திருமணமாகி ஒன்றரை வருடத்தில் காதல் மனைவியை ஏமாற்றிவிட்டு தலைமறைவான தறிதொழிலாளி

சுகுமார் (வயது 36). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி காதல் மனைவிைய தன்னந்தனியாக தவிக்க விட்டு வீட்டில் இருந்து நைசாக வெளியேறினார்.
திருமணமாகி ஒன்றரை வருடத்தில் காதல் மனைவியை ஏமாற்றிவிட்டு தலைமறைவான தறிதொழிலாளி
Published on

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி திருச்சி மெயின்ரோடு அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்தவர் சுகுமார் (வயது 36). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வனிதாவின் தந்தை மத்திய அரசின் தகவல் ெதாழிற்நுட்ப துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் அதில் கிடைக்கும் ஓய்வூதிய பணத்தை கொண்டு வனிதா தனது குடும்ப செலவை கவனித்து வந்தார். இதனிடைேய சுகுமாரின் பெற்றோர், வனிதாவை விட்டு பிரிந்து வருமாறும், வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி தங்களது வீட்டுக்கு வருமாறு சுகுமாரை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் மாறிய சுகுமார், கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி காதல் மனைவிைய தன்னந்தனியாக தவிக்க விட்டு ச வீட்டில் இருந்து நைசாக வெளியே றினார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா, பல்வேறு இடங்க ளில் அவரை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து வனிதா, அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில், தனது காதல் கணவரை மீட்டு தருமாறு கூறி கதறினார். அவர் அளித்த புகாரின் பேரில், மாயம் என வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசா ரணை மேற்கொண்ட தில் மனைவியை ஏமாற்றிவிட்டு சுகுமார், சேலத்தில் தலை மறைவாக சுற்றி திரிவது தெரியவந்துள்ளது. இதனால் அவரை சுற்றி வளைத்து பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com