ராணிப்பேட்டையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்ததுஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை முத்துக்கடையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி, மாநில மகளிரணி துணைத் தலைவி கிருஷ்ணசாந்தி ஆகியோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நகர ஒன்றிய பேரூர் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் ராணிப்பேட்டை மண்டல தலைவர் ஹரிஷ் குமார் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com