search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bjp demonstration"

    • அனைத்து தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் சின்ன அல்லாபுரம் அரசு தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி பா.ஜ.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார்.

    மண்டல செயலாளர் குமார் பொருளாளர் பாபு மண்டல துணைத்தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கார்த்தி அண்ணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    சின்ன அல்லாபுரம் அரசு தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் கூடுதல் வகுப்பறைகளை கட்ட வேண்டும். காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவியை நிரப்ப வேண்டும்.

    அனைத்து தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும். ஆறுகள் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். டாஸ்மாக் கடையை மூட வேண்டும்.இந்து கோவில்களை எடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இளைஞர் அணி மண்டல தலைவர் மோகன் மற்றும் திரளான பாஜகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 300-பேர் கலந்துக கொண்டனர்
    • கள்ளசாராய மரணத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி, மாவட்ட மகளிர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மகளிர் அணி தலைவி செல்வி தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர்.மனோகரன் முன்னிலை வகித்தார். கார்த்தியாயினி கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் பாபு, ஜெகன் நாதன், மகளிர் அணி பொதுச் செயலாளர் கீதா,மஞ்சு, ஷகிலா, மகளிர் அணி துணை தலைவர்கள் மலர்க்கொடி. மகளிர் அணி செயலாளர்கள் ஜோதி, சுதா, ராதா, பிரியா,மாநில செயற்குழு சாந்தி, மாநில வணிக பிரிவு செயலாளர் இளங்கோ, தேசிய பொதுகுழு பிச்சாண்டி, அரசு தொடர்பு தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் ஜெகன், 2-வது மண்டல தலைவர் கோபி மற்றும் சுமார் 300-பேர் கலந்துக கொண்டனர்.

    கள்ளசாராய மரணத்துக்கு காரணமானதாக தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    • சிப்காட் தொழில் பேட்டை போன்ற இடங்களில் உள்ளூர் வாசிகளுக்கு அல்லாமல் வட மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
    • ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேலுஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வெங்கடாச்சலபதி என்ற குட்டி, நாகராஜன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள், உள்ளூர் பகுதி இளைஞர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த ஜாதிய ரீதியிலான கலவரங்கள் மற்றும் கொலை சம்பவங்களை தடுக்கும் விதமாக, மறைந்த ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது.

    சிப்காட் தொழில் பேட்டை

    அவரால் வழங்கப்பட்ட அறிக்கையில் தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்க வேலை வாய்ப்பு இல்லாத காரணம் என அதில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டை, நாங்குநேரி பொருளாதார மண்டலம் போன்றவைகள் உருவாக்கப்பட்டது.

    இந்நிலையில் சிப்காட் தொழில் பேட்டை போன்ற இடங்களில் உள்ளூர் வாசிகளுக்கு அல்லாமல் வட மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

    இதனை தடுத்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் தாழையூத்து பஜார் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேலுஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வெங்கடாச்சலபதி என்ற குட்டி, நாகராஜன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள், உள்ளூர் பகுதி இளைஞர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உள்ளூர்வாசி களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். 

    • மாநகராட்சியை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் எந்த பணியும் செய்யாமல் மெத்தன போக்காக நடந்து கொள்ளும் நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் நரேந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் சுமதி மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். எல். பாபு, ஜெகநாதன், உட்பட பலர் செயலாளர் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • பிரதமரை தவறாக பேசிய பாக். அமைச்சரை கண்டித்து

    திருச்சி:

    பிரதமர் நரேந்திர மோடியை தவறாக பேசிய பாகிஸ்தான் அமைச்சரை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் தலைமையில் மார்க்கெட் மண்டலத் தலைவர் பழனிக்குமார் முன்னிலையில் திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் மாவட்ட தலைவர் திருமலை, பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில், வரகனேரி பார்த்திபன், ஒண்டிமுத்து, காளீஸ்வரன், சதீஷ்குமார், நாகேந்திரன், சந்துரு, மணிமொழி, சங்கீதா, மணிமேகலை, ஊடக பிரிவு தலைவர் சி.இந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஜெயந்தி, சந்துரு, மிலிட்டரி நடராஜன், வர்த்தக பிரிவு லோகநாதன், மண்டலத் தலைவர் மல்லி செல்வம், பூண்டு பாலு, ஜி.கே.கண்ணன், ஆர்.பி.பாண்டியன், செந்தில்குமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

    • தமிழகத்தில் மின்கட்டணம், சொத்துவரி, பால் உயர்வு கட்டணம் உயர்வை கண்டித்து பா.ஜனதா இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
    • சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துபலவேசம், வக்கீல் வெங்கடாசலபதி என்ற குட்டி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    நெல்லை:

    தமிழகத்தில் மின்கட்டணம், சொத்துவரி, பால் உயர்வு கட்டணம் உயர்வை கண்டித்து பா.ஜனதா இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    பாளை மேற்கு மண்டலம், கிழக்கு மண்டலம் சார்பாக நெல்லை வண்ணார்பேட்டையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு அழைப்பாளர்க ளாக மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துபலவேசம், வக்கீல் வெங்கடாசலபதி என்ற குட்டி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மண்டல தலைவர் குருகண்ணன், மேற்கு மண்டல தலைவர் மணிகண்டன், விவசாய அணி ராஜபாண்டியன், மாவட்ட மகளிரணி ஜெயசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாமலை கைதை கண்டித்து நடந்தது
    • ஏராளமனோர் பங்கேற்றனர்

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    இதனை கண்டித்தும் நாட்டறம்பள்ளி பாரதிய ஜனதா சார்பில் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கண்மணி, கவிதா சுரேஷ், ஆகியோர் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு கண்டித்தும், அண்ணாமலை உடனடியாக விடுதலை செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    • சென்னையில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சென்னையில் நேற்று மாலை கைது செய்தனர்

    கடலூர்:

    நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து சென்னையில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணா மலையை சென்னையில் நேற்று மாலை கைது செய்த தால் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் கடலூர் மாவட்ட பொதுச் செயலாளர் ஜீவா வினோத்குமார் தலைமை யில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், மாவட்ட செயலாளர் சுனில் சவுந்தர்யா, மாவட்ட பிரிவு தலைவர்கள் அசோக் ராஜ், முருகன், கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய தலைவர்கள் சக்திவேல், ஜெகதீஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகு, பண்ருட்டி நகர மகளிர் அணி தலைவி அஞ்சுகம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.

    திட்டக்குடி நகர பா.ஜ.க. தலைவர் பூமிநாதன் தலைமையில் திட்டக்குடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பா ட்டம் நடை பெற்றது. இதில் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சின்ன சேலத்தில் நேற்று மாலை நெசவாள அணி மாநில செயலாளர் செந்தில் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்ட செந்தில் ராஜா உட்பட பாஜகவை சேர்ந்த 10 பேர் மீது சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி, மாநில மகளிரணி துணைத் தலைவி கிருஷ்ணசாந்தி ஆகியோர் பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நகர ஒன்றிய பேரூர் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் ராணிப்பேட்டை மண்டல தலைவர் ஹரிஷ் குமார் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • தமிழுக்கு முடிவுரை எழுதும் தி.மு.க. என்ற தலைப்பில் திருச்சியில் இன்று பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா கலந்து கொண்டு பேசும்போது, தி.மு.க. அரசு தனது கையாலாகாத தனத்தை மறைப்பதற்காக மோடி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு ஆகியவற்றினை கையில் எடுப்பதாக கூறினார்.

    திருச்சி:

    திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுதும் திறனற்ற தி.மு.க. என்ற தலைப்பில் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

    மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஒண்டிமுத்து, தண்டபாணி, காளீஸ்வரன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார், மாவட்ட துணைத்தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா கலந்து கொண்டு பேசும்போது, தி.மு.க. அரசு தனது கையாலாகாத தனத்தை மறைப்பதற்காக மோடி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு ஆகியவற்றினை கையில் எடுக்கிறார்கள்.

    திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் இல்லை என பரப்புரை செய்வதற்காக அவருக்கு சிலை எழுப்பி இருக்கிறார்கள். டாஸ்மாக் மூலம் மதுபானங்களை விற்றுக் கொண்டிருக்கும் அரசு போதை எதிர்ப்பு நிகழ்ச்சி நடத்துவது வியப்பாக இருக்கிறது என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி.முரளிதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஹரிகுமார், மகளிர் அணி ரேகா, புவனேஸ்வரி, மாநில கூட்டுறவு பிரிவு எம்பயர் கணேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கும்பக்குறிச்சி பழனிச்சாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயகர்ணா, சந்துரு,

    வர்த்தக அணி சுவேந்திரன், லோகநாதன், மண்டலத் தலைவர்கள் மல்லி செல்வம், பழனிக்குமார், புருஷோத்தமன், இளைஞரணி சந்தோஷ்குமார், நிர்வாகிகள் வக்கீல் சுரேஷ்ராஜ், பூண்டு பாலு, ஸ்ரீராம், இளைரணி மாநிலச்செயலாளர் ஆர்.எம்.ஸ்ரீராம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • சாதி தொடர்பான கேள்விக்கு கண்டனம்
    • ஏராளமானோர் பங்கேற்பு

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பா.ஜ.க பட்டியல் அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர். பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார்.

    பா.ஜ.க பட்டியல அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், பா.ஜ.க.மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர் எஸ்.எல். பாபு, செந்தில், ஏழுமலை, மண்டல தலைவர் சிவா, ரவி உட்பட கலந்து கொண்டனர்.

    பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியல் சாதி தொடர்பாக கேள்வி கேட்க பட்டதை கண்டித்தும். அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    • கடந்த மே 14-ந்தேதி நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
    • சிவா, முன்னாள் மாவட்ட தலைவர்ரா கவன், மாவட்ட பொதுச்செ யலாளர்கள் செந்தில் அரசன், ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் செல்வம், ஒன்றிய தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை பேரூராட்சி அருகே பா.ஜ.க சார்பில் கடந்த மே 14-ந்தேதி நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா, முன்னாள் மாவட்ட தலைவர்ரா கவன், மாவட்ட பொதுச்செ யலாளர்கள் செந்தில் அரசன், ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் செல்வம், ஒன்றிய தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துக்கொண்டு பேசி னார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்துக்கொண்டனர். 

    ×