என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  புதுக்கடை அருகே வாலிபர் மாயம்
  X

  புதுக்கடை அருகே வாலிபர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டில் இருந்து தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகம் சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கமாம்.
  • மாயமான தனது மகனை கண்டுபிடித்து தர புதுக்கடை போலீசில் புகார்

  கன்னியாகுமரி:

  புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறை 13-ந் அன்பியத்தை சேர்ந்தவர் அந்தோணி குருசு (வயது 53). மீன்பிடி தொழிலாளி. இவரது இரண்டாவது மகன் ஆன்டனி றெஸ்லின் (26). இவர் அடிக்கடி வீட்டில் இருந்து தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகம் சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கமாம்.

  இந்த நிலையில் சம்பவ தினம் வீட்டில் இருந்து சென்ற ஆன்டனி. பின்னர் வீடு திரும்பவில்லையாம். மாயமான வரை உறவினர் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், மாயமான தனது மகனை கண்டுபிடித்து தர புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×