என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க பட்டியல் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
- சாதி தொடர்பான கேள்விக்கு கண்டனம்
- ஏராளமானோர் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் மாவட்ட பா.ஜ.க பட்டியல் அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர். பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார்.
பா.ஜ.க பட்டியல அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், பா.ஜ.க.மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர் எஸ்.எல். பாபு, செந்தில், ஏழுமலை, மண்டல தலைவர் சிவா, ரவி உட்பட கலந்து கொண்டனர்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியல் சாதி தொடர்பாக கேள்வி கேட்க பட்டதை கண்டித்தும். அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
Next Story






