என் மலர்
நீங்கள் தேடியது "Registered post"
- கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் மக்களால் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.
- விநியோக வேகம் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையின் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வேலை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய குடிமக்களுக்கு சேவை செய்து வருகிறது. ஐந்து தசாப்தங்களாக மில்லியன் கணக்கான இந்தியர்களால் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட தகவல் தொடர்பு முறைகளில் ஒன்றான பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை, அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களால் வேலை வாய்ப்புகள் மற்றும் சட்ட அறிவிப்புகளை அறிவிக்கவும், கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் மக்களால் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், இந்திய அஞ்சல் துறையின் 50 ஆண்டுகால புகழ்பெற்ற பதிவு அஞ்சல் சேவை செப்டம்பர் 1-ந்தேதி முதல் படிப்படியாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அஞ்சல் துறை வருகிற 1-ந்தேதி முதல், பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை இந்திய அஞ்சல் துறையின் ஸ்பீடு தபால் சேவையுடன் இணைக்கப்படுகிறது. இந்த இணைப்பு கண்காணிப்பு துல்லியம், விநியோக வேகம் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- விரைவு தபால், பதிவு தபால், பார்சல் சேவை இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- விரைவு தபால்களுக்கு 50 கிராம் வரை ரூ.41 கட்டணமாக பெறப்பட்டு மறுநாள் காலையில் தமிழகத்திற்குள் அந்தந்த முகவரியில் போய் சேரும் என்று தபால் துறையினர் தெரிவித்தனர்.
ராஜபாளையம்
தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் மதியம் 3 மணி வரை சேவைகள் இருந்தன. பின்னர் தனியார் கூரியர் சேவை தொடங்கப்பட்டு அபரிதமான வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக மத்திய அரசின் அஞ்சலக சேவைகளில் சுணக்கம் ஏற்பட்டது.
மதியம் 3 மணி வரை பதிவு தபால், விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகள் இருந்து வந்த நிலையில் தனியார் கூரியர் சேவைகளில் இரவு 8 மணி வரை பார்சல் பெறப்பட்டு, மறுநாள் காலை போய் சேரும் நிலை இருந்தது.
இதன் காரணமாக தபால் நிலையங்களில் கூட்டம் குறைந்து பொதுமக்கள் தனியார் கூரியர் சேவையை பயன்படுத்த தொடங்கினர். இதனால் அஞ்சலக சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் இரவு 8 மணி வரை பதிவு தபால், விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் துணை கோட்ட கண்காணிப்பாளர் கண்ணன் இந்த சேவையை தொடங்கி வைத்தார். தலைமை அஞ்சலக அதிகாரி சண்முகராஜ் வரவேற்றார். இதில் அஞ்சலக அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
விரைவு தபால்களுக்கு 50 கிராம் வரை ரூ.41 கட்டணமாக பெறப்பட்டு மறுநாள் காலையில் தமிழகத்திற்குள் அந்தந்த முகவரியில் போய் சேரும் என்று தபால் துறையினர் தெரிவித்தனர்.
- 10 முதல் 20 தறிகள் வரை வைத்து நெசவு தொழில் செய்து வருகிறோம்.
- 750 யூனிட் இலவசம் மின்சாரம் பெற்று வருகிறோம்.
பல்லடம் :
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வருக்கு விசைத்தறியாளர்கள் பதிவுத் தபால் அனுப்பும் நிகழ்வை தொடங்கினர்.
இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், திருப்பூர், கோவை மாவட்டங்களில், 10 முதல் 20 தறிகள் வரை வைத்து நெசவு தொழில் செய்து வருகிறோம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பஞ்சு நூல் விலை உயர்வு, கூலி உயர்வு பிரச்னை என அடுத்தடுத்த பிரச்னைகளால் எண்ணற்ற பாதிப்புகளை சந்தித்தோம்.கூலி அடிப்படையில் 24 மணி நேரமும் உற்பத்தி நடந்து வரும் இத்தொழிலில் மாதம், 25 - 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இதில் 10 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணத்துக்கேசென்றால் எவ்வாறு குடும்பம் நடத்த முடியும்? நலிந்து வரும் விசைத்தறி தொழிலுக்காக, 750 யூனிட் இலவசம் மின்சாரம் பெற்று வருகிறோம்.
கடந்த 2012ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது கோரிக்கையை ஏற்று ரத்து செய்யப்பட்டது. தற்போது 36 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால் ஒட்டுமொத்த விசைத்தறி தொழிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலின் நிலையை கருத்தில் கொண்டு, விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு 2 ஆயிரம் தபால்கள் அனுப்பும் நிகழ்வை துவங்கியுள்ளோம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.






