search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமறைவான"

    • முக்கிய குற்றவாளியான பாலாஜி கைது செய்யப்பட்டு பவானி சிறையில் அடைக்கப்பட்டார்.
    • திருமூர்த்தி தலைமறைவாக இருந்து வந்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு இளைஞர்கள் சிலர் போதை மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து அந்தியூர் பவானி சாலையில் உள்ள சாந்திய பாளையம் பிரிவு மயான பகுதியில் போலீசார் ஆய்வு செய்து சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் நின்று கொண்ட இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

    போலீசார் அவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 5 பேர் சிக்கனர். அவர்கள் 5 போலீசார் கைது செய்து பவானி சிறை யில் அடைத்த னர்.

    இதில் முக்கிய குற்ற வாளியான ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பாலாஜி சந்தியபாளையம் மண க்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு முக்கிய குற்றவாளியான ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பாலாஜி கைது செய்யப்பட்டு பவானி சிறையில் அடைக்கப்பட்டார்.

    மற்றொரு குற்றவாளியான சந்திய பாளையம் மணக்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அந்தியூர் போலீசாருக்கு திருமூர்த்தி அந்தியூர் பகுதியில் சுற்றி திரிவதாக தகவல் கிடைத்தது. இதனை அடித்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திரு மூர்த்தியை இன்று காலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அந்தியூர் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • மூட்டை மூட்டைகளாக பதுக்கி கடத்தி சென்றதை போலீ சார் கண்டுபிடித்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து வெங்காய லோடு களை ஏற்றுக் கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது வேனில் இருந்தவர்கள் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் லிங்கையாத்தார் தெருவை சேர்ந்த மகேந்திரன்(32) சாம்ராஜ் நகர் பண்டிகரையை சேர்ந்த பிரமோத் (22) ஆகியோர் வேன் டிரைவர், கிளீனராக இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் வேனில் ஏறி சோதனை செய்த போது வெங்காய லோடுகள் அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டைகளாக பதுக்கி கடத்தி சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    விமல் பாக்கு 30 சாக்கு மூட்டைகள், பான் மசாலா 30 சாக்கு மூட்டைகள், ஹான்ஸ் 15 சாக்கு மூட்டைகள், கூலிப்பு இரண்டு மூட்டைகள் என மொத்தம் 82 மூட்டைகளில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மகேந்திரன், பிரோமோத்தை சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது கர்நாடக மாநிலம் மைசூர் ஆர். எம். சி. பண்டிபாளையத்தை சேர்ந்த பவன் (25) என தெரிய வந்தது. அவர் சொல்லி தான் மேட்டு ப்பாளையத்தில் உள்ள வியாபாரிகளுக்கு சரக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்தி செல்ல ப்பட்டதாக இருவரும் தெரிவித்தனர்.

    இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்ற வாளியான பவனை பிடிக்க சத்தியமங்கலம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பவன் பிடிபட்டால்தான் புகையிலை கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரிய வரும் என போலீசார் தெரி வித்தனர்.

    • சுகுமார் (வயது 36). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி காதல் மனைவிைய தன்னந்தனியாக தவிக்க விட்டு வீட்டில் இருந்து நைசாக வெளியேறினார்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி திருச்சி மெயின்ரோடு அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்தவர் சுகுமார் (வயது 36). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வனிதாவின் தந்தை மத்திய அரசின் தகவல் ெதாழிற்நுட்ப துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் அதில் கிடைக்கும் ஓய்வூதிய பணத்தை கொண்டு வனிதா தனது குடும்ப செலவை கவனித்து வந்தார். இதனிடைேய சுகுமாரின் பெற்றோர், வனிதாவை விட்டு பிரிந்து வருமாறும், வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி தங்களது வீட்டுக்கு வருமாறு சுகுமாரை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் மாறிய சுகுமார், கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி காதல் மனைவிைய தன்னந்தனியாக தவிக்க விட்டு ச வீட்டில் இருந்து நைசாக வெளியே றினார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா, பல்வேறு இடங்க ளில் அவரை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து வனிதா, அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில், தனது காதல் கணவரை மீட்டு தருமாறு கூறி கதறினார். அவர் அளித்த புகாரின் பேரில், மாயம் என வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசா ரணை மேற்கொண்ட தில் மனைவியை ஏமாற்றிவிட்டு சுகுமார், சேலத்தில் தலை மறைவாக சுற்றி திரிவது தெரியவந்துள்ளது. இதனால் அவரை சுற்றி வளைத்து பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • ரூ.23 லட்சம் பணத்தையும் கொள்ளை யடித்து சென்ற னர்.
    • இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    சென்னிமலை, 

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் இருந்து அதே நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு தொழிற்சாலைக்கு ஊழியர் சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் கடந்த மாதம் 23-ந் தேதி நிறுவனத்திற்கு சொந்தமான காரில் ரூ.23 லட்சம் பணத்தை எடுத்துச்சென்றார்.

    அப்போது அந்த காரை சில மர்ம நபர்கள் வழி மறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று அவரை கட்டிப்போட்டு ரூ.23 லட்சம் பணத்தையும் கொள்ளை யடித்து சென்றனர்.

    இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மகேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் குற்றவாளிகளை தேடிவந்தனர்.

    அதன்படி கடந்த 28-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கண்ணங்குடி அருகே கள்ளர் தெருவை சேர்ந்த மனோகர் (29) மற்றும் அதே ஊரை சேர்ந்த நவநீதன் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கண்ணங்குடி, கள்ளர் தெருவை சேர்ந்த நல்லையன் என்பவரின் மகன் இளையராஜா (வயது 31) மற்றும் கோவை செட்டிபாளையம் காந்திஜி ரோட்டை சேர்ந்த சீமான் என்பவரின் மகன் அலெக்சாண்டர் (வயது 32) ஆகிய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இளையராஜா திருச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் விற்பனையாளராகவும், அலெக்சாண்டர் கோவை யில் சொந்தமாக லாரி புக்கிங் ஆபீஸ் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் இளையராஜா மோட்டார் சைக்கிளிலும், அலெக்சாண்டர் கார் ஓட்டுனராகவும் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ரூ.23 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற முக்கிய குற்றவாளிகளான புதுக்கோட்டை மாவட்ட த்தில் இவர்கள் ஊர்களை சேர்ந்த ராஜசேகர் (வயது 31), ராமதுரை (வயது 32) என தெரியவந்தது.

    இவர்கள் இருவரும் கொள்ளை அடிக்க உதவி செய்ததற்காக இளைய ராஜாவுக்கும், அலெக்சாண்டருக்கும் தலா ரூ.80 ஆயிரம் பணம் கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த பணத்தில் இளையராஜாவிடம் இருந்து ரூ.77 ஆயிரம் மற்றும் அலெக்சாண்டரிடம் இருந்து ரூ.78 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 2 செல்போன் ஆகியவற்றை யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 9 மணி அளவில் பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இளையராஜாவையும், அலெக்சாண்டரையும் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.23 லட்சம் பணத்துடன் சென்ற முக்கிய குற்ற வாளிகளான ராஜசேகர் மற்றும் ராமதுரையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது
    • பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்

    சூரம்பட்டி,

    ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடன் வாங்கி மொபட்டை வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதற்கான தவணை கட்டப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் செந்தில் குமார் வாங்கிய மொபட்டை ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஒரு செருப்பு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளதாக நிதி நிறுவன த்திற்கு தகவல் கிடைத்தது.

    இதையொட்டி நிதி நிறுவன ஊழியர்கள் விக்னேஷ் குமார் (26)என்பவர் உள்பட 3 பேர் அந்த கடைக்கு சென்று அங்கு நின்ற மொபட்டை எடுக்க முயற்சி செய்தனர்.

    அப்போது கடையில் இருந்த செருப்பு கடையின் உரிமையாளரும் பாரதீய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளருமான விநாயக மூர்த்தி அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் குமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து விக்னேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கியதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    இதுபற்றி சூரம்பட்டி போலீசார் கூறும் போது

    இறந்த செந்தில் குமார் விநாயக மூர்த்தியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கடன் வாங்கி யிருந்ததாகவும் இந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்காமல் இறந்து விட்டதால் செந்தில் குமாரின் வீட்டுக்கு சென்று ஸ்கூட்டரை எடுத்து வந்ததாவும் அந்த மொபட்டை தனது செருப்பு கடை முன்பு நிறுத்தி இருந்ததாகவும் கூறினர்.

    • ஈஸ்வரனை கடத்தியதாக சீனிவாசன், பிரைட் பால் ஆகியோரை புளியம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் உள்பட 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.ஈஸ்வரன் (46). புன்செய்ப்புளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 24-ந் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தன்னை அடித்து பணம் கேட்டு கடத்தி ரூ.1.50 கோடி பறித்து சென்றதாக புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மிலிட்டரி சரவணன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

    ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்தது தெரிய வந்தது. அவர் தூண்டுதல் பெயரில் மோகன் உள்பட 6 பேர் ஈஸ்வரனை கடத்தி அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலைமறை வாகிவிட்டனர்.

    இதனையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்ப டைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஈஸ்வரனை கடத்தியதாக சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (49). கோவை தொண்டாமுத்தூர் என். ஆர். நகரை சேர்ந்த பிரைட் பால் (40) ஆகியோரை புளியம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சத்திய மங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் உள்பட 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    சரவணன் பிடிபட்டால் தான் எதற்காக கடத்தல் சம்பவம் நடைபெற்றது என உண்மையான நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×