search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலைவீச்சு"

    • வேலை செய்த சம்பள பணத்தை வாங்கி வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
    • நோட்டமிட்டு அவரை கொலை செய்து பணத்தையும், நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள கும்மனூரை சேர்ந்தவர் ஓபுளி நாயுடு. விவசாயி. இவரது மனைவி பொன்னியம்மாள் (வயது 78). கணவர் இறந்து விட்டதால் அவர் கும்மனூரில் உள்ள தனது மகள் ராதா வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை மூதாட்டி பொன்னியம்மாள் அந்த பகுதியில் உள்ள மாந்தோப்பு வழியாக சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தலையில் செங்கல்லால் தாக்கினர். மேலும் அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் தோடு மற்றும் தங்க தாலி மற்றும் பையில் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    இதில் படுகாயமடைந்த பொன்னியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கல்லாவி போலீஸ் நிலையத்திற்கும், பொன்னியம்மாளின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது மர்ம நபர்கள் மூதாட்டியின் ஒரு காதில் இருந்த தங்க தோட்டை அறுக்க முடியாததால் காதையே அறுத்து தோட்டை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டி பொன்னியம்மாள் அந்த பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

    வேலை செய்த சம்பள பணத்தை வாங்கி வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். அங்கு ரூ.6 ஆயிரம் சம்பளத்தை வாங்கி கொண்டு அவர் வரும் போது மர்ம நபர்கள் இதை நோட்டமிட்டு அவரை கொலை செய்து பணத்தையும், நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 15-பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.
    • இவர்கள் 15 பேரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் குண்டலிப்புலியூரில் அனுமதி இன்றி இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 15-பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து கடந்த பிப்ரவரி 14-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் 15 பேரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதில் மாற்றுத்திறனாளி சுப்பிரமணி அண்ணி மாது (வயது 29) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 16-ந் தேதி கழிவறையின் உள் பகுதியில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஜன்னல் மற்றும் மரப்பலகைகளை உடைத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை எங்கு தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணி அண்ணி மாதுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே போலி டாக்டருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
    • சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி போன்றவை இருந்தன.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுக ராஜ் (வயது 60) என்பவர் டாக்டர் என்று தெரிவித்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு அமலன் சேவுகராஜ் ஊசி போட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்தார். இவர் 5-ம் வகுப்பு வரை படித்து விட்டு மருத்துவம் பார்ப்ப தாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர் டாக்டர் முருக வேல் தலைமையிலான குழுவினர் மவுண்ட் சியோன் பகுதிக்கு சென்று அமலன் சேவுகராஜ் நடத்தி வந்த மருத்துவமனை யில் சோதனை நடத்தினர். அப்போது அமலன் சேவுகராஜ் அங்கில்லை. அங்கு அவர் சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி போன்றவை இருந் தன. அதனை பறிமுதல் செய்தனர். போலி டாக்டர் தலைமறைவாகி விட்ட தால் இது குறித்து தளவாய் புரம் போலீஸ் நிலையத்தில் மருத்துவ துறை இணை இயக்குநர் டாக்டர் முருக வேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலன் சேவுகராஜை தேடி வருகின்றனர்.

    • கடைக்கு நேற்று மாலை 30 வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார்.
    • மர்ம நபருக்காக காத்திருந்த கடை உரிமை யாளர் சிறிது நேரம் காத்தி ருந்து ஏமாற்றம் அடைந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள போலீஸ் நிைலயம் அருகே அன்சாரி (வயது 45) என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று மாலை 30 வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார். அவர் கடையில் உள்ள ஒவ்வொரு இனிப்புகளின் விலையையும் கேட்டார். பின்னர் அதில் ஒரு இனிப்பை எடுக்க கூறினார்.

    அதற்காக கடை உரிமையாளர் அந்த பக்கம் திரும்பினார். அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை அபேஸ் செய்து விட்டார். இனிப்பை எடுத்துக் கொண்டு வந்த கடை உரிமையாளர் அந்த மர்ம நபரிடம் கொடுக்க முயன்றார். உடனே அந்த மர்ம நபர் எனது இருசக்கர வாகனத்தில் பணம் உள்ளது. அதனை எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    அந்த மர்ம நபருக்காக காத்திருந்த கடை உரிமை யாளர் சிறிது நேரம் காத்தி ருந்து ஏமாற்றம் அடைந்தார். பின்னர் கடைக்கு வந்த மற்ற வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகளை விற்பனை செய்தார். அப்போது கடை யில் இருந்த கல்லாப்பெட்டி யை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் வைத்தி ருந்த 5 ஆயிரம் ரூபாயை அந்த மர்ம நபர் அபேஸ் செய்து மாயமானதை அறிந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்குப்பதிவு செய்தார். கடையின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான தடயங்களை வைத்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்.

    • பரசுராமன் (வயது 30) என்ற வாலிபர், 12 பவுன் போலி தங்க தங்க நகையை, விற்க முயன்ற போது கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
    • இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள புவனேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பெரமசாமி பிள்ளை விதியில் ஜுவ்வல்லரி நடத்தி வரும் கைலாஷ் என்பவர் கடையில், கடந்த 10-ந்தேதி, காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச் சேர்ந்த பரசுராமன் (வயது 30) என்ற வாலிபர், 12 பவுன் போலி தங்க தங்க நகையை, விற்க முயன்ற போது கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.பரசுராமனிடம் நடத்திய விசாரணையில், நகையை கொடுத்து விற்கச் சொன்னது திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான் (35) என்பதும், இது போன்ற போலி தங்க நகை விற்பனைக்கு உடந்தையாக இருந்தவர் புதுவை போலீஸ் துறையில் சஸ்பெண்ட் ஆன, சப்.இன்ஸ்பெக்டர் ஜெரோம் (38), அவரது நெருங்கிய தோழி (கள்ளகாதலி) புவனேஸ்வரி (35) காரைக்காலைச் சேர்ந்த ரமேஷ் (32) ஆகியோர் உள்ளது தெரியவந்தது. இதில் ரிபாத் காமில்தான், ஜெரோம் மற்றும் ரமேஷை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் போலீசார் விசாரனை மேற்கொ ண்டபோது, தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு நபர்களை வைத்து இது போன்று போலி நகையை வங்கிகளில் வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள புவனேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.       

         காரைக்கால் புதுத்துறையை சேர்ந்த முகமது மைதீன் (35) என்பவர், காரைக்காலில் உள்ள புதுவை பாரதியார் வங்கியில் 30 பவுன் போலி தங்க நகையை வைத்து, கடன் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் முகமது மைதீனை நேற்று கைது செய்தனர் .,இந்நிலையில், காரைக்காலில் உள்ள தனியார் நிதி நிறுவனமான கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிட் வாங்கி கிளையில், காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த தேவதாஸ் (38) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 12 பவுன் போலி தங்க செயினை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் பெற்றுள்ளார். இதுநாள் வரை நகை கடன் பெற்றதுக்கு வட்டி ஏதும் செலுத்தாததால் வங்கி மேலாளர் நகையை பரிசோதித்தார். இதில் அது போலி நகை என தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தேவதாஸை தேடி வருகின்றனர். புவனேஸ்வரி மற்றும் தேவதாஸ் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    • வைர மூக்குத்திகளை திருடிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • அதனை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எதிரிகளை பழிவாங்க காசு வெட்டி போடும் வழக்கம் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் பத்ரகாளி அம்மன் சிலையில் இருந்த வைர மூக்குத்திகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி நேற்று காலை தெரியவந்ததும் கோவில் செயல் அலுவலர், திருப்பு வனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் வளாகம் முழுவதும் உள்ள கண்கா ணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஒரு மர்ம நபரின் உருவம் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும் இரவு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன் மற்றும் 2 காவலாளிகளிடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருட்டு போன வைர மூக்குத்திகள் பல லட்சம் மதிப்புடையது. அதனை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • 6 பேர் கொண்ட கும்பல், பஸ்சின் நடத்துனரான ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை நடுவீதி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 30) என்பவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. சேலம் அம்மாபேட்டை டி.எம்.எஸ் பஸ் நிறுத்தம் அருகே நின்றபோது, 6 பேர் கொண்ட கும்பல், பஸ்சின் நடத்துனரான ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை நடுவீதி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 30) என்பவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், பஸ்சில் வந்த பயணி ஒருவரை ஆத்தூர் அருகே நடத்துனர் பாலசுப்பிரமணி இருக்கை மாறி அமரச் சொல்லி உள்ளதார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பயணி, தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரச் சொல்லி இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    • விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது
    • பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்

    சூரம்பட்டி,

    ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடன் வாங்கி மொபட்டை வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதற்கான தவணை கட்டப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் செந்தில் குமார் வாங்கிய மொபட்டை ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஒரு செருப்பு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளதாக நிதி நிறுவன த்திற்கு தகவல் கிடைத்தது.

    இதையொட்டி நிதி நிறுவன ஊழியர்கள் விக்னேஷ் குமார் (26)என்பவர் உள்பட 3 பேர் அந்த கடைக்கு சென்று அங்கு நின்ற மொபட்டை எடுக்க முயற்சி செய்தனர்.

    அப்போது கடையில் இருந்த செருப்பு கடையின் உரிமையாளரும் பாரதீய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளருமான விநாயக மூர்த்தி அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் குமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து விக்னேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கியதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    இதுபற்றி சூரம்பட்டி போலீசார் கூறும் போது

    இறந்த செந்தில் குமார் விநாயக மூர்த்தியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கடன் வாங்கி யிருந்ததாகவும் இந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்காமல் இறந்து விட்டதால் செந்தில் குமாரின் வீட்டுக்கு சென்று ஸ்கூட்டரை எடுத்து வந்ததாவும் அந்த மொபட்டை தனது செருப்பு கடை முன்பு நிறுத்தி இருந்ததாகவும் கூறினர்.

    • மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் மாட்டுக் கொட்டைகையில் மாடு களை கட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார்.
    • சதீஷ் உள்பட 3 பேர் இரவோடு இரவாக திருடி சென்றதை ஒப்புக் கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் அருகே நெடு மானூர் பகுதியைச் சேர்ந்த வர் கோவிந்தராஜ். இவரது மனைவி கமலக்கோடி (வயது 48). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் வீட்டின் பின்புறம் மாட்டு கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று  வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் மாட்டுக் கொட்டைகையில் மாடு களை கட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார். இன்று காலை கமல கொடி எழுந்து சென்று பார்த்த போது மாட்டு கொட்டையிலிருந்த மாடுகளில் பசுமாடு ஒன்று காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கமலகொடி பசு மாட்டை பல்வேறு இடங்க ளில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கமலக்கொடி எலவனாசூர் போலீஸ் நிலை யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எலவனாசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்கு பதிவு செய்து மாட்டை திருடி சென்ற மர்ம கும்பலை தேடிவந்தார். இந்நிலையில் பரிந்தன் பகுதியில் ஏரிக்கரை தெருவில் உள்ள ஒரு வீட்டில் காணாமல் போன மாடு கட்டி வைக்கப்பட்டிருந்தது. உடனே போலீசார் அந்த வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த சதீஷ் (27) என்பவரிடம் விசாரித்த போது கமலக்கொடியின் மாட்டை சதீஷ் உள்பட 3 பேர் இரவோடு இரவாக திருடி சென்றதை ஒப்புக் கொண்டார். உடனே மாட்டை பறிமுதல் செய்த போலீசார் சதீஷை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீ சார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • தொண்டி அருகே கடற்கரையில் ஜெலட்டின் குச்சிகளை பதுக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • மீன் பிடிப்பதற்காக அதற்கான பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தொண்டி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பாசிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் வெடிவைத்து மீன் பிடிப்பதற்காக அதற்கான பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தொண்டி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி இன்று கடலோரப் பாதுகாப்பு குழும பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், தேவிபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், தொண்டி மரைன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தபா ஆகியோர் தலைமையிலான போலீசார்கள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்

    அப்போது கடற்கரையில் குழிதோண்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 239 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொண்டி புதுக்குடியை சேர்ந்த கோட்டைராஜா மகன் கண்ணன் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலில் வெடிகளை வெடிக்கச்செய்து மீன் பிடிப்பதற்காக ஜெலட்டின் குச்சிகளை பதுக்கியி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    • திருமங்கலம் அருகே பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அமர்நாத். இவரது மனைவி காயத்ரி (வயது 30) சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் உறவினர் திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு காயத்ரி திருமங்கலத்திற்கு வந்தார். அவர் கள்ளிக்குடியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்று விட்டு, மீண்டும் திருமங்க லத்திற்கு அரசு டவுன் பஸ்சில் திரும்பி வந்தார்.

    தான் அணிந்திருந்த நகை களை பாதுகாப்புக்காக கழற்றி பைக்குள் வைத்தி ருந்தார். இந்தநிலையில் திருமங்கலம் பஸ் நிலை யத்தில் இறங்கியபோது அவரது பை திறந்திருந்தது. உள்ளே பார்த்தபோது, பையில் வைத்திருந்த 7½ பவுன் தங்கச்செயினை காணவில்லை.

    யாரோ மர்ம நபர்கள் ஓடும் பஸ்சிலேயே காயத் ரியின் பையில் இருந்த தங்கச்செயினை நைசாக திருடிச்சென்று 

    • கடையில் புகுந்து பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.
    • மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மணலி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுமத்ரா. பெண்ணை தாக்கிய வழக்கில் அவரையும் அவரது கணவர் மற்றும் கூட்டாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே மணலி ஊராட்சி தலைவராக இருப்பவர் சுமத்ரா. அதே ஊராட்சியில் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த செம்மலர்(42) என்ற பெண் பணித்தள பொறுப்பாளராக வேலை செய்து வந்துள்ளார்.

    அப்பெண்ணை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரவி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டதாகவும், அதுக்குறித்து செம்மலர் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து நியாயம் கேட்டு பேசிய ஆடியோ பதிவு ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதுக்குறித்து சில தினங்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் இருதரப்பினரையும் கண்டித்து அனுப்பியுள்ள னர்.

    இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 19ந்தேதி காலை சுமார் 11 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவரும் அவரது தரப்பினரும்- மணலி கடைவீதியில் செம்மலர் நடத்திவரும் தையற்கடையில் புகுந்து அப்பெண்ணை தாக்கியதோடு, நடுரோட்டில் தர,தரவென இழுத்து போட்டுள்ளனர்.

    அதுக்குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் மயக்கமுற்று கிடந்த செம்மலரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. சோமசுந்தரம் தலைமையில் ஆய்வாளர் கழனியப்பன் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குணசீலன்(32) என்பவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள சுமத்ரா மற்றும் அவரது கணவர் ரவி உட்பட 13 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவாகி உள்ள நிலையில் குடிநீர், சுகாதாரம், தெரு மின்விளக்கு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு யாரை நாடுவது என்று பொதுமக்கள் குழம்பியுள்ளதோடு - மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஊராட்சி நிர்வாகம் செயல்பட ஆவன செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    ×