search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power weavers"

    • முதல், 1000 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைத்து அரசு அறிவித்தது.
    • 6 தவணைகளில் நிலுவை கட்டணத்தை செலுத்தவும் அரசு அனுமதி அளித்தது.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. பல லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் மின் கட்டணத்தை செலுத்தாமல் விசைத்தறியாளர்கள் போராடினர்.

    அதன் பலனாக முதல், 1000 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைத்து அரசு அறிவித்தது. ஆனால் நிலுவையில் உள்ள மின் கட்டணத்துக்கு அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்பட்டது.மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திலேயே மின் கணக்கீடு செய்யப்பட்டது. இதனால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    கடந்த 8 மாதங்களாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் நிலுவை மின் கட்டணத்துக்கு அபராதம், வட்டியை ரத்து செய்ய வேண்டும், கட்டணம் செலுத்த தவணை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அபராதம் மற்றும் வட்டியை ரத்து செய்தும், 6 தவணைகளில் நிலுவை கட்டணத்தை செலுத்தவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விசைத்தறியாளர்கள் நிலுவை மின் கட்டணத்தை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி, பொருளாளர் பூபதி ஆகியோர் கூறுகையில், அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

    கடந்த 4 நாட்களாக மின் வாரிய அலுவலகங்களுக்கு சென்று தங்களின் நிலுவை கட்டணம் குறித்து விசாரித்து அதை செலுத்துவதில் விசைத்தறியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் என்றனர்.

    • விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
    • நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும்.

    பல்லடம்,ஜூலை.5-

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர்.

    இந்தநிலையில், விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று சென்னையில் மின்துறை அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை சந்தித்து விசைத்தறி மின் கட்டணத்தை 8 மாத தவணையில் செலுத்த கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மின்கட்டண குறைப்பை விடுபட்ட 6 மாதங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும்.

    ஜூலை1ந்தேதி முதல் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை ரத்து செய்து, இனி வரும் ஆண்டுகளிலும் மின் கட்டண உயர்வில் இருந்து விசைத்தறிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நிலையற்ற சந்தை நிலவரத்தால் விசைத்தறி தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
    • பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு விசைத்தறி தொழிலை காப்பாற்ற வேண்டும்.

    மங்கலம் :

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி உள்ளது. 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்த விசைத்தறிகளில் 90 சதவீதம் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்தப்படி கூலி கிடைக்காமை, உதிரிபாகங்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிலையற்ற சந்தை நிலவரத்தால் விசைத்தறி தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

    இந்நிலையில் அரசின் மின் கட்டண உயர்வு விசைத்தறியாளர்களுக்கு பேரிடியாக வந்தது. இதனால் விசைத்தறியாளர்கள் அதிர்ச்சி அடைந்து மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிமொழி காரணமாக வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்ட விசைத்தறி யாளர்கள், மின் கட்டணத்தை குறைக்கும் வரையில் மின் கட்டணத்தை செலுத்துவதில்லை என முடிவு செய்து, கடந்த 6 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறியதாவது:- சாதா விசைத்தறிகளுக்கான 3 ஏ 2 டேரிப்புக்கு மிக அதிகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளது தமிழக அரசு.ஏற்கனவே தொழிலை நடத்த முடியாமல் நெருக்கடியில் உள்ளோம். அதனால் மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு உத்தரவாதம் அளித்து பல மாதங்கள் ஆகிறது. இதுவரை சாதகமான அறிவிப்பு வரவில்லை. மின் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரையில் மின் கட்டணம் செலுத்தாமல் எங்கள் போராட்டம் தொடரும்.

    மின் கட்டண உயர்வால் ஒவ்வொரு விசைத்தறி கூடத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இது எங்களுக்கு கூடுதல் சுமையாகும்.மின் கட்டணம் செலுத்தாத போராட்டத்துக்கு பிறகு கடந்த 6 மாதத்தில் ஒவ்வொரு குடோனுக்கும் 4 மின் கட்டண பில்கள் வந்துள்ளன. அதில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டும். தற்போது சோமனூர் பகுதியில் மட்டும் 5 கோடி ரூபாய் வரை மின் கட்டண பாக்கி உள்ளது. அதனால் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு விசைத்தறி தொழிலை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விசைத்தறியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் தான் செலுத்த இயலும்.

    மங்கலம் :

    கடந்த செப்டம்பர் மாதம் மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தியது. குறைக்கும் வரை மின் கட்டணத்தை செலுத்துவதில்லை என திருப்பூர் ,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்தனர்.

    சமீபத்தில் ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 'விசைத்தறிக்கான 750 யூனிட் இலவசம் மின்சாரம் 1000 யூனிட்டாக வழங்கப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார். இது விசைத்தறியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் கடந்த 4 மாதங்களாக விசைத்தறி கூடங்களுக்கான மின் கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்தவில்லை.

    அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக கட்டணம் நிலுவையில் இருந்தும் மின் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.ஒவ்வொரு விசைத்தறி கூடங்களுக்கும் ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் நிலுவையில் உள்ளது.

    இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறியதாவது:- விசைத்தறி கூடம் ஒன்றுக்கு சராசரியாக 20 - 25 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் வரும். 6 மாத மின் கட்டணம் நிலுவையில் உள்ளது. இத்துடன் செலுத்தாத தொகைக்கான அபராதமும் ஆயிரக்கணக்கில் வரும் என்பதால் ஒட்டுமொத்தமாக செலுத்துவது கடினம் என்றார்.

    சோமனூர் விசைத்தறி சங்க பொருளாளர் பூபதி கூறுகையில்,நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் தான் செலுத்த இயலும். இது குறித்து அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

    • ரயான் நூல், துணி விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளதால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
    • இதனால் கேரளா சேலை உற்பத்திக்கு மாற விசைத்தறி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ரயான் துணிகள் உற்பத்தியும், அதை மதிப்பு கூட்டிய துணிகளாக மாற்றி விற்பனை செய்வதும் அதிகம்.

    அடுத்தபடியாக காட்டன் பாலீஸ்டர் துணிகளை உற்பத்தி செய்கின்றனர்.சமீப காலமாக இத்துணி களை டையிங், பிளீச்சிங், பிராசசிங், பிரிண்டிங் செய்து முழுமையான ஆடையாக மாற்ற தேவையான அளவு பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதனால் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி இப்பணிகளை செய்ய வேண்டி உள்ளது.

    இதனால் செலவு அதிகரிப்பதுடன் ரயான் நூல், துணி விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் உள்ளதால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். இதனால் கேரளா சேலை உற்பத்திக்கு மாற விசைத்தறி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:

    ஈரோடு, நாமக்கல் மாவட்ட பார்டர் பகுதியில் முழு அளவில் ரயான் துணிகள் உற்பத்தி ஆகி வந்தது. அவற்றை மதிப்பு கூட்ட செய்யும் சாய, சலவை, பிரிண்டிங், கேலண்டரிங் உள்ளிட்ட பணிகளுக்கான வசதி இங்கு குறைவு.

    வெளிமாநி லங்களுக்கு அனுப்பி திரும்ப பெற செலவு அதிகமாகிறது.எனவே கேரளா சேலை உற்பத்திக்கு விசைத்தறி–யாளர்கள் மாறி வருகின்றனர்.

    குறிப்பாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம், ஆவத்திபாளையம் தார்காடு, வெளியரசம் பாளையம், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளா சேலை உற்பத்திக்கு விசைத்தறி–யாளர்கள் மாறி வருகின்ற–னர்.

    ரயான்நூல், உற்பத்தி கூலி, ரயான் துணிகளை மதிப்பு கூட்டிய பொருளாக்க ஆகும் செலவை விட கேரளா சேலைகளுக்கு ரூ.50 முதல் ரூ.100 ரூபாய்க்கு மேல் குறைவு.

    5 அல்லது 5.5 மீட்டர் கேரளா சேலைக்கு ஜருகை பார்டர் துணி 10 ரூபாய்க்குள் வாங்கலாம்.

    ஒரு மீட்டர் உற்பத்திக்கு 40 ரூபாய் என 5 மீட்டருக்கு 200 ரூபாய்க்குள் அடக்க–லாம். 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்தால் 50 முதல் 100 ரூபாய் லாபம் நிற்கும். இதை மொத்தமாக செய்யும் போது வியாபாரிகளுக்கு சற்று குறைந்த விலையில் வழங்கலாம்.

    இவற்றுக்கு சாய பிரிண்டிங் பணிகள் குறைவு. கிரே துணியாக ஒட்டி டை பயன்படுத்தாமல் தேவையான நிற ஜருகை பார்டரை இணைத்து விற்கலாம்.

    தவிர பிற துணிகளை விட கேரளா சேலைகளுக்கு தற்போது ஆர்டர் அதிகம் வருவதால் அதனை உற்பத்தி செய்ய விசைத்தறியாளர்கள் விரும்புகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது யூனிட்டுக்கு 70 பைசா உயா்த்தி இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.
    • லட்சக்கணக்கான விசைத்தறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை காக்க விசைத்தறிக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மின் கட்டண உயா்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலாளா் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தோ்தல் அறிக்கையில் இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயா்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை அமல்படுத்தாமல் தற்போது யூனிட்டுக்கு 70 பைசா உயா்த்தி இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. விசைத்தறி தொழில் ஏற்கெனவே நலிவடைந்துள்ள நிலையில் இந்த மின் உயா்வால் விசைத்தறியாளா்கள் பாதிப்படைவா்.எனவே, லட்சக்கணக்கான விசைத்தறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை காக்க விசைத்தறிக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×