கடலூர் முதுநகரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்ற வாலிபர் மாயம்

கடலூர் முதுநகரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்ற வாலிபர் மாயமானார்.கடந்த மாதம் 21-ந் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
கடலூர் முதுநகரில்  இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்ற வாலிபர் மாயம்
Published on

கடலூர்:

கடலூர் முதுநகர் மாலுமியார் பேட்டையை சேர்ந்தவர் தினகரன் (வயது 24).இவர் ஆந்திரா மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வெல்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தினகரன் சம்பவத்தன்று மீண்டும் ஆந்திரா மாநிலத்திற்கு வேலைக்கு செல்வதற்காக சென்றவர் எங்கு சென்றார் தெரியவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் தாய் வசந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com