search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேம்பார் கடற்கரையில் தூய்மை பணி
    X

    தூய்மை பணியில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    வேம்பார் கடற்கரையில் தூய்மை பணி

    • வேம்பார் கடற்கரையை தூய்மை செய்யும் பணியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
    • வேம்பார் காமராஜர் சிலையிலிருந்து கடலும் கடற்கரையும் நமது வளமும் பேரணி தொடங்கி கடற்கரையில் நிறைவுற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரையை தூய்மை செய்யும் பணியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள உலகளாவிய வளம்குன்றா வளர்ச்சிக்கான இலக்குகள் வாரத்தினை முன்னிட்டு விளாத்திகுளம் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சார்பாக புனித சார்லஸ் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகளோடு கதையாடுவோம் என்ற தலைப்பில் நீதிமணி, குழந்தைகளுக்கு கதைகள் மற்றும் குழந்தைகள் பாடல்களை வேடமிட்டு குழந்தைகள் மொழியில் பயிற்சியளித்தார். இந்நிகழ்வில் கரிசல் வட்டார எழுத்தாளர் செயப்பிரகாசம் கலந்து கொண்டார்.

    மேலும்,கடல் வளங்களை பாதுகாத்தலுக்காக வேம்பார் காமராஜர் சிலையிலிருந்து கடலும் கடற்கரையும் நமது வளமும் பேரணி தொடங்கி கடற்கரையில் நிறைவுற்றது. இதன் தொடக்க நிகழ்வில் வேம்பார் தெற்கு தோமையார் ஆலய பங்குதந்தை அந்தோணிதாசன், வேம்பார் தூய ஆவியர் ஆலய பங்குதந்தை ரோசன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.

    வேம்பு மக்கள் சக்தி இயக்க ஒருங்கிணைப்பாளர் செயசீலன் வரவேற்புரை யாற்றினார். இயக்குநர் அருட்பணி பரத்ஜெயராஜ் நோக்கவுரையாற்றினார். வேம்பார் ஊராட்சி தலைவர் ஆரோக்கியராஜ் கொடியசைத்து கடற்கரை சுத்தம் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.

    வாதலக்கரை, கோடங்கி பட்டி, சங்கரலிங்கபுரம், விளாத்திகுளம் வேம்பார் பீட்டர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கடற்கரையை சுத்தம் செய்தனர். இந்நிகழ்வில் விசை படகு மீனவர் சங்க தலைவர் அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×