search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கிய காட்சி. அருகில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் உள்ளனர்.

    விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாலதி மின்னல் தாக்கி உயிரிழந்தார்
    • தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (வயது 47) கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயப் பணியை முடித்துவிட்டு மார்த்தா ண்டம்பட்டி கிராமத்திற்கு இடையே பாலத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது.இதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் அறிந்த நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று மார்க்கண்ேடயன் எம்.எல்.ஏ. குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று உயிரிழந்த மாலதி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும் தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.

    குடும்பத்தார் தரப்பிலும் தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்கிட கோரிக்கை விடுத்தனர்.

    உயிரிழந்த மாலதிக்கு தங்கப்பிரகாஷ் (24) என்ற மகனும், தங்கமாரி (22), கன்னிகா (18) என்ற 2மகள்களும் உள்ளனர்.

    நிகழ்ச்சியில் கோவில் பட்டி வருவாய் கோட்டா ட்சியர் மகா லட்சுமி, விளா த்தி குளம் வட்டாட்சியர் சசிக்குமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் நகர செயலாளர்

    வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மார்த்தா ண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்து கரும்புலி, குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×