரூ.72.30 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் வட்டம் எம்.சண்முகபுரம் ஊராட்சி வடக்குசெவலில், சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கினார். இதையடுத்து இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

    கனிமொழி எம்.பி. தலைமை வகித்து சமுதாய நலக்கூடம் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து, புதூர் ஊராட்சி ஒன்றியம் கவுண்டன் பட்டி, நாகலா புரம் ஆகிய இடங்களில் தலா ரூ.72.30 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கூடுதல் ஆட்சியர் சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் நாகலாபுரம், வேப்ப லோடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா ரூ.3.73 கோடியில் தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கு பூமி பூஜையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் அன்பு ராஜன், ராதாகிருஷ்ணன், செல்வ ராஜ், மும்மூர்த்தி, ராமசுப்பு, நவநீதகிருஷ்ணன், புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா அழகுராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரகனி காளிமுத்து, துணைத் தலைவர் அனிதா பரணி, ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் சத்யாநகர் பகுதியை சேர்ந்த மாரிச்சாமியின் வீட்டிற்குள் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது.
    • ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது வீட்டிற்குள் திடீரென 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடிக்க முயன்றபோது பாம்பு வீட்டுக்குள் இருந்த பீரோவுக்கு அடியில் சென்று மறைந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்தனர். பிடிபட்ட சாரைப்பாம்பை கொண்டு சென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்.

    • விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து இந்து முன்னணியினர் தேசியக்கொடி அணிவகுப்பு பேரணி சென்றனர்.
    • எட்டையாபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய விதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.

    விளாத்திகுளம்:

    75-வது சுதந்திர தின பவள விழா ஆண்டில் வீடுகள் மற்றும் வணிக வளங்களில் தேசியக்கொடி ஏந்தி சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் வைத்து இந்து முன்னணி மாநில செயலாளர் வி.பி ஜெயக்குமார் தேசியக்கொடி அணிவகுப்பு பேரணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் முக்கியசாலைகளான எட்டையாபுரம் சாலை, மதுரை சாலை, வணிக வளாக சாலை, காய்கறி மார்க்கெட் பகுதி வேம்பர் ரோடு உள்ளிட்ட முக்கிய விதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் சிவசுப்பையா, விஷ்வ இந்து பரிசத் ஒன்றிய தலைவர் ராம காளியப்பன், மாவட்ட பொது செயலாளர் சரவணன் கிருஷ்ணன், பிரச்சார அணி மாவட்ட செயலாளர் பெஞ்சமின் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வேல்முருகன், புதூர் ஒன்றிய பொதுச் செயலாளர் பழனி முருகன், ஒன்றிய பட்டியல் அணி தலைவர் எபினேசர், ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் ரமேஷ் ராஜா, ஒன்றிய விவசாய அணி துணை தலைவர் ராஜா, குருவார் பட்டி பாலமுருகன், மீனவர் அணி சுபாஷ் சந்திரபோஸ், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய பிரச்சார பிரிவு தலைவர் சோலை ராஜ், சிறுபான்மையினர் ஒன்றிய பிரிவு டேவிட், பள்ளிவாசல் பட்டி சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் லீலாவதி, ஒன்றிய பிரச்சார பிரிவு துணைத் தலைவர் ராஜ்குமார், நாகலாபுரம் காளிமுத்து தலைவர்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முத்துலாபுரம் வைப்பாற்று கரைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.
    • சீமை கருவேல மரங்களை அகற்றுவதன் மூலம் நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தடை இன்றி குடிநீர் கிடைக்கும் என்று எம்.எல்.ஏ. பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் வைப்பாறு மற்றும் ஆற்றுக்குள் அடர்ந்து வளர்ந்து இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி கடந்த மாதம் தொடங்கியது.

    இதில் 2-ம் கட்டமாக முத்துலாபுரம் வைப்பாற்று பாலத்தின் கிழக்குப் பகுதியில் இப்பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று 3-ம் கட்டமாக முத்துலாபுரம் வைப்பாற்று பாலத்தின் மேற்கு பகுதியில் இருந்து நென்மேனி வரையிலான ஆறு மற்றும் கரைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.

    இதற்கான தொடக்க விழாவில் மரங்கள் மக்கள் இயக்கம் இணை நிறுவனர் செல்வகுமார் வரவேற்று பேசினார்.நீர்வளத்துறை வைப்பாா் உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் ஸ்ரீராம், நீர்வளத்துறை வைப்பார் வடிநிலப்பிரிவு விளாத்திகுளம் உதவி பொறியாளர் நிவேதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் எம்.பி கனிமொழி தலைமையில் விரைவில் விளாத்திகுளம் தொகுதி முழுவதும் 25 லட்சம் பனை மர விதைகள் நடப்படும். விளாத்திகுளம் கண்மாயில் உள்ள 550 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக பொதுமக்களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறது.

    இதே போன்று ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள கண்மாய்களில் இருக்கின்ற சீமை கருவேல மரங்களை அகற்றுவதன் மூலம் நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தடை இன்றி குடிநீர் கிடைக்கும். ஒரு கோடி மரக்கன்று என்ற இலக்கை விரைவில் அடங்கி நாட்டிலேயே பசுமையான பகுதியாக விளாத்திகுளம் தொகுதி மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சிவபாலன், தங்கவேல், செல்வகுமார், டி.எஸ்.பி. பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வகுமார், மும்மூர்த்தி காசிவிஸ்வநாதன், சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மரங்கள் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராகவன், இணை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், பூசனூர் ஊராட்சி மன்ற தலைவர் சோலையம்மாள், மார்த்தாண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்கரும்புளி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் பயனாளிகளுக்கு இலவச பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வழங்கினார்.
    • வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு மக்களின் குறைகளை எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் சூரங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மேலும் வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் பயிறு, சிறு தானியங்கள், சிகப்பு கடல் பாசி, உரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, சூரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் ராமசுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தூர்பாண்டியன், மருதகனி சுப்பிரமணியன், வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், சூரங்குடி கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் ராமச்சந்திரன், தங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாரதிதாசன், தி.மு.க. சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட துறைசார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×