search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் பலி"

    • பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு.
    • பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன்கள் முகேஷ், ரூபேஷ் (வயது15). இவர்களில் ரூபேஷ் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை ரூபேஷ், வீட்டின் அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து இருந்தது.

    இதனை அறியாமல் ரூபேஷ் மின்கம்பத்தை தொட்டார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்திலேயே ரூபேஷ் இறந்து போனார்.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பலியான ரூபேசின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி மாணவன் பலியானது பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி மீஞ்சூர் -திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மின்கம்பம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • மின்சாரம் பாய்ந்து 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளப்பாளையம், டெலிபோன் நகர், விரிவாக்க வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜனனி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், சாய் தர்ஷன் (9) என்ற மகனும் உள்ளனர். இதில் சாய் தர்ஷன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4 -ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்நிலையில் நேற்று இரவு சாய் தர்ஷன் தனது நண்பர்களுடன் வீட்டில் அருகே உள்ள பகுதியில் விளையாடு கொண்டு இருந்தான். அங்கு மின் கம்பம் இருந்தது. அதன் அருகே நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அப்போது சாய் தர்ஷன் விளையாட்டு ஆர்வத்தால் மின் கம்பத்தில் இருந்த ஸ்டே வயரை பிடித்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக சாய் தர்ஷனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

    இதில் படுகாயம் அடைந்த சாய் தர்ஷனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சாய் தர்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    பின்னர் மாணவனின் உடலை அவரது பெற்றோர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கோபி செட்டிபாளையம் போலீசார் மாணவனின் வீட்டுக்கு வந்து அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாணவனை மின்சாரம் தாக்கிய போது அந்த பகுதியில் மின்விநியோகம் தடைப்பட்டது. பின்னர் மின் ஊழியர்கள் அங்கு வந்து மின் இணைப்பை சரி செய்தனர். மின்சாரம் பாய்ந்து 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான அனுமந்தையை சேர்ந்த சங்கர் என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கொளத்தூர்:

    வியாசர்பாடி,மேல்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராஜேஷ் (வயது16). இவர் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பகுதி நேரமாக திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கேட்டரிங் சர்வீஸ் செய்து வந்தார். இவர் மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வேலை முடிந்து செந்தில்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தார்.

    மாதவரம் ரவுண்டானா அருகே வந்தபோது பின்னால் வந்த மாநகர பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். செந்தில்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான அனுமந்தையை சேர்ந்த சங்கர் என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவன் அமீதுதீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • விபத்து நடந்ததும் பஸ்டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    திருவொற்றியூர்:

    எர்ணாவூர், லிப்ட் கேட் பகுதியை சேர்ந்தவர் பசலுதீன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் அமீதுதீன் (வயது 12). இவன் திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இரவு மாணவன் அமீதுதீன், எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகரில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு நடந்து வந்து கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ் எதிர்பாராத விதமாக அமீதுதீன் மீது மோதியது. இதில் அவன் பலத்த காயம்அடைந்து உயிருக்கு போராடினான்.

    உடனடியாக அவனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவன் அமீதுதீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து நடந்ததும் பஸ்டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து தலைமறைவான பஸ் டிரைவரை தேடி வருகிறார்.

    • சிரஞ்சீவி நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார்.
    • வெகுநேரத்துக்கு பின்னர் தண்ணீரில் மூழ்கிய சிரஞ்சீவியை பிணமாகவே மீட்க முடிந்தது.

    பரமத்திவேலூர்:

    தேனி மாவட்டத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் சிரஞ்சீவி (வயது 20). பரமத்தி அருகே மேல்சாத்தம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஜேடர்பாளையம் அருகே அரசம்பாளையத்தில் உள்ள அவருடன் பயின்று வரும் சக கல்லூரி மாணவர் வாசுதேவன் என்பவரது வீட்டில் கடந்த 6 மாதமாக தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

    சிரஞ்சீவி நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார். நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது சிரஞ்சீவி ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் ராஜா வாய்க்காலில் மூழ்கி உயிருக்கு போராடினார்.

    இதை பார்த்த அவருடன் வந்த சக மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். பின்னர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், மீனவர்கள் உதவியுடன் ராஜவாய்க்காலில் மூழ்கிய மாணவர் சிரஞ்சீவியை தேடினர்.

    வெகுநேரத்துக்கு பின்னர் தண்ணீரில் மூழ்கிய சிரஞ்சீவியை பிணமாகவே மீட்க முடிந்தது. தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜேடர்பாளையம் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதனால் பரபரப்பு நீடிக்கிறது.

    • கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
    • கெங்கவல்லி, ஆத்தூர், தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மின்னலுடன் கனமழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்ஷன் என அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் சென்றது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    மழையால் சேலம் 5 ரோடு, 4 ரோடு, ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலத்தின் கீழ் இருசக்கர வாகன ஓட்டிகள் குவிந்தனர். இதனால் இப்பகுதியில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    புது பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்கி நின்றதால், பஸ்கள் உள்ளே வர முடியாமலும் வெளியே செல்ல முடியாமலும் ஆங்காங்கே நின்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனம் நின்றன.

    பாதாள சாக்கடை பணி நடக்கும் இடங்களிலும் மழைநீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக நெத்திமேடு ஜெயராணி மேல்நிலைப்பள்ளி, பாரதி மருத்துவமனை அருகே, உச்சிபாளையம் கருவாட்டு பாலம் அருகே, மழை நீர் ஆறாக ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. இதனால் அலுவலகங்களுக்கு சென்று வீடு திரும்புவோர் அவதிப்பட்டனர்.

    மேச்சேரியை சேர்ந்தவர் இளங்கோ மகன் அகிலன் (வயது 14), அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை ஒட்டி, சேலம் கோட்டை அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    நேற்று மாலை பாட்டி வேலைக்கு சென்ற நிலையில் அகிலன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மழை பெய்ததால், வீட்டுக்கு திரும்பிய மாணவன், வீடு பூட்டி இருந்ததால் நனையாமல் இருக்க மாடிப்படியில் நின்றார்.

    அப்போது மின்னல் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புறநகர் பகுதிகளான தம்மம்பட்டி, கரிய கோவில், காடையாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. பனமரத்துப்பட்டியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் தடைப்பட்டது. இந்த மரங்களை ஊழியர் அகற்றி பின், மின்வினியோகம் சீரானது.

    கெங்கவல்லி, ஆத்தூர், தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மின்னலுடன் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேல் பெய்த இந்த மழையில், அந்த பகுதிகளில் உள்ள 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எறிந்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 31.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. தம்மம்பட்டி 25, கரியகோவில் 20, காடையாம்பட்டி 18, நங்கவல்லி 15, ஆத்தூர் 12, ஏற்காடு 7.2, எடப்பாடி 6.4, வீரகனூர் 6, ஓமலூர் 4, ஆனைமடுவு 3 என மாவட்டம் முழுவதும் 148 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேந்தமங்கலம் பகுதியில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சேந்தமங்கலம்-நாமக்கல் சாலையில் மரம் ஒன்று வேருடன் முறிந்து விழுந்தது.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

    அதேபோல எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வெள்ளிசந்தை சாலையில் உள்ள மாங்காய் மண்டி அருகே வாகனத்தை நிறுத்தி சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்தனர்.
    • மினி லாரி கட்டுபாட்டை இழந்து அங்குள்ள மின்கம்பத்தின் மீது மோதி ஹரிஷ் மீது விழுந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சின்ன செலந்தியன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் ஹரிஷ் குமார் (வயது 19). இவர் பாலக்கோடு அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவரும், இவருடைய நண்பர் தங்கவேல் என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது வெள்ளிசந்தை சாலையில் உள்ள மாங்காய் மண்டி அருகே வாகனத்தை நிறுத்தி சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் ஓசூரில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த மினி லாரி கட்டுபாட்டை இழந்து அங்குள்ள மின்கம்பத்தின் மீது மோதி ஹரிஷ் மீது விழுந்தது. இதில் தலைக்கு பலத்த காயம் ஏற்பட்ட ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.  

    • கிணற்றில் சிறுவன் ஆழத்திற்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியானார்.
    • விரைந்து தாயார் சிறுவன் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

    தருமபுரி, 

    தருமபுரியை அடுத்த பழைய தருமபுரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சச்சின் (வயது13). இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் சிறுவன் தாயுடன் தனியாக வசித்து வந்தனர். சச்சின் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சச்சின் நேற்று காலை தனது நண்பர்களுடன் அதேபகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார். அங்கு கிணற்றில் படிக்கட்டில் நின்று குளித்து கொண்டிருந்தபோது திடீரென்று சிறுவன் ஆழத்திற்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து அவருடன் நண்பர்கள் உடனே சச்சினின் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து தாயார் சிறுவன் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

    இதுகுறித்து அவர் தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்கம் போல் மாணவர் பிரவீன் இன்று காலை மளிகை கடையை திறக்க வந்தார்.
    • மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டையை சேர்ந்தவர் சண்முகராஜா. இவரது மகன் பிரவீன் (14). இவர் கொடிவேரியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார்.

    சண்முகராஜா வடக்கு பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவர் பிரவீன் தினமும் காலையில் மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவும் கடையில் வியாபாரம் முடிந்ததும் ஷட்டரை பூட்டி விட்டு சென்றனர்.

    வழக்கம் போல் மாணவர் பிரவீன் இன்று காலை 6.30 மணியளவில் மளிகை கடையை திறக்க வந்தார். அப்போது மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதுப்பற்றி தெரியாத பிரவீன் ஷட்டரை திறந்த போது மின்சாரம் தாக்கி அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மாணவர் பிரவீனை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர் பிரவீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மின்சார துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கம்பரசம்பேட்டை அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கிணறு தோண்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் நீரோட்டம் அதிகரித்தது.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அர்ச்சகருக்கு படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்து வேதம் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மேற்கண்ட பாடசாலையில் படிக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 13), ஹரி பிரசாத் (14), ஆந்திராவை சேர்ந்த அபிராம் (13), கோபாலகிருஷ்ணன் (12) ஆகிய 4 மாணவர்கள் சுற்றுலா பயணிகள் தங்கும் இடமான யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை 6 மணி அளவில் குளிக்கச் சென்றனர்.

    பின்னர் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து சுழலில் சிக்கிய அவர்களை ஆற்று தண்ணீர் இழுத்துச் சென்றது. இதில் கோபாலகிருஷ்ணன் என்ற மாணவன் அதிர்ஷ்டவசமாக தடுமாறி தப்பி கரைக்கு ஓடி வந்தான்.

    பின்னர் தன்னுடன் குளிக்க வந்த சக மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய தகவலை தெரிவித்துள்ளான். உடனடியாக வேத பாடசாலையில் இருந்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 25 பேர் விரைந்து வந்து வெள்ளத்தில் மூழ்கிய அந்த 3 மாணவர்களையும் தேடினர்.

    அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் சிறிது தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற இரு மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய நான்கு மாணவர்களுக்கும் நீச்சல் தெரியாது என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.

    தற்போது கம்பரசம்பேட்டை அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கிணறு தோண்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் நீரோட்டம் அதிகரித்தது.

    இதனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் குளிக்க சென்ற 4 பேரும் நிலைகொள்ள முடியாமல் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கவின் தனது பாட்டியுடன் புத்தா தெருவில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    கொருக்குப்பேட்டை ஆர்.கே. நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகன் கவின் (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கவின் தனது பாட்டியுடன் புத்தா தெருவில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்றார்.

    அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நடந்து வரும் வழியில் கோவிலில் சீரியல் பல்பு கட்டுவதற்கு கட்டப்பட்டிருந்த கட்டையில் கை வைத்துள்ளார். அதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு ஆண்டுக்கு பிறகு 14 வயது சிறுவன் கைது
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில் :

    கேரள மாநிலம் விழிஞ்சம் கல்வெட்டான்குழி ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது நசீம். இவரது மனைவி சுஜிதா. இவர்களது மகன் ஆதில் முகம்மது (வயது 12).

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் குமரி மாவட்டம் திட்டு விளை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். 6-ந்தேதி ஆதில் முகம்மது திடீரென மாயமானார்.

    இந்த நிலையில் 8-ந்தேதி அந்த பகுதியில் உள்ள குளத்தில் ஆதில் முகம்மது பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் துப்பு துலங்க வில்லை.

    இந்த நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ஆதில் முகம்மதுவின் தாயார் சுஜிதா கேரள முதல்-மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். ஆதில்முகம்மது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மீண்டும் விசாரணை தொடங்கியது.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசாரணை தொடங்கினார்கள். டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். இந்த வழக்கு தொடர்பான தகவல்களை சேகரித்தனர். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    சம்பவத்தன்று ஆதில் முகம்மதுவை அழைத்து சென்ற சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆதில் முகம்மது குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட போது டி-ஷர்ட் எதுவும் அணியவில்லை. ஆனால் அவர் வீட்டில் இருந்து சென்றபோது டி-சர்ட் அணிந்திருந்தார். அந்த டீ-சர்ட் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

    கடந்த 6 மாதமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சிறுவன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 304(2) ஆபத்தான இடத்திற்கு அழைத்து செல்லுதல், 201 தடயத்தை மறைத்தல், 202 செல்வதை சொல்லாமல் மறைத்தல் ஆகிய பிரிவு களில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். ஒரு ஆண்டுக்கு பிறகு இந்த வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×