போடி அருகே வாலிபர் மாயம்

தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்த வாலிபர் திடீரென மாயமானார். போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி எஸ்.எஸ்.புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முத்துப்பாண்டி (வயது 28).

இவர் தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்தார். சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com