search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மாயம்"

    • மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 20-ந்தேதி புறப்பட்டுள்ளார்.
    • மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மோகன்குமாரை தேடி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள வேங்கனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை.இவரது மகன் மோகன்குமார் (வயது 20). இவர் புதுச்சேரியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    கடந்த மாதம் மோகன்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 20-ந்தேதி புறப்பட்டுள்ளார்.

    இதையடுத்து மோகன்குமாரின் தம்பி உடன் சென்று அவரை திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் ஊருக்கு சென்ற மோகன்குமார் அதன்பிறகு யாரையும் தொடர்பு கொண்டு பேசவில்லை.இதையடுத்து புதுச்சேரியில் அவர் வேலை செய்யும் இடத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது மோகன்குமார் அங்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து மோகன்குமாரின் தந்தை தங்கதுரை கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மோகன்குமாரை தேடி வருகின்றனர்.

    • பார்த்திபனுக்கும் இவரது பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்படு வந்தது.
    • வேலைக்காக தனது நண்பரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பார்த்திபன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே சம்பந்தக்கார தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பார்த்திபன் (வயது 27). பட்டதாரி. இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இதனால் பார்த்திபனுக்கும் இவரது பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்படு வந்தது.

    இந்நிலையில் நேற்று வேலைக்காக தனது நண்பரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பார்த்திபன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபனின் பெற்றோர் பார்த்திபனை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் பார்த்திபன் கிடைக்கவில்லை.

    இது குறித்து பார்த்திபனின் தாய் அன்பரசி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை தேடிவருகின்றனர்.

    • தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்த வாலிபர் திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி எஸ்.எஸ்.புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முத்துப்பாண்டி (வயது 28).

    இவர் தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்தார். சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜாய்ஸ் (வயது 41). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் மனு ஒன்று கொடுத்தார்.
    • எனது கணவர் ஜேக்கப் (45). இவர் கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். இவர் சென்ற மறுநாள் திருப்பூர் வந்து விட்டதாக போன் செய்து நான் 10 நாட்களில் ஊருக்கு வந்து விடுவேன் என கூறி னார்.
    • இது குறித்து திருவட்டார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமானவரை தேடி வருகிறார்கள்.

    திருவட்டார், அக்.13-

    திருவட்டார் அருகே வீராலிகாட்டுவிளை, மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜாய்ஸ் (வயது 41). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறி யிருப்பதாவது:-

    எனது கணவர் ஜேக்கப் (45). இவர் கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். இவர் சென்ற மறுநாள் திருப்பூர் வந்து விட்டதாக போன் செய்து நான் 10 நாட்களில் ஊருக்கு வந்து விடுவேன் என கூறி னார். அதன் பிறகு போன் மூலம் தொடர்பு கொண்டால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. பல்வேறு இடங்களில் உள்ள உற்றார் உறவினர்களிடமும், நண்பர் களிடமும் விசாரித்தேன். அவரை பற்றி எந்த தகவ லும் இல்லை. எனவே காணாமல் போன எனது கணவரை கண்டு பிடித்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    இது குறித்து திருவட்டார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமானவரை தேடி வருகிறார்கள்.

    • தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கோவை,

    கோவை குறிச்சி கல்லுகுழி வீதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25). ஆன்லைன் உணவு பார்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி பானுபிரியா என்ற மனைவியும் ஒருமகனும் உள்ளனர். ராம்குமார் அவரது மனைவியிடம் நகைகளை கொடுக்கும்படி அடிக்கடி கேட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராம்குமார் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு மாயமானார். அவரை அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவரது மனைவி 15 பவுன் நகைகளுடன் மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளுடன் மாயமான ராம்குமாரை தேடி வருகிறார்கள். 

    • கடந்த 19-ந்தேதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக மனைவி காவியாவிடம் மணிகண்டன் தெரிவித்து இருந்தார்.
    • மணிகண்டன் வீட்டுக்கு வரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் அருகே உள்ள கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவரது மனைவி காவியா. கேட்டரிங் டெக்னாலஜி படித்துள்ள மணிகண்டன் துபாயில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் கடந்த 19-ந்தேதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக மனைவி காவியாவிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் மணிகண்டன் வீட்டுக்கு வரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து காவியா, சென்னை விமான நிலையத்தில் விசாரித்தபோது, கணவர் மணிகண்டன் துபாயில் இருந்து திரும்பி வந்திருப்பதும், விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருப்பதும் தெரிந்தது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான மணிகண்டனை தேடிவருகிறார்கள்.

    • வீட்டைவிட்டு வெளியே சென்ற வாலிபர் திடீரென மாயமானார்.
    • புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகில் உள்ள ராமசாமிநாயக்கன்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் சீலமுத்து(23).

    இவர் சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • கடலூர் முதுநகரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்ற வாலிபர் மாயமானார்.
    • கடந்த மாதம் 21-ந் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் மாலுமியார் பேட்டையை சேர்ந்தவர் தினகரன் (வயது 24).இவர் ஆந்திரா மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வெல்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தினகரன் சம்பவத்தன்று மீண்டும் ஆந்திரா மாநிலத்திற்கு வேலைக்கு செல்வதற்காக சென்றவர் எங்கு சென்றார் தெரியவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் தாய் வசந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் திடீரென மாயமானார்.
    • புகாரின் பேரில் போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் 13-வது வார்டு கே.கே.காலனியை சேர்ந்த கருப்பு மகன் பிரபாகரன்(28). இவர் கடந்த 5 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீரபாண்டி கோவிலுக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்து தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகம் சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கமாம்.
    • மாயமான தனது மகனை கண்டுபிடித்து தர புதுக்கடை போலீசில் புகார்

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறை 13-ந் அன்பியத்தை சேர்ந்தவர் அந்தோணி குருசு (வயது 53). மீன்பிடி தொழிலாளி. இவரது இரண்டாவது மகன் ஆன்டனி றெஸ்லின் (26). இவர் அடிக்கடி வீட்டில் இருந்து தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகம் சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கமாம்.

    இந்த நிலையில் சம்பவ தினம் வீட்டில் இருந்து சென்ற ஆன்டனி. பின்னர் வீடு திரும்பவில்லையாம். மாயமான வரை உறவினர் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், மாயமான தனது மகனை கண்டுபிடித்து தர புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கரூரில் டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர் மாயமானார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் முத் தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் பிரபாகரன் (29)

    டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 27-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார் .

    பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது உறவினர் சகுந்தலா பசுபதிபளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தளி அருகே வெளியில் சென்ற வாலிபர் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ள தேவரபெட்டா கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகன் சசிகுமார் (வயது 23). இவர் தளியில் டெய்லர் கடை நடத்தி வந்தார்.

    நேற்று முன்தினம் சசிகுமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் மருத்துவ மனைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சசிகுமாரை உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் சசிகுமாரின் தந்தை ராஜப்பா தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சசிகுமாரை தேடி வருகின்றார். சமூக விரோதிகள் யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×