search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே ரூ.1.44 கோடியில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடங்கள்- கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
    X

    மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து குத்துவிளக்கேற்றினார். அருகில் அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    விளாத்திகுளம் அருகே ரூ.1.44 கோடியில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடங்கள்- கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

    • கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி சமுதாய நலக்கூடம் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ரூ.72.30 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் வட்டம் எம்.சண்முகபுரம் ஊராட்சி வடக்குசெவலில், சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கினார். இதையடுத்து இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

    கனிமொழி எம்.பி. தலைமை வகித்து சமுதாய நலக்கூடம் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து, புதூர் ஊராட்சி ஒன்றியம் கவுண்டன் பட்டி, நாகலா புரம் ஆகிய இடங்களில் தலா ரூ.72.30 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கூடுதல் ஆட்சியர் சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் நாகலாபுரம், வேப்ப லோடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா ரூ.3.73 கோடியில் தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கு பூமி பூஜையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் அன்பு ராஜன், ராதாகிருஷ்ணன், செல்வ ராஜ், மும்மூர்த்தி, ராமசுப்பு, நவநீதகிருஷ்ணன், புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா அழகுராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரகனி காளிமுத்து, துணைத் தலைவர் அனிதா பரணி, ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×