search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கட்டண உயர்வு"

    • 10 முதல் 20 தறிகள் வரை வைத்து நெசவு தொழில் செய்து வருகிறோம்.
    • 750 யூனிட் இலவசம் மின்சாரம் பெற்று வருகிறோம்.

    பல்லடம் :

    மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வருக்கு விசைத்தறியாளர்கள் பதிவுத் தபால் அனுப்பும் நிகழ்வை தொடங்கினர்.

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், திருப்பூர், கோவை மாவட்டங்களில், 10 முதல் 20 தறிகள் வரை வைத்து நெசவு தொழில் செய்து வருகிறோம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பஞ்சு நூல் விலை உயர்வு, கூலி உயர்வு பிரச்னை என அடுத்தடுத்த பிரச்னைகளால் எண்ணற்ற பாதிப்புகளை சந்தித்தோம்.கூலி அடிப்படையில் 24 மணி நேரமும் உற்பத்தி நடந்து வரும் இத்தொழிலில் மாதம், 25 - 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இதில் 10 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணத்துக்கேசென்றால் எவ்வாறு குடும்பம் நடத்த முடியும்? நலிந்து வரும் விசைத்தறி தொழிலுக்காக, 750 யூனிட் இலவசம் மின்சாரம் பெற்று வருகிறோம்.

    கடந்த 2012ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது கோரிக்கையை ஏற்று ரத்து செய்யப்பட்டது. தற்போது 36 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால் ஒட்டுமொத்த விசைத்தறி தொழிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலின் நிலையை கருத்தில் கொண்டு, விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு 2 ஆயிரம் தபால்கள் அனுப்பும் நிகழ்வை துவங்கியுள்ளோம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்களும், தொழில்களும் பாதிப்படையும்
    • மத்திய, மாநில அரசுகளின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் மத்திய அரசு பால், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்தை கண்டித்தும்,உடனடியாக உயர்த்தப்பட்ட வரி மற்றும் மின் கட்டணத்தை திரும்ப பெறக் கோரி திருப்பூர் ரயில்நிலையம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்களும், தொழில்களும் பாதிப்படையும்.இதே போல் மத்திய அரசு அரிசி பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.மத்திய மாநில அரசுகளின் இச்செயலை கண்டித்து திருப்பூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பாரி கணபதி தலைமையில்,திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சோனை முத்து,மாவட்டத்துணைத் தலைவர் முருகேசன், பொருளாளர் சக்திவேல், இளைஞரணி முருகன், மாணவரணி வேலுச்சாமி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது.

    பல்லடம் :

    பல்லடத்தில் திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி, கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார், வேலம்பாளையம் தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் பாலாஜி வரவேற்றார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் விசைத்தறிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு மானியமாக வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழக விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது, முதல்வரின் கவனத்திற்க்கு செல்லும் வகையில் வருகின்ற 8 ந்தேதி திங்கட்கிழமையன்று ஒருநாள் விசைத்தறிகளை அடையாள வேலை நிறுத்தம் செய்து குடும்பத்துடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின்கட்டண உயர்வை அரசே மானியமாக வழங்கிடக் கோரி மனு அளிப்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், கோபால், பழனிசாமி, பூபதி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கருத்து கூற விரும்புவோர் மின் வாரிய இணையதளத்தில் லேட்டஸ்ட் நியூஸ் பகுதிக்கு சென்று மின் கட்டண மனு மீதான லிங்கை 'கிளிக்' செய்ய வேண்டும்.
    • இணையதளத்தில் தெரிவிக்கும் கருத்துக்கு மின் வாரியம் விரைந்து பதில் அளிக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    அதன்படி 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயருகிறது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ரூ.27.50-ம், 300 யூனிட்வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.72.50-ம் உயர்த்தப்படுகிறது.

    இதே போல் 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டு வரை மின் நுகர்வு, செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.147.50 உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக மின்வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தி தர கோரும் மனுவை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமீபத்தில் தாக்கல் செய்தது.

    இந்த மனுவை ஆய்வு செய்த ஆணையம் மின் கட்டண மனுக்களை இணையதளத்தில் வெளியிட்டு, அவற்றின் மீது பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு அடுத்த 30 நாட்களுக்குள் அதாவது ஆகஸ்டு 22-ந்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மின் வாரியத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன் அனைவரின் கருத்துக்களுக்கும் உரிய பதில் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

    அதன்படி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் www.tnerc.gov.in மற்றும் மின் வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணைய தளங்களில் மின் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இவற்றை மக்கள் படித்து பார்த்து ஆலோசனை மற்றும் கருத்துக்களை ஆகஸ்டு 17-க்குள் ஆணைய செயலர் மற்றும் மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலருக்கும் தபாலில் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தபாலில் அனுப்ப காலதாமதம் ஏற்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து இணையதளத்தில் கருத்துக்களை தெரிவிக்கும் வசதியை மின்வாரியம் தற்போது ஏற்படுத்தி உள்ளது.

    இதன் வாயிலாக கருத்து கூற விரும்புவோர் மின் வாரிய இணையதளத்தில் லேட்டஸ்ட் நியூஸ் பகுதிக்கு சென்று மின் கட்டண மனு மீதான லிங்கை 'கிளிக்' செய்ய வேண்டும்.

    அந்த பக்கத்தின் கடைசியில் இணையதளத்தில் கருத்து தெரிவிக்கும் 'லிங்க்' உள்ளது. அதில் சென்று செல்போன் எண்ணை பதிவிட்டதும், அந்த எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை ரகசிய எண்ணை பதிவிட வேண்டும்.

    பிறகு அந்த பக்கத்திற்கு சென்று கருத்துக்களை தெரிவிக்கலாம். இணையதளத்தில் தெரிவிக்கும் கருத்துக்கு மின் வாரியம் விரைந்து பதில் அளிக்கும்.

    தற்போது பலரும் செல்போன்களை பயன்படுத்துவதால் அதிலும் மின்வாரிய இணையதளத்திற்கு சென்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    • ஆர்ப்பாட்டம் முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • சென்னை மற்றும் சென்னை புறநகரை சேர்ந்த 9 மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு முடிவு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்றும், அதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என்றும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி, அ.தி.மு.க.வினர் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் சண்முகம் சாலையில் மாவட்டச் செய லாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி. கே.எம்.சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. கனிதா சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர். மதுரவாயலில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியதுடன், மின் கட்டணத்தையும் குறைக்க வலியுறுத்தினர்.

    கன்னியாகுமரியில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையிலும், தேனியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னையில் நாளை (புதன்கிழமை) அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. நாளை காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக நடத்தப்படும் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் இதுவாகும். எனவே நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மற்றும் சென்னை புறநகரை சேர்ந்த 9 மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

    9 மாவட்ட அ.தி.மு.க.வினர் ஒரே இடத்துக்கு வருவதால் நாளை காலை கலெக்டர் அலுவலக பகுதியில் மிகப்பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை ஆர்ப்பாட்டத்துக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் டி.ஜெயக்குமார், வடசென்னை (தெ) (மே) மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, தென் சென்னை (வட)(கி) மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம், தென்சென்னை (தெ) (மே) மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, வட சென்னை வடக்கு (மே) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு, தென்சென்னை (வ) (வ) மாவட்ட செயலாளர் தி.நகர் பி.சத்யா, வடசென்னை வடக்கு (கி) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தென்சென்னை (தெ) (கி) மாவட்ட செயலாளர் எம்.கே.அசோக், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆகியோர் செய்து உள்ளனர்.

    • த.மா.கா. கொங்கு மண்டலம் சார்பில் வருகிற ஜூலை 30-ந்தேதி திருப்பூர் மாநகராட்சி முன்பு எனது ஜி.கே.வாசன் தலைமையில் அடையாள ஆர்ப்பாட்டம்.
    • கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    த.மா.கா. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாவட்ட ஆட்சியரிடம், மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட, நிர்வாகிகளால் மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் அவற்றை வலியுறுத்தி திருப்பூரில் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

    த.மா.கா. கொங்கு மண்டலம் சார்பில் வருகிற ஜூலை 30-ந்தேதி (சனிக்கிழமை) காலை10.30 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி முன்பு எனது (ஜி.கே.வாசன்) தலைமையில் "அடையாள ஆர்ப்பாட்டம்" நடைபெறுகிறது.

    இதில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். இயக்க நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆர்ப்பாட்டத்தில் எம். எஸ் .எம் .ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
    • ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம். எஸ் .எம் .ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில்மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் பிரனேஸ்,அன்புராஜ், முருகேஷ் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மங்கலம் பகுதி அ.தி.மு.க.வினர் உடுமலை ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர். மங்கலம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவரும்,அதிமுக. முன்னாள் மங்கலம் ஊராட்சி க செயலாளருமான சுப்ரமணியம், முன்னாள் பாசன சபை தலைவர் சௌந்தரராஜன், மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் முத்துக்குமார், எம்.செட்டிபாளையம்-ஜெயம் என்.மகேந்திரகுமார்,நல்லிநகர் கிளைசெயலாளர் அங்காளம்மன் நடராஜ், சின்னப்புத்தூர் காளியப்பன்

    , ஜே. ஜே. நகர் சரவணன், மகேஷ் குமார், பெரியபுத்தூர் கோபால் ,சுப்ரமணி, மேட்டுபாளையம் மணி, ராமர், ஆனந்த், புக்குளிபாளையம் துரை, மூர்த்தி , தமிழ் , கண்ணன் , மங்கலம் எம்.ஆர்.எம்.பாபு, நாசர், மன்சூர், ரகுமான்அகமது, கத்தாபி, இந்தியன் நகர் சரவணன், ஆரோக்கியசாமி, ரோஸ் கார்டன் பெயிண்டர் சுப்பிரமணி , எம்ஜிஆர். சக்தி, செட்டிபாளையம் சுந்தரமூர்த்தி, கருப்புசாமி, லோகநாதன், ஆனந்தன், பத்மநாதன், வெங்கடேஸ்வரா நகர் ராமர், அஜித் கோவிந்தன், சத்யா நகர் ரவி, பாரதி நகர் பாலு, சுல்தான்பேட்டை ஆறுமுகம், மூர்த்தி, எம். மூர்த்தி, நீலி பிரிவு வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று மாலை 3மணிக்கு திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    • பொன்னேரி அண்ணா சிலை அருகில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வினை திரும்ப பெற கோரியும், சொத்து வரி உயர்வினை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, மின்கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், மதனந்தபுரம் பழனி, கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, தும்பவனம் ஜீவானந்தம், ஜெயராஜ், திலக் குமார், படு நெல்லி தயாளன், கரூர் மாணிக்கம், வாலாஜாபாத் ஹரிகுமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி அண்ணா சிலை அருகில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன் ராஜா, விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், கோபால் நாயுடு, முத்துக்குமார் நகர செயலாளர் செல்வகுமார், பட்டாபி, எஸ்.டி.டி.ரவி, பா. சங்கர், கவுன்சிலர்கள் சுமித்ரா குமார், பானு பிரசாத், கிருஷ்ணா பிரியா வினோத், செந்தில் குமார், ஸ்ரீதர், டிசி மகேந்திரன், கோளுர் குமார், எம் எஸ் எஸ் சரவணன், மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி. வி.ரமணா தலைமை தாங்கினார். இதில் மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளைக்கழக திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. கனிதாசம்பத், மாவட்ட துணை செயலாளர் ப.தன்சிங் , என்.சி.கிருஷ்ணன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சாந்தகுமார், பகுதி செயலாளர்கள் ஜெயபிரகாஷ், அப்பு வெங்கடேசன், மோகன் கோபிநாதன் ,எல்லார் செழியன், கூத்தன் ஜெகன் வழக்கறிஞர் சதீஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தற்போது யூனிட்டுக்கு 70 பைசா உயா்த்தி இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.
    • லட்சக்கணக்கான விசைத்தறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை காக்க விசைத்தறிக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மின் கட்டண உயா்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலாளா் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தோ்தல் அறிக்கையில் இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயா்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை அமல்படுத்தாமல் தற்போது யூனிட்டுக்கு 70 பைசா உயா்த்தி இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. விசைத்தறி தொழில் ஏற்கெனவே நலிவடைந்துள்ள நிலையில் இந்த மின் உயா்வால் விசைத்தறியாளா்கள் பாதிப்படைவா்.எனவே, லட்சக்கணக்கான விசைத்தறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை காக்க விசைத்தறிக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின் கட்டண உயர்வை கண்டித்து தவளக்குப்பத்தில் உள்ள மின் துறை அலுவலகம் முன்பு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதுவை காங்கிரஸ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தவளக்குப்பத்தில் உள்ள மின் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாரதீய ஜனதா மாநில துணை தலைவர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சக்திபாலன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்க.விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர்.

    மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மணவெளி தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், மாவட்ட தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், பிரகாஷ், அணி நிர்வாகிகள் மகேஷ் ரெட்டி, கோபி, வடிவேலு, தினகரன், தொகுதி பொதுச் செயலாளர்கள் சுகுமாறன், கலைவாணன்,

    துணைத்தலைவர் சுரேஷ், விவசாய அணி பாரதி மோகன், வைரமுடி, திருவேங்கடம், சண்முகம், இளைஞர் அணி சிலம்பரசன், பிரபாகரன், மகளிர் அணி சுமதி, வள்ளி, வீரம்மாள், சாந்தி, செல்வி, ராஜேஸ்வரி, கவுசல்யா, பூரணாங்குப்பம் சண்முகம், எஸ்.சி., எஸ்.டி. மோர்சா திலீபன், வீரப்பன், தவளக்குப்பம் இளஞ்செழியன், மணவெளி தங்கதுரை, எடையார்பாளையம் அசோக் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×