search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளாத்திகுளம்"

    • எட்டயபுரம் பாரதி ஆவண காப்பகம் சார்பில் பாரதி விழா நடந்தது.
    • விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விளாத்திகுளம்:

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் பாரதி மணிமண்டபம் வளாகத்தில் உள்ள பாரதி ஆவண காப்பகம் சார்பில் பாரதி விழா நடந்தது. விழாவிற்கு நாகர்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் ஸ்டீபன் தலைமை தாங்கினார்.

    மனோன்மணியம் சுந்தரனார் தமிழியல் துறை தலைவர் (பொறுப்பு) ஜாஸ்மின் சுதா வரவேற்று பேசினார். விழாவில் பாரதியும், சூழலிலும் என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் சமது பேசினார். விழாவில் பல்கலைக்கழக எல்கைகுட்பட்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக தமிழியல் துறை உதவி பேராசிரியர் ஜோதி முருகன் நன்றி கூறினார். இதில் உதவி பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
    • பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே ஜக்கம்மாள்புரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

    இந்நிலையில், அங்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில், ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அங்கு செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வந்து, பள்ளியில் 81 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பழைய நிலையில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

    அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும், வள்ளி நாயகிபுரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு எம்.எல்.ஏ. விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    தொடர்ந்து விளாத்திகுளம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வீரபாண்டியபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் அனைத்து துறைகள் பங்கேற்கும் சிறப்பு முகாமை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, முதல்-அமைச்சரின் மானாவாரி வேளாண்மை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2500 மதிப்பிலான நியூட்ரிசாப் பயிர் பூஸ்டர் டானிக் மற்றும் கம்பு செயல் விளக்கத்திடல் திட்ட பயனாளிகளுக்கு ஹெக் டருக்கு ரூ.6000 மதிப்பிலான இடுபொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பேசினார்.

    வேளாண்மை உழவர் நலத்துறை நலத்துறை சார்பில் கருத்து கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. முகாமில் விவசாயிகளிடம் தேவை குறித்த மனு பெறப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக விஜயன், வேளாண் உதவி இயக்குநர் கீதா, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகப் பிரியா, லக்கம்மாள், ஜக்கம்மாள்புரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் சிவகுரு, செயலாளர் பார்த்திபன், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சமூக வலைதள பொறுப்பா ளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சனி பகவான் நேற்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
    • ஸ்ரீ சக்தி வாராஹி சித்தர் கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் நேற்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனால் சனி பகவான் வீற்றிருக்கும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்களும் யாகங்களும் நடைபெற்றது.

    இந்நிலையில் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி வாராஹி சித்தர் கோவிலில் நேற்று மாலை 6 மணி 4 நிமிடம் சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை, அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து எள் சாதம் போன்றவை படைக்கப்பட்டு சனி பெயர்ச்சி வரும் நாட்களில் அனைவருக்கும் நல்ல பலன்கள் கிடைக்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • ஸ்ரீ அம்பாள்வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள்வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பின்னர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நற்சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் அம்பாள் வித்யாலயா பள்ளி தலைவர் வீமராஜ், பள்ளிச் செயலாளர் சுப்பா ரெட்டியார், இயக்குனர் இந்திரா ராமராஜ், ரெபக்கா அனிட்டா, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன் மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி வருகிற 28-ந்தேதி கோவாவில் நடைபெற உள்ளது.
    • தேர்வு பெற்ற மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பாராட்டினர்.

    விளாத்திகுளம்:

    அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி வருகிற 28-ந்தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான வீரர்களை சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் தேர்வு செய்தார். இதில் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியை சேர்ந்த கிருத்திக் சர்வான், நளீன் கிரிஷ், ஹர்ஷத் ராஜ், சமர்ஜித், மிதுலா, ரவிசங்கர், பிரகதீஸ், சொகித், கிருஷ், ஆதேஷ், நவீன், டெனில்சன், தினேஷ் ஆகியோர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்ற மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தாளாளர் விமராஜ், செயலாளர் சுப்பா ரெட்டியார், இயக்குனர் இந்திரா ராமராஜூ, முதல்வர் ஆபிரகாம் வசந்தன், கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.

    • பொதுக் கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • இலவச பயணத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது என்று எம்.எல்.ஏ. பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசுகையில்:-

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்கும் திட்டம் நேற்று தொட ங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் தங்களது வாழ்வா தரத்தை பெருக்கி கொள்ள முடியும். கிராம புற பகுதிகளிலும் குடியிருப்பு இல்லாதவர்களுக்கும் குடியிருப்பு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். விளாத்திகுளம் தொகுதியில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்கும் வகையில் ரூ.608 கோடியில் குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளார். முதல்-அமைச்சர் கடந்த முறை பொங்கல் பரிசு குறித்து குற்றச்சாட்டு வைத்ததன் வெளிப்பாடின் காரணமாக அப்பொருட்கள் வழங்க பட முடியவில்லை. ஆனாலும் பொதுமக்களுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகையாக கொடுக்கப்படும் என முதல்-அமைச்சர் உத்தர விட்டுள்ளார். அதோடு சேர்த்து பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    திராவிடம் மாடல் அரசு பதவி ஏற்ற உடன் மகளிருக்கு பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.700 முதல் ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது என்று பேசினார்.

    • விளாத்திகுளம் அருகே தி.மு.க.சார்பில் தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம்ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது என்று அமைச்சர் பேசினார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில், மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்கும் திட்டம் நாளை தொடங்கபட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் தங்களது வாழ்வாதரத்தை பெருக்கி கொள்ள முடியும்.

    கிராம புற பகுதிக ளிலும் குடியிருப்பு இல்லாதவர்க ளுக்கும் குடியிருப்பு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    ரூ.608 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம்

    விளாத்திகுளம் தொகுதி யில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்கும் வகையில் ரூ.608 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளார்.

    வண்டி பெட்ரோல் இல்லாமல் ஓடாது அதே போல் தான ஊட்டச்சத்து இல்லாத குழந்தையும் அறிவு வளர்ச்சியை எட்டமால் போய்விடுகிறது. சத்தான உணவுகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும்.

    கொரோனா காலத்தில் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் கிராம புறங்களில் உள்ளவர்கள் சத்தான உணவுகளை உட்கொள்வ தால் தான கொரோனா பாதிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.

    பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ. 700 ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது. தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் வேலை வாய்ப்பு என்ற நிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு தலைமை நிலைய பேச்சாளர் பசும்பொன்ரவிச்சந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் அருள்ராஜ், துணைச் செயலாளர்கள் காளிராஜ், சரவணச்செல்வி, தமிழ் வாணன், ஒன்றிய பொரு ளாளர் ராகவன், சங்கர்ராம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜன், ஆதிசங்கர், ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்னமகாராஜா, பச்சை பெருமாள், சுடலை முத்து, அய்யனார், முனி யம்மாள் முத்துகரும்புலி, ஒன்றிய குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஒன்றிய, கிளை செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பொதுக்கூட்டத்திற்கு புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார்.
    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், மேலக்கரந்தை மற்றும் வெம்பூர் கிராமத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் தலைமை பேச்சாளர் பவானி கண்ணன் பேராசிரியரின் கொள்கை குறித்தும், கழக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் நகர செயலாளர் மருது பாண்டியன், ஒன்றிய அவைத் தலைவர் பொன்ராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ரவி, பாலையா, ஒன்னம்மாள், ஒன்றிய பொருளாளர் மாடசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலா ளர்கள், அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சாலை மேம்பாட்டு பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • பூமி பூஜை விழாவில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    புதூர் ஊராட்சி ஒன்றி யம், விளாத்திகுளம்- அருப்புக்கோட்டை சாலை, செங்கோட்டை விலக்கில் புதூர் முதல் செங்கோட்டை வரையிலான சாலையில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா அழகுராஜ், விளாத்தி குளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, புதூர் பேரூர் செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பா ளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் வேலுமணி, பால கிருஷ்ணன், வேலுச்சாமி, கார்த்திகை முருகன், ராமலிங்கம் வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் வேலுச்சாமி, துரைப்பாண்டி யன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், புதூர் பேரூராட்சி துணைத் தலைவர், பச்சமலை சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கிலிபட்டி நடுநிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் யூனியன் சிங்கிலிபட்டி நடுநிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கிலிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை விஜயராணி முன்னிலை வகித்தார். தேவராட்டம், கரகாட்டம், கும்மி, இயற்கை விழிப்புணர்வு நாடகம், களிமண் உருவ பொம்மை செய்தல், பாட்டுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, நாட்டுப்புறப் பாடல் என பல்வேறு பிரிவுகளில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி அளவில் நடந்த இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ள வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் கனகராஜ், ஆசிரியர்கள் பிரியா, புனிதா, லீலா, சீதாலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • விளாத்திகுளம் அருகேரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை, புதிய நியாய விலை கடை, கலையரங்கம் ஆகியவற்றுக்கான கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சீதா லட்சுமி, வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • விதைத்த நாள் முதல் சரிவர மழை பெய்யாததால் பயிர்கள் இருவேறு விதமாக முளைத்தன.
    • படைப்புழுக்களின் தாக்குதலால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்து வருகின்றன.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம், புதூர், அரியநாயகிபுரம், மேலக்கரந்தை, உள்ளிட்ட கிராம பகுதிகளில் நடப்பாண்டு ராபி பருவத்தில் மானாவாரி நிலங்களில் புரட்டாசி முதல் வாரத்திலேயே பருவமழை முன்கூட்டி தொடங்கிவிடும் எனக் கருதிய விவசாயிகள் ஆவணி மாதக்கடைசியில் இருந்து புரட்டாசி 10-ந்தேதி வரை உளுந்து, பாசி, பருத்தி, மக்காச்சோளம், கம்பு, எள், வெள்ளைச் சோளம், கொத்தமல்லி, கொண்டைக்கடலை என அடுத்தடுத்து வரிசையாக பட்டத் தேதிக்கேற்றவாறு விதைப்பு செய்தனர்.

    விதைத்த நாள் முதல் சரிவர மழை பெய்யாததால் பயிர்கள் இருவேறு விதமாக முளைத்தன. சிலரது நிலங்களில் விதைகள் மண்ணில் மக்கி கெட்டுப் போய்விட்டது. இதனால் ஒருமுறைக்கு பலமுறை விதைப்பு செய்ய நேரிட்டது.

    இருப்பினும் பல்வேறு பருவமாற்றங்களுக்கு இடையே தற்போது மக்காச்சோளம் முளைத்து ஒரு மாத பயிராக உள்ளது. கூலி ஆட்களை வைத்தும், ரசாயான மருந்து தெளித்தும் களையை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு படைப்புழுக்களின் தாக்குதலால் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதே போல், இந்தாண்டும் படைப்புழுக்களின் தாக்கு தலால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயி மாரீஸ்குமார் கூறிகையில்:-

    கடந்த 2018-ம் ஆண்டு படைப்புழுக்களின் தாக்குதலால் தமிழகத்தில் மக்காச்சோள பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து வேளாண் விஞ்ஞானிகள், அதிகாரிகள் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    படைப்புழுவை கட்டுப்படுத்தவும், விவசாயிகளுக்கு உதவிடவும் தமிழக அரசுக்கு அதிகாரிகள் படைப்புழுவில் இருந்து மக்காச்சோளம் பயிரை காப்பாற்றவும் சக்திவாய்ந்த டெலிகேட், கோரஜென் எனப்படும் மருந்துகளை மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க பரிந்துரை செய்தது.

    அதனடிப்படையில் ஏக்கருக்கு 80 மிலி மருந்துடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து தண்டுப்பகுதியில் தெளிக்க அதிகாரிகள் பரிந்துரைத்தனர். 2019-ம் ஆண்டு விவசாயிகளுக்கு குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த மருந்து மானியம் தமிழக அரசு வழங்கியது.

    2021-ல் புதிதாக பொறுப்பேற்ற அரசு மக்காச்சோளம் பயிருக்கு மருந்து மானியம் வழங்கவில்லை. அதேவேளையில் படைப்புழுவை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை கூறிவருகிறது. அதிகாரிகள் கூறியபடி செயல் விளக்கம் செய்தால் வரவை மிஞ்சிய செலவாகிறது.

    இந்தாண்டும் மக்காச்சோளம் பயிரில் தண்டுப்பகுதியில் படைப்புழு அதிகம் தென்படுகிறது. இதனால் அதிக விலை கொடுத்து குருத்துப்பூச்சி மருந்து வாங்கி தெளிக்கின்றனர். அது மட்டுமல்லாது உளுந்து, பாசி, வெள்ளைச் சோளம், பருத்தி போன்ற பயிர்களில் தாக்கக் கூடிய நோய்களை கட்டுப்படுத்தவும் விலை உயர்ந்த மருந்துகளை தெளிக்க வேண்டி உள்ளது.

    கடந்த ஆட்சியில் உதவியது போல் படைப்புழு கட்டுப்படுத்த மருந்து மானியம் அல்லது இலவச மருந்துகள் வழங்க வேண்டும், என்று கூறினார்.

    ×