என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயர்வை அரசு மானியமாக வழங்க கோரி விசைத்தறியாளர்கள்  8-ந் தேதி வேலைநிறுத்தம்
    X

    திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற காட்சி.

    மின் கட்டண உயர்வை அரசு மானியமாக வழங்க கோரி விசைத்தறியாளர்கள் 8-ந் தேதி வேலைநிறுத்தம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது.

    பல்லடம் :

    பல்லடத்தில் திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி, கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார், வேலம்பாளையம் தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் பாலாஜி வரவேற்றார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் விசைத்தறிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு மானியமாக வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழக விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது, முதல்வரின் கவனத்திற்க்கு செல்லும் வகையில் வருகின்ற 8 ந்தேதி திங்கட்கிழமையன்று ஒருநாள் விசைத்தறிகளை அடையாள வேலை நிறுத்தம் செய்து குடும்பத்துடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின்கட்டண உயர்வை அரசே மானியமாக வழங்கிடக் கோரி மனு அளிப்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், கோபால், பழனிசாமி, பூபதி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×