விளாத்திகுளத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் -மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்

முகாமில் பயனாளிகளுக்கு இலவச பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வழங்கினார்.வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு மக்களின் குறைகளை எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.
பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வழங்கியபோது எடுத்தபடம்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வழங்கியபோது எடுத்தபடம்.
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் சூரங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் பயிறு, சிறு தானியங்கள், சிகப்பு கடல் பாசி, உரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, சூரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் ராமசுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தூர்பாண்டியன், மருதகனி சுப்பிரமணியன், வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், சூரங்குடி கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் ராமச்சந்திரன், தங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாரதிதாசன், தி.மு.க. சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட துறைசார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com