உத்தமபாளையம்:.உத்தமபாளையம் அருகில் உள்ள ராமசாமிநாயக்கன்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் சீலமுத்து(23)..இவர் சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். .பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.