சிதம்பரம் அருகே வாலிபர் மாயம் தாய் போலீசில் புகார்

பார்த்திபனுக்கும் இவரது பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்படு வந்தது. வேலைக்காக தனது நண்பரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பார்த்திபன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
சிதம்பரம் அருகே வாலிபர் மாயம் தாய் போலீசில் புகார்
Published on

கடலூர்:

சிதம்பரம் அருகே சம்பந்தக்கார தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பார்த்திபன் (வயது 27). பட்டதாரி. இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இதனால் பார்த்திபனுக்கும் இவரது பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்படு வந்தது.

இந்நிலையில் நேற்று வேலைக்காக தனது நண்பரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பார்த்திபன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபனின் பெற்றோர் பார்த்திபனை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் பார்த்திபன் கிடைக்கவில்லை.

இது குறித்து பார்த்திபனின் தாய் அன்பரசி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com