search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஜா"

    • பதவி ஏற்பு விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் முடித்து கோவிலிலிருந்து வெளியே வந்தார்.
    • திருப்பதி கோவிலில் நேற்று 57, 443 பேர் தரிசனம் செய்தனர். 28,198 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி எம்.எல்.ஏ பூமண கருணாகரன் ரெட்டி செய்யப்பட்டார். நேற்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பூமண கருணாகரன் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி உள்ளிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பதவி ஏற்பு விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் முடித்து கோவிலிலிருந்து வெளியே வந்தார்.

    அப்போது வெளியே நின்று கொண்டு இருந்த 2 வயதான பெண்கள் அமைச்சர் ரோஜாவுக்கு பூ, வெற்றிலை பாக்கு, பழங்களை வழங்கினர்.

    பின்னர் திடீரென அமைச்சர் ரோஜா காலில் விழுந்து அவரது கால்களுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து வணங்கினர். இந்த சம்பவத்தை கண்ட பக்தர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். வயதில் மூத்த பெண்கள் இருவர் அமைச்சர் ரோஜா காலில் விழுந்து வணங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி கோவிலில் நேற்று 57, 443 பேர் தரிசனம் செய்தனர். 28,198 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    அறங்காவலர் குழு தலைவர் பதவி ஏற்றதால் முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • 90களின் காலகட்டத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன்.
    • இவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது சந்தித்துள்ளனர்.

    90களின் காலகட்டத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன். இவர்களின் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இருவரும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். இவர்கள் இருவரும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்தது.




    இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோஜா இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ரோஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, நல்ல நண்பர்கள் நட்சத்திரம் போல. இன்னும் எனக்கு நினைவிருக்கிறது, நாம் சந்தித்தது சிரித்தது எல்லாம் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
    • இவர் இளைஞர் நலத்துறை அமைச்சரும் நகரி எம்.எல்.ஏவுமாக இருக்கிறார்.

    ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் கடந்த 2 வாரமாக 'யாத்ரா' என்ற நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நடை பயணத்தின் போது முதல்- மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடும் விமர்சனம் செய்தார்.



    இதற்கு ரோஜா பதில் கூறுகையில், "பவன் கல்யாண் ஒரு நடிகர் என்பதால் அவரை பார்க்கத்தான் கூட்டம் வருகிறது. இதெல்லாம் ஓட்டாக மாறாது. பவன் கல்யாண் முதல்- மந்திரிக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் போது சன்னி லியோன் ஒழுக்கத்தை பற்றி வேதம் ஓதுவது போல் உள்ளது என்று பேசினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையத்திலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது.

    இந்தநிலையில் சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் ரோஜா பேசிய வீடியோவை வெளியிட்டு நான் ஆபாச நடிகைதான். ஆனால் எனது கடந்த காலத்தை நினைத்து ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை. உங்களை போல் இல்லாமல் நான் என்ன செய்ய விரும்பினாலும் அதை வெளிப்படையாகவே செய்வேன். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறினேன். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.



    • பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு பவன் கல்யாண் மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • ஜெகன்மோகன் ரெட்டி எப்போதாவது பவன் கல்யாண் குடும்ப உறுப்பினர்களை விமர்சித்து பேசி இருக்கிறாரா.

    திருப்பதி:

    ஜனசேனா கட்சி தலைவரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக பேசியுள்ளார்.

    இதற்கு மாநில மகளிர் ஆணையம் மற்றும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது.

    இந்த நிலையில் ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு பவன் கல்யாண் மன்னிப்பு கேட்க வேண்டும். பெண் கடத்தலில் தெலுங்கானா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது.

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை பவன் கல்யாண் விமர்சனம் செய்து பேச முடியுமா? அவ்வாறு பேசினால் அவர் ஐதராபாத்தில் வசிக்க முடியுமா.

    முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தாரையும் விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெகன்மோகன் ரெட்டி எப்போதாவது பவன் கல்யாண் குடும்ப உறுப்பினர்களை விமர்சித்து பேசி இருக்கிறாரா.

    வரும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தோல்வி அடையும் என பவன் கல்யாணுக்கு எந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எழுதிக் கொடுப்பதை பவன் கல்யாண் வெட்கமின்றி படிக்கிறார். இவர்களால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலர் மாநிலத்தை விட்டு தொழிற்சாலைகள் வெளியேறுவதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.
    • ஒய்.எஸ்.ஜெகன் என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு பிராண்ட்.

    திருப்பதி:

    ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா நேற்று நடந்த விழாவில் பேசியதாவது:-

    எங்கள் ஆட்சியில் தொழிலதிபர்களுடன் ரூ.13 லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஆனால், சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் மாநிலத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்ததாக தொழிலாளர்கள், டிரைவர்களுடன் ஒப்பந்தம் மட்டுமே செய்து கொண்டார்.

    சந்திரபாபு நாயுடு ஆட்சியில் மதுபான ஆலை தொழிலில் தான் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நம்பிக்கை வைத்து பெரிய தொழிலதிபர்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய வரிசையில் நிற்கிறார்கள்.

    அதன் மூலம் ரூ.13 லட்சம் கோடி மதிப்பீலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளோம். இதனால், மாநிலம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

    ஆனால், சிலர் மாநிலத்தை விட்டு தொழிற்சாலைகள் வெளியேறுவதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.

    மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சி நடப்பதை பார்த்து அனைவரும் பாராட்டுகின்றனர். ஒய்.எஸ்.ஜெகன் என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு பிராண்ட்.

    அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெறும் தேர்தலில் 175 தொகுதிகளில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இதற்காக மக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது.
    • இவர்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம் சரண் கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்த நிலையில், ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ராம் சரண்-உபாசனா

    இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான ரோஜா, ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தாத்தாவானதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சிரஞ்சீவி காரு. இதயத்தில் என்றும் இளமையாகவும் எப்போதும் ஆற்றல் மிக்க இந்த குடும்பத்தில் ஒரு அழகான மெகா இளவரசி ஆசீர்வதிக்கப்படுவது எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம்.

    அன்புள்ள ராம்சரண் நீ குழந்தையாக இருந்த போது உன்னை என் கைகளில் கட்டியணைத்த அந்த மறக்கமுடியாத நாட்களை நினைவு கூர்கிறேன், இப்போது உனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள் என்ற மகிழ்ச்சியான செய்தியை கேட்பது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. சிரஞ்சீவி காரு தாத்தா பட்டம் பெற்றாலும் நீங்கள் எவர்கிரீன் ஹீரோ தான். உபாசனா மற்றும் குட்டி மகாலட்சுமிக்கு என்னுடைய ஆசிர்வாதங்கள்" என்று மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.



    • நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
    • இவர் இளைஞர் நலத்துறை அமைச்சரும் நகரி எம்.எல்.ஏவுமாக இருக்கிறார்.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கிய ரோஜா ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமாக இருக்கிறார்.

    சென்னையில் உள்ள வீட்டில் நேற்று இரவு தங்கியிருந்த அமைச்சர் ரோஜாவுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. வலியால் அவர் அவதிப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரோஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரோஜாவின் கால் வீக்கத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    ரோஜாவின் கால் வீக்கத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதற்காக மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்பல்லோ மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு ரோஜாவின் கால் வலி குறைந்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அவர் விரைவில் விடுதிரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ரூ 2.27 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
    • சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது அறிவித்த 600 வாக்குறுதிகளில் 6 வாக்குறுதிகளை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சிகுருவாடா பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.

    அவர் ஆட்சியில் இருந்தபோது அறிவித்த 600 வாக்குறுதிகளில் 6 வாக்குறுதிகளை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

    முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ரூ 2.27 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். ஆந்திர மக்கள் இதனை ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

    முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து 3 வாக்குறுதிகளையும், கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த 2 வாக்குறுதிகளையும், பா.ஜ.க அளித்த ஒரு வாக்குறுதி என மொத்தம் 6 வாக்குறுதிகளை திருடி தற்போது அறிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா நேற்று இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
    • அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

    நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா நேற்று இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அதன்பிறகு கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.



    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரோஜா கூறியதாவது, "இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக ஜெகன்மோகன் இருக்கிறார். அனைத்து விதமான தேர்தல்களிலும் அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என்றார்.

    • இரு மாநில மக்களின் நன்மையைக் கருதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • ஆந்திர மாநில மக்கள் தலைகுனியும்படி ஆளுங்கட்சி தலைவர்கள் குடிகாரர்கள் போல பேசுகிறார்கள் இதனை நிறுத்த வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குறித்து புகழ்ந்து பேசினார்.

    ரஜினிகாந்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா மற்றும் ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகி ராமையா கூறியதாவது:-

    பிரபல நடிகர் ரஜினிகாந்த் குறித்து அமைச்சர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் கருத்துக்கள் தெரிவித்து விமர்சனம் செய்கின்றனர். தொடர்ந்து ரஜினியை விமர்சனம் செய்தால் ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே பகை, கருத்து வேறுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இரு மாநில மக்களின் நன்மையைக் கருதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ஆந்திர மாநில மக்கள் தலைகுனியும்படி ஆளுங்கட்சி தலைவர்கள் குடிகாரர்கள் போல பேசுகிறார்கள் இதனை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலையொட்டிய சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இதில் ரோஜா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலையொட்டிய சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் புஷ்கரணி விழாவில் 9-ம் நாள் விழா இன்று நடந்தது.

    புஷ்கரணியில் நேற்று மாலை நடந்த கங்கா ஆரத்தியில் நடிகையும், ஆந்திர மந்திரியுமான ரோஜா பங்கேற்று தரிசனம் செய்தார்.

    அதன்பின்னர் பேசிய ரோஜா, பெரிய நடிகர்களில் பேசி பேசியே ஜீரோ ஆனவர் நடிகர் ரஜினிகாந்த். இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும். என்.டி. ராமாராவ் மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார் என்று ரஜினிகாந்த் சொன்னது தவறு. ரஜினிகாந்த் ஏதோ தெரியாமல் தவறாக பேசுகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் தெரிந்தேதான் பேசி உள்ளார்.

    ரஜினிகாந்த் பேசியதை பார்த்து ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள என்.டி.ஆர். அபிமானிகள், மக்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். என்.டி.ஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்த் பேசுவது தவறு. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இல்லாத ரஜினிகாந்த் அழைத்தார் என்பதற்காக சந்திரபாபு நாயுடு வீட்டில் சாப்பிட்டு அவர் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படித்துள்ளார்.

    ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் ஐடியாவே இல்லாமல் பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு நடிகர்கள் போகும் போது அந்த மாநிலங்களை பற்றி தெரிந்து பேச வேண்டும். இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும். ரஜினிகாந்த் தான் பேசியது குறித்து தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.

    ஜெகன்மோகன் ரெட்டி மாதிரி ஒரு முதல்-மந்திரியை எங்குமே பார்க்க முடியாது. ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை செய்துள்ளார். மாணவர்கள் இடைநிற்றல் கூடாது என்பதற்காக கல்வி உதவி தொகைகளை அதிக அளவில் வழங்கி உள்ளார். இலவச கல்வியை ஆந்திர அரசே கொடுக்கிறது.

    சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பவன்கல்யாண், ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    ரோஜா ஆந்திராவில் ரஜினியை தாக்கி பேசி இருந்தார். இந்நிலையில் புதுவையில் மீண்டும் அவரை தாக்கி பேசியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • என்.டி.ஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்த் பேசுவது தவறு.
    • ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் ஐடியாவே இல்லாமல் பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலையொட்டிய சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா கடந்த 22-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் புஷ்கரணி விழாவில் 9-ம் நாள் விழா இன்று நடந்தது.

    புஷ்கரணியில் நேற்று மாலை நடந்த கங்கா ஆரத்தியில் நடிகையும், ஆந்திர மந்திரியுமான ரோஜா பங்கேற்று தரிசனம் செய்தார்.

    பெரிய நடிகர்களில் பேசி பேசியே ஜீரோ ஆனவர் நடிகர் ரஜினிகாந்த். இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும். என்.டி. ராமாராவ் மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார் என்று ரஜினிகாந்த் சொன்னது தவறு. ரஜினிகாந்த் ஏதோ தெரியாமல் தவறாக பேசுகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் தெரிந்தேதான் பேசி உள்ளார்.

    ரஜினிகாந்த் பேசியதை பார்த்து ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள என்.டி.ஆர். அபிமானிகள், மக்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். என்.டி.ஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்த் பேசுவது தவறு. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இல்லாத ரஜினிகாந்த் அழைத்தார் என்பதற்காக சந்திரபாபு நாயுடு வீட்டில் சாப்பிட்டு அவர் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படித்துள்ளார்.

    ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் ஐடியாவே இல்லாமல் பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு நடிகர்கள் போகும்போது அந்த மாநிலங்களை பற்றி தெரிந்து பேச வேண்டும். இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும். ரஜினிகாந்த் தான் பேசியது குறித்து தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.

    ஜெகன்மோகன் ரெட்டி மாதிரி ஒரு முதல்-மந்திரியை எங்குமே பார்க்க முடியாது. ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை செய்துள்ளார். மாணவர்கள் இடைநிற்றல் கூடாது என்பதற்காக கல்வி உதவி தொகைகளை அதிக அளவில் வழங்கி உள்ளார். இலவச கல்வியை ஆந்திர அரசே கொடுக்கிறது.

    சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பவன்கல்யாண், ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை ரோஜா ஆந்திராவில் நடிகர் ரஜினியை தாக்கி பேசி இருந்தார். இந்த நிலையில் புதுவையில் மீண்டும் அவரை தாக்கி பேசியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×