search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராம்நாத் கோவிந்த்"

    • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
    • திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது.

    இதையடுத்து, பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.

    திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார்.

    • திரவுபதி முர்மு, வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா, உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டனர்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார்.  


    இந்த விருந்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்துடன் பங்கேற்றார். மேலும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


    மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்வர்கள், பத்ம விருது பெற்றவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர். 


     மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில் திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார். 

    • உலகிலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா.
    • நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் உறுதிப்பாடு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்து உள்ளது.

    டெல்லியில் நேற்று மை ஹோம் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இளைஞர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பங்கேற்று உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    உலகிலேயே வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் உள்ள நாடு இந்தியா. இது நம் நாட்டிற்குக் கிடைத்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை நல்லவிதமாக பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

    நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில், இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் உறுதிப்பாடு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தே உள்ளது.

    நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் மிகவும் பழமையானது. பண்டைக் காலத்திலிருந்தே, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை நாம் பின்பற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மகாராஷ்டிர முதல் மந்திரி, துணை முதல் மந்திரி ஆகியோர் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தனர்.
    • ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளனர்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்துப் பேசினர்.

    தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது மகாராஷ்டிராவின் தற்போதைய நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

    மேலும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் சந்தித்தனர்.

    ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளனர்.

    • கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டபோது அங்கிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
    • குர்லாவில் கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இடிபாடுகளில் இருந்து 2 புறாக்கள் உயிருடன் மீட்கப்பட்டன.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் குர்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது.

    தகவலறிந்து தீயணைப்புப் படையினரும், போலீசாரும் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

    இதற்கிடையே, குர்லா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குர்லாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டபோது அங்கிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மேலும், 2 புறாக்களும் உயிருடன் மீட்கப்பட்டன.

    இந்நிலையில், மும்பை கட்டிட விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • ஆதரவற்ற பெண்களுக்கான சமூக, தார்மீக உரிமைகள் பாதுகாப்பை ஊக்குவிக்க வேண்டும்.
    • நமது கலாச்சாரத்தில் பெண்கள் தேவதைகளாக போற்றப்படுகின்றனர்.

    பிருந்தாவனம்:

    உத்திரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணா குடிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு தங்கியுள்ள ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசியதாவது: பெண்கள் எங்கு மதிக்கப்படுகிறார்களோ, அங்கு கடவுள் வசிப்பார் என்றும் சொல்வது உண்டு. நமது கலாச்சாரத்தில் பெண்கள் தேவதைகளாக போற்றப்படுகின்றனர்.

    ஆனால், நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் பல்வேறு சமூக தீமைகள் இருந்து வருகின்றன. குழந்தை திருமணம், சதி, வரதட்சணை, விதவை வாழ்க்கை போன்ற சமூக தீமைகள் நமது கலாச்சாரம் மீது படிந்த கறைகள்.

    ஒரு பெண்ணின் கணவர் உயிரிழந்த பிறகு, அந்தபெண்ணின் குடும்பம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாய போக்கும், அவருக்கு எதிரானதாக மாறிவிடும். கணவனை இழந்த விதவை பெண்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை தடுத்து நிறுத்த சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்.

    ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வாழ்ந்த மகான்களும், சமூக சீர்திருத்த வாதிகளும், இதுபோன்ற தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கடினமான வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாக சாகர் மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் இத்தகைய முயற்சியில் ஓரளவு வெற்றிபெற்ற போதிலும், இதில் இன்னும் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

    கிருஷ்ணா குடில் போன்ற ஆதரவற்ற பெண்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்குவதற்கு பதிலாக, மறுமணம், பொருளாதார சுதந்திரம், குடும்ப சொத்தில் சம பங்கு மற்றும் ஆதரவற்ற பெண்களின் சமூக மற்றும் தார்மீக உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா தலைமையில் இந்தியா வந்துள்ள எம்.பி.க்கள் குழு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்துள்ளனர். #Srilanka #India
    புதுடெல்லி:

    இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா, எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் உள்பட 11 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். டெல்லியில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்து அவர்கள் பேசினர்.

    பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இலங்கை வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்கள் விவகாரம் தொடர்பாக பேசப்பட்டது. 13வது அரசியல் சாசன திருத்தம் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


    ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பல்கேரியாவில் மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை நேற்று திறந்து வைத்தார். #RamNathKovind
    சோபியா :

    ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஐரோப்பிய நாடுகளான சிப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    பயணத்தின் முதல் நாடாக கடந்த 2-ம் தேதி சிப்ரஸ் பயணம் செய்த அவர், அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். பின்னர் பகேரியா சென்ற அவர் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று அந்நாட்டில் உள்ள சோபியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

    இதைத்தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி ருமேன் ராடேவுடன் நடந்த சந்திப்பில் பல்கேரியா-இந்தியா இடையே அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா, அணுசக்தி மற்றும் பிறதுறைகளில் கூட்டுறவை மேற்கொள்ளும் வகையில் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

    இறுதியாக, சோபியாவில் உருவாக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார்.

    அதன் பின்னர் பல்கேரியா பயணத்தை நிறைவு செய்த அவர் அங்கிருந்து செக் குடியரசு சென்றடைந்தார். #RamNathKovind
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு ஒரு வாரம் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
    புதுடெல்லி :

    ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சிப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.

    தனது பயணத்தின் முதல் நாடாக வரும் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சிப்ரஸ் பயணம் செய்யும் ராம் நாத் கோவிந்த், அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.

    இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை பகேரியா செல்லும் அவர், இந்த பயணத்தில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று அந்நாட்டில் உள்ள சோபியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார்.

    தனது பயணத்தின் மூன்றாம் கட்டமாக 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை செக் குடியரசு நாட்டிற்கு அவர் பயணம் செய்கிறார்.
    கேரள மாநிலத்தின் தற்போதைய வெள்ள நிலைமை மற்றும் பாதிப்புகள் தொடர்பாக அம்மாநில கவர்னர் மற்றும் முதல் மந்திரியிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். #KeralaFloods
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர். பல மாவட்டங்களை சூழ்ந்துள்ள பெருவெள்ளத்தால் பல லட்சம் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சுமார் 4 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    நேற்று கேரளாவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாறு பார்வையிட்டார். மாநில அரசின் நிவாரணப் பணிகளுக்கு உடனடியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் அவர் உத்தரவிட்டார்.


    இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் இருந்து கேரள கவர்னர் சதாசிவம் மற்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தற்போதைய வெள்ள நிலவரம் மற்றும் பாதிப்புகள் தொடர்பாக அவர்களிடம் கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’கேரள மக்களுக்கு ஒட்டுமொத்த இந்தியர்களும்  பக்கபலமாக இருப்பார்கள் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய அரசும் கேரள அரசும் ஒன்றிணைந்து உத்வேகத்துடன் செயலாற்றி வருவது தொடர்பாக தனது மனநிறைவை அவர் வெளிப்படுத்தியதுடன் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மத்திய - மாநில அரசு அதிகாரிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புணர்வுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #keralaflood #presidentRamnathkovind #keralafloodsituation #KeralaFloods #KeralaReliefFund
    கேரள சட்டசபையின் வைரவிழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அம்மாநிலத்தில் நடந்து வரும் அரசியல் படுகொலைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். #Kerala #PresidentKovind
    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபையின் வைரவிழா நிகழ்ச்சியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார். ‘ஜனநாயக திருவிழா’ என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி சில நாட்களுக்கு நடக்க உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி, அம்மாநிலத்தில் நடக்கும் அரசியல் கொலைகள் குறித்து வேதனை தெரிவித்தார்.

    ‘விவாதங்கள், பரஸ்பர மரியாதை, மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் குணம் ஆகியவை கேரள சமூகத்தின் அடையாளம் ஆகும். ஆயினும் கூட, கேரளாவின் சில பகுதிகளில் நடக்கும் அரசியல் வன்முறை முரண்பாடாக உள்ளது. இந்த அரசியல் வன்முறைகள் துரதிர்ஷ்டவசமானது. நம்முடைய அரசியல் சாசனத்தில் வன்முறைகளுக்கு இடமில்லை’ என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் பங்கேற்று பேசினர். 
    சத்தீஸ்கர் மாநிலத்தில் உரையற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நமது அரசியலமைப்பு சட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார். #RamNathKovind
    ராய்பூர் : 

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று சத்தீஸ்கர் மாநிலம் வந்தடைந்தார். அம்மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் முதற்கட்டமாக 
    அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழு பிரதிநிதிகளிடம் கலந்துரையாடினார்.

    அதைத்தொடர்ந்து, பயணத்தின் இரண்டாம் நாளான இன்று  பாஸ்தர் மாவட்டம், திம்ராபால் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள லெப்டினட் பாலிராம் காஷ்யாப் நினைவு மருத்துவ கல்லூரியை ராம்நாத் கோவிந்த் நாட்டுக்கு அர்பணித்து வைத்தார். பின்னர் அங்கு உரையாற்றிய அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    நாட்டின் சில பகுதிகளில் உள்ளவர்கள் நக்சலைட்டுகளால் தவறாக வழிநடத்தப்பட்டு சமூகத்தில் வனமுறையையும், பயத்தையும் உருவாக்குகிறார்கள். நமது கலாச்சாரம் பண்பாட்டில் மட்டும் அல்ல நமது அரசியலமைப்பு சட்டத்திலும் வன்முறைக்கு இடம் இல்லை.

    நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செயலப்டுத்திய சத்தீஸ்கர் அரசுக்கும் அதற்கு ஆதரவாக இருந்த மக்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். 

    மாநில நிர்வாகமும் ’புத்திசாலித்தனமான மக்களும்’ வழிதவறிய இளைஞர்களின்(நக்சல்) நம்பிக்கையை முறியடித்தை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

    கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் நாட்டுக்காக தியாகம் செய்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நான் தலை வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #RamNathKovind
    ×