search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதை முதல்-அமைச்சர் உருவாக்கி உள்ளார்-  அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியபோது எடுத்த படம்.

    தமிழகத்தில் தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதை முதல்-அமைச்சர் உருவாக்கி உள்ளார்- அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • விளாத்திகுளம் அருகே தி.மு.க.சார்பில் தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம்ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது என்று அமைச்சர் பேசினார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில், மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்கும் திட்டம் நாளை தொடங்கபட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் தங்களது வாழ்வாதரத்தை பெருக்கி கொள்ள முடியும்.

    கிராம புற பகுதிக ளிலும் குடியிருப்பு இல்லாதவர்க ளுக்கும் குடியிருப்பு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    ரூ.608 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம்

    விளாத்திகுளம் தொகுதி யில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்கும் வகையில் ரூ.608 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளார்.

    வண்டி பெட்ரோல் இல்லாமல் ஓடாது அதே போல் தான ஊட்டச்சத்து இல்லாத குழந்தையும் அறிவு வளர்ச்சியை எட்டமால் போய்விடுகிறது. சத்தான உணவுகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும்.

    கொரோனா காலத்தில் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் கிராம புறங்களில் உள்ளவர்கள் சத்தான உணவுகளை உட்கொள்வ தால் தான கொரோனா பாதிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.

    பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ. 700 ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது. தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் வேலை வாய்ப்பு என்ற நிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு தலைமை நிலைய பேச்சாளர் பசும்பொன்ரவிச்சந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் அருள்ராஜ், துணைச் செயலாளர்கள் காளிராஜ், சரவணச்செல்வி, தமிழ் வாணன், ஒன்றிய பொரு ளாளர் ராகவன், சங்கர்ராம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜன், ஆதிசங்கர், ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்னமகாராஜா, பச்சை பெருமாள், சுடலை முத்து, அய்யனார், முனி யம்மாள் முத்துகரும்புலி, ஒன்றிய குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஒன்றிய, கிளை செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×