திருச்சியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பிரதமரை தவறாக பேசிய பாக். அமைச்சரை கண்டித்து
திருச்சியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
Published on

திருச்சி:

பிரதமர் நரேந்திர மோடியை தவறாக பேசிய பாகிஸ்தான் அமைச்சரை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் தலைமையில் மார்க்கெட் மண்டலத் தலைவர் பழனிக்குமார் முன்னிலையில் திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் திருமலை, பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில், வரகனேரி பார்த்திபன், ஒண்டிமுத்து, காளீஸ்வரன், சதீஷ்குமார், நாகேந்திரன், சந்துரு, மணிமொழி, சங்கீதா, மணிமேகலை, ஊடக பிரிவு தலைவர் சி.இந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஜெயந்தி, சந்துரு, மிலிட்டரி நடராஜன், வர்த்தக பிரிவு லோகநாதன், மண்டலத் தலைவர் மல்லி செல்வம், பூண்டு பாலு, ஜி.கே.கண்ணன், ஆர்.பி.பாண்டியன், செந்தில்குமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com