வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

மாநகராட்சியை கண்டித்து நடந்தது ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
Published on

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் எந்த பணியும் செய்யாமல் மெத்தன போக்காக நடந்து கொள்ளும் நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் நரேந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் சுமதி மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். எல். பாபு, ஜெகநாதன், உட்பட பலர் செயலாளர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com