search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகை"

    • வைப்புத்தொகை சலுகையை 500 சதுர அடி குடியிருப்பிற்குள் வழங்க வேண்டும்
    • மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது ஏழை மக்கள் குடியிருப்பில் உள்ள பொது குழாய்களை அகற்றக்கூடாது, வைப்புத்தொகை சலுகையை 500 சதுர அடி குடியிருப்பிற்குள் வழங்க வேண்டும், அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அப்போது போராட்டக்காரர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    • 15 குடும்பங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு விவவாயி ஒருவரிடம் விவசாய தரிசு நிலத்தை ஆதிதிராவிட நலத்துறை மூலம் விலைக்கு வாங்கி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
    • மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையில் செல்லக்கூடாது என ஊருக்கு அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், வடுகப் பட்டி ஊராட்சி, தாதவராயன்குட்டை கிராமம், புதுகாலனி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த 15 குடும்பங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு விவவாயி ஒருவரிடம் விவசாய தரிசு நிலத்தை ஆதிதிராவிட நலத்துறை மூலம் விலைக்கு வாங்கி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதனையடுத்து, அங்கு வீடு கட்டி வசித்து வந்தனர். இந்த மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையில் செல்லக்கூடாது என ஊருக்கு அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர். அதனையடுத்து, நேற்று மதியம் 15 குடும்பத்தினரும் வடுகப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சர்வே செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து வடுகப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். முற்றுகை போராட்டம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து, மக்கள் சங்ககிரி வந்து ஆர்.டி.ஓ., லோகநாயகியிடம் புகார் அளித்தனர். அப்போது அவர், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அளவீடு செய்யும் வரை விவசாய நில உரிமையாளர்கள் தடுக்க கூடாது என உத்திரவிட்டார். அதனையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    சென்னை:

    மணிப்பூர் கலவரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சென்னை மாவட்ட செயலாளர் செல்வா தலைமையில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    • மீன் பிடிப்பதில் தகராறு தொடர்பாக ஐ.ஜி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
    • முற்றுகையால் திருச்சியில் இன்று காலை பரபரப்பு நிலவியது

    திருச்சி, ஜூலை.20-

    திருச்சி மாவட்டம் நத்தமாடிபாட்டி கீழகுறிச்சி கிராமத்தில் கடந்த 300 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் ஊர் பொதுகுளத்ததை அப்பகுதி கிராம மக்கள் ஆடுமாடுகளுக்கு தண்ணீர் காட்டுவதற்காகவும், மீன் பிடிப்பதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் வந்த பிறகு கடந்த 6 வருட காலமாக ஊர் பஞ்சாயத்து கட்டுபாட்டில் சென்ற நிலையில், அதில் மீன்குஞ்சுகள் விடப்படாமல் இருந்தது.இந்நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் சேர்ந்து கடந்த மாதத்திற்கு முன்பு மீன்குஞ்சுகள் விட்டு, நேற்று மீன் பிடிக்க சென்ற போது, அங்கு வந்த ஒருவர் இந்த குளம் தங்களுடைய கட்டுபா ட்டில் உள்ளது என்று கூறி தனக்கு ஒரு தொகையை கொடுத்துவிட்டு, மீன்பிடி யுங்கள் என்று கூறியதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து அந்த நபர் திரு வெறும்பூர் காவல்நி லையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்று விடியற்காலை 4 மணிக்கு வீட்டில் புகுந்து காவல்து றையினர் 6 பேரை கைது செய்துள்ளனர்.இதனை கண்டித்து இன்று திருச்சி மத்திய மண்டல ஐஐி அலுவலகத்தை அக்கிராமத்தை சேர்ந்த 150 பேர் முற்றுகையி ட்டுள்ளனர். எந்தவித முகாந்தி ரமும் இல்லாமல் கைது செய்ய ப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றுகூறி கோரிக்கைவிடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
    • பிரதான நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.

    பேச்சுவார்த்தை

    அப்போது அங்கு பிரதான நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு கொடுக்க அனைவரையும் அனுமதிக்க முடியாது. எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதிகபட்சம் 5 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றனர்.

    இதனை தொடர்ந்து 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். அவர்கள் மனு கொடுத்து விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக விரோதிகள் அட்டகாசம்

    வாய்க்கால் பட்டறை அரசு பள்ளி அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த பகுதியில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பதும், மது குடிப்பதும் என அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நடந்து செல்லும் பெண்களை தகாத வார்த்தையில் பேசி மிரட்டி வருகின்றனர்.

    மேலும் கடந்த 8-ந் தேதி சிறுமி ஒருவரை தகாத வார்த்தையில் பேசி உள்ளனர். இதனால் தட்டி கேட்ட எங்கள் மீது மர்ம கும்பல் சரமாரியாக தாக்கினர்.

    இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    எனவே அப்பகுதியில் கஞ்சா, மது குடித்து ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக கைது செய்து பொதுமக்களை அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கார்த்தி (25). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
    • அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த செலவடை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் கார்த்தி (25). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கள்ளத்தொடர்பு

    அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

    இதையடுத்து கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் கார்த்திக்குடன் ஊரைவிட்டு சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    முற்றுகை

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இருவரையும் பிடித்து இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர், ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
    • வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என முத்திரையிட வலியுறுத்தல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குன்னம் தாலுகா ஓலைப்பாடி புதுக்காலனி, கீழப்புலியூர் சிலோன் காலனி மற்றும் வேப்பந்தட்டை தாலுகா கள்ளப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட (100 நாள் வேலை) தொழிலாளர்கள் தனித்தனி குழுவாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி அவர்கள் கூறுகையில், தற்போது 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் அடையாள அட்டையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்று பி.ஐ.பி.-எச்.எச். முத்திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் எங்களின் அடையாள அட்டையில் அந்த முத்திரையிடப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை ஆய்வு செய்து எங்களுக்கும் அடையாள அட்டையில் அந்த முத்திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

    • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • போதை ஆசாமிகளால் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவதில்லை.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை- சிவகங்கை பிரதான சாலையில் திரு மணவயல் கிராமம் உள்ளது. இங்குள்ள கோவில் எதிரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும் குடிமகன்களால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.போதை ஆசாமிகளால் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவதில்லை. பள்ளி கல்லூரி, மாணவிகள் ரோட்டில் செல்லும் பொழுது மது பிரியர்களின் அச்சுறுத்தல் உள்ளது.மேலும் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

    எனவே கோவில் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த இரண்டு நாட்களாக மக்னா யானை சரளப்பதி கிராமத்துக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
    • ஒரு வாரத்தில் பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே சுற்றித்திரியும் மக்னா யானையை பிடித்து கும்கியாக மாற்ற கோரி, ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்து வந்ததால், கடந்த 5 மாதங்களுக்கு முன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை, பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

    இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய மக்னா யானை, கோவையை அடுத்த மதுக்கரை அருகே வைத்து மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மானாம்பள்ளி அருகே மந்திரி மட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அங்கிருந்து டாப்சிலிப் பகுதிக்கு இடம் பெயர்ந்த மக்னா யானை அங்கிருந்து மீண்டும் வெளியேறி சரளப்பதி கிராமத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது.

    கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மக்னா யானை, அப்பகுதியிலுள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த இரண்டு நாட்களாக மக்னா யானை சரளப்பதி கிராமத்துக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர், அங்கிருந்த ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப் பாதுகாவலர் செல்வத்திடம், மக்னா யானையை பிடித்து கும்கியாக மாற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.

    சென்னையில் உள்ள மேல் அதிகாரிகள் அனுமதி அளித்தால் மட்டுமே, மக்னா யானையை பிடிக்க முடியும். தற்போது மக்னா யானை கிராமத்துக்குள் நுழையாமல் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். யானையை பிடிப்பது குறித்து மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

    இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, கிராமத்தில் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வரும் மக்னா யானையை இன்னும் ஒரு வாரத்துக்குள் பிடிக்காவிட்டால், மூன்று கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • தனியார் நிறுவன கணக்காளர் தற்கொலை
    • குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி நிரப்புரோடு லட்சுமி இல்லத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 50). பிரபல நிறுவனத்தில் கணக்கதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி நளினி (45). இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஹரிஹரன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டை அப்பகு தியை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இதில் இவர்களுக்குகிடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டை காலி செய்யும்படி ஹரிஹ ரன் பலமுறை கூறியுள்ளார். ஆனால் அவர் வீட்டை காலி செய்யவில்லை. இதனால் அவர் பத்துகாணி போலீஸ் நிலையத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இத னால் மனம் உடைந்து போன ஹரிஹரன் மனை விக்கு மெசெஜ் அனுப்பி விட்டு மார்த்தாண்டத்தில் உள்ள லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி நளினி மார்த்தாண் டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்தரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்நிலையில் அவரது உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஹரிஹரனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் மற்றும் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் வந்தனர். மார்த்தாண்டம் போலீசார் ஹரிஹரன் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டு எடுத்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தங்களது வீடு மற்றும் ஒரு ஏக்கர் நிலத்தையும் மீட்டு கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து அவரது உடலை எடுத்து செல்ல முடியும் எனவும் எங்களுக்கு வேறு இடம் கிடையாது எனவும் தெரிவித்தனர். போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் போலீஸ் நிலையம் பரபரப்புக்குள்ளானது.

    இதனை அடுத்து நள்ளிரவில் போலீசாரின் உதவியுடன் ஹரிஹரனின் வீட்டை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். வீட்டிலிருந்த அந்த கும்பலை வெளியேறும்படி கோஷங்களை எழுப்பினர். இதனை அடுத்து அங்கு இருக்க முடியாது என புரிந்து கொண்ட அந்த கும்பல் வீட்டில் இருந்து வெளியேறியது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் சேர்ந்து ஹரிஹரன் குடும்பத்தாரை வீட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.

    இந்நிலையில் இன்று ஹரிஹரன் குடும்பத்தாரை போலீசார் அழைத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இன்று அவரது உடல் அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வேப்பந்தட்டை அருகே கடன் வாங்கி ஏமாற்றிய ஆசிரியர் பள்ளிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
    • ஆசிரியர் ஒருவர் கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் பணிபுரிந்தபோது பொதுமக்களிடம் வட்டிக்கு கடனாக பல லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் பணிபுரிந்தபோது பொதுமக்களிடம் வட்டிக்கு கடனாக பல லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பணத்தை திருப்பி தராமல் அரும்பாவூர் பள்ளிக்கு பணி மாறுதலாகி சென்று விட்டார். இந்தநிலையில் மீண்டும் விசுவக்குடி பள்ளிக்கு பணி மாறுதலாகி நேற்று வேலைக்கு வந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியர் இந்தப் பள்ளியில் பணிபுரிய கூடாது. பணிக்கு வந்தால் நாங்கள் பள்ளியை இழுத்துப்பூட்டுவோம் என கூறி முற்றுகையிட்டனர்.

    இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மாலா ரோஸ்லின் இந்த தகவலை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அம்சவள்ளிக்கு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அம்சவள்ளி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் இந்த பள்ளியில் இருந்து அந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்படுவார் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஏக்குனி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர்.
    • 24 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா உல்லத்தி ஊராட்சியில் பன்னிபுரா, ஏக்குனி உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் மலைவேடர் இனத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. இதில் ஏக்குனி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர். அப்போது பன்னிபுரா, ஏக்குனி பகுதி மலைவேடர் இனத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஏக்குனி பள்ளிக்கூடத்தை காலை 10 மணிக்கு திடீரென முற்றுகையிட்டனர்.

    மேலும் அப்பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை வகுப்புகளில் இருந்து வெளியே அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மலை வேடர் இன மக்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள பழனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மலை வேடர் இன மக்கள் வசித்து வருகிறோம். கடந்த 1999-ம் ஆண்டு வரை எங்களுக்கு இந்து மலைவேடர் பழங்குடியினர் என குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால் அதன் பின்னர் 24 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்க வில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எங்களின் குழந்தைகள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் படித்து என்ன பயன். லட்சியத்துடன் படிக்கும் மாணவர்கள் எதிர்காலம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது, இதனால் பள்ளிக்கூடங்களில் படிக்கும் எங்கள் குழந்தைகளின் மாற்று சான்றிதழை கேட்டு பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பங்கள் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் ஆவேசமாக கூறினர்.

    தகவல் அறிந்த ஊட்டி வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து மலைவேடர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தங்கள் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மலை வேடர் இன மக்கள் தெரிவித்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×