search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் வாலிபர் திடீர் மாயம்- மனைவி போலீசில் புகார்
    X

    சென்னை விமான நிலையத்தில் வாலிபர் 'திடீர்' மாயம்- மனைவி போலீசில் புகார்

    • கடந்த 19-ந்தேதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக மனைவி காவியாவிடம் மணிகண்டன் தெரிவித்து இருந்தார்.
    • மணிகண்டன் வீட்டுக்கு வரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் அருகே உள்ள கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவரது மனைவி காவியா. கேட்டரிங் டெக்னாலஜி படித்துள்ள மணிகண்டன் துபாயில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் கடந்த 19-ந்தேதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக மனைவி காவியாவிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் மணிகண்டன் வீட்டுக்கு வரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து காவியா, சென்னை விமான நிலையத்தில் விசாரித்தபோது, கணவர் மணிகண்டன் துபாயில் இருந்து திரும்பி வந்திருப்பதும், விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருப்பதும் தெரிந்தது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான மணிகண்டனை தேடிவருகிறார்கள்.

    Next Story
    ×