search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் பலி"

    • பிளஸ் 2 படித்து வந்த மாணவன் ஆதித்ய பிரணவ் அறிவியலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.
    • தந்தையின் அரவணைப்பில் மாணவன் வளர்ந்து வந்தார்.

    சென்னை கொளத்தூரை சேர்ந்த மாணவன் வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    பிளஸ் 2 படித்து வந்த மாணவன் ஆதித்ய பிரணவ் அறிவியலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். எந்த நேரமும் அறிவியல் சார்ந்த சோதனைகளை வீட்டில் செய்து வருவது வழக்கம்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட ஆராய்ச்சியின்போது வீட்டில் இருந்து கரும்புகை வருவதாக கண்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக அவரது தந்தைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தாய் கொரோனா தொற்றுக்கு பலியான நிலையில், தந்தையின் அரவணைப்பில் மாணவன் வளர்ந்து வந்தார்.

    இந்நிலையில், இன்று மதியம் திடீரென மாணவனின் வீட்டில் இருந்து சத்தம் வரவே அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது மாணவன் சடலமாக கிடந்ததுள்ளார்.

    இதுதொடர்பான விசாரணையில், வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்து மாணவன் ஆதித்ய பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    • ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது.
    • ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் அம்பையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் அம்பை, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ-மாணவிகளை அழைத்து வர தனியாக பள்ளியில் பஸ்கள் இருந்தாலும், பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ள அடையக்கருங்குளம், அகஸ்தியர்பட்டி பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆட்டோக்களில் தினமும் வந்து செல்கின்றனர்.

    அந்த வகையில் இன்று காலை வழக்கம்போல் வி.கே.புரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் சுமார் 11 குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டனர்.

    ஆட்டோவை அடையக்கருங்குளத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். டிரைவரின் அருகே வி.கே.புரத்தை சேர்ந்த சித்திரை நாதன் என்பவரது மகன் பிரதீஷ்(வயது 10) என்ற 5-ம் வகுப்பு மாணவன் அமர்ந்திருந்தார்.

    அகஸ்தியர்பட்டியில் தனியார் ஓட்டல் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் சுந்தர் 'பிரேக்' பிடித்துள்ளார்.

    இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவரின் அருகே அமர்ந்திருந்த பிரதீஷ் ஆட்டோவின் அடியில் சிக்கி கொண்டான்.

    இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆட்டோ டிரைவரும் காயம் அடைந்தார். இந்த விபத்தில் ஆட்டோவின் கண்ணாடிகள் நொறுங்கியது.

    தகவல் அறிந்து வி.கே. புரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த மாணவன் பிரதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த குழந்தைகள் அம்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • முதுகுளத்தூரில் கண்மாய் கரையில் விளையாடிய 9-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் நிகாஷ்கண்ணன் (வயது14). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கண்மாய் கரையில் தனது நண்பர் களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டி ருந்தான். அப்போது அவரது நண்பர்கள் அடித்த பந்து கண்மாய்க்குள் விழுந்தது. இதை எடுப்பதற்காக நிகாஷ்கண்ணன் நீரில் இறங்கி பந்தை எடுக்க முயன்றான்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவன் நீரில் மூழ்கினான். இதைப்பார்த்த அவனது நண்பர்கள் நிகாஷ் கண்ணனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால் நிகாஷ் கண்ணன் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோ ரிடம் கூறி சென்றனர்.

    ஆனால் அவனது பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றி ருந்ததை அறிந்த அவனது நண்பர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். பின்னர் வீடு திரும்பிய பெற்றோர், தனது மகன் வெகுநேர மாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாண்டி நிகாஷ்கண்ணனின் நண்பர்களிடம் விசாரித்தார்.

    அப்போது நிகாஷ் கண்ணன் அங்குள்ள கண்மாயில் மூழ்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி யடைந்த பாண்டி முதுகு ளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் தீயணைப்பு போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிகாஷ்கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட சென்ற மாணவன் நீரில் மூழ்கி இறந்ததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • மின் கம்பி அறுந்து மாணவர் மீது விழுந்ததில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த கோமாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராம்குமார் (வயது 15). இவர் செங்கிப்பட்டி அருகே உள்ள முத்தாண்டிபட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் விடுமுறைக்காக கோமாரம் வந்திருந்த ராம்குமார் இன்று காலை பள்ளி சீருடையில் பள்ளிக்கு வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது சாலை ஓரத்தில் மின் கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்து மாணவர் மீது விழுந்ததில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாணவனின் தாய் இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பலியான மாணவனின் தந்தை செந்தில் குமார் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

    • குளவி கூட்டின் ஒரு பகுதி உடைந்து தஸ்வின் தலையில் விழுந்தது.
    • கிருத்திகா, பழனிசாமி ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகமங்கலம் கிராமம், முத்துமாரியம்மன் கோவில் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். தொழிலாளி. இவரது மனைவி நித்யா. இவர்களது மகன் தஸ்வின்(8), மகள் கிருத்திகா (4). இவர்களில் தஸ்வின் கீரப்பாக்கத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் ஆனந்தனும், அவரது மனைவி நித்யாவும் வேலை சம்பந்தமாக வெளியில் சென்று விட்டனர்.

    இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த தஸ்வினும், அவரது தங்கை கிருத்திகாவும் வீட்டின் வெளியே விளையாடினர். அப்போது அங்கிருந்த பனைமரத்தில் குளவிகள் பெரிய கூடு கட்டி இருந்தது.

    அந்த கூட்டின் மீது தஸ்வின் கல் வீசியதாக தெரிகிறது. மேலும் கம்பாலும் தட்டிவிட்டு விளையாடினர்.

    இதில் குளவி கூட்டின் ஒரு பகுதி உடைந்து தஸ்வின் தலையில் விழுந்தது. அப்போது ஏராளமான விஷ குளவிகள் பறந்து வந்து தஸ்வின் மற்றும் அருகில் நின்று கொண்டு இருந்த கிருத்திகாவை தலை, முகம் மற்றும் உடல் முழுவதும் கொட்டின. இதில் அவர்கள் இருவரும் அலறி துடித்தனர்.

    சத்தம் கேட்டு வீட்டில் இருந்த ஆனந்தனின் தந்தையான பழனிசாமியும் அங்கு வந்தார். அவரையும் குளவிகள் கொட்டின.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் குளவிகள் கொட்டியதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தஸ்வின், அவரது தங்கை கிருத்திகா, தாத்தா பழனிசாமி ஆகிய 3 பேரையும் மீட்டு ரத்தின மங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தஸ்வின் பரிதாபமாக இறந்தான். கிருத்திகா, பழனிசாமி ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • 2 மகன்கள் உள்ளனர்.

    திருவட்டார்:

    குலசேகரம் அருகே பேச்சிப்பாறை வலியமலை காணி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பால் வெட்டும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் அபினேஷ் (வயது 13). ஆலம்பாறை பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால் வீட்டுக்கு வந்த மாணவன் மணலோடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு தாயுடன் சென்று உள்ளான். அங்கு சென்ற அபினேஷ் தாயுடன் நடந்து வரும்போது பாம்பு ஒன்று அபினேஷ் காலில் கடித்துவிட்டது. இது குறித்து அபினேஷ் தனது தாயாரிடம் கூறியுள்ளார். உடனே அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் முதலுதவி செய்தார்கள். போக்குவரத்து வசதி இல்லாததால் அந்த பகுதியில் இருந்து உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லமுடியவில்லை. வெகுநேரம் கழித்து குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவனை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அபினேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து மணிகண்டன் குலசேகரம் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்டு அபினேஷ் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவமுகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.
    • ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பம், ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் புவியரசன். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்தி சரவணன் (வயது9). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக சக்தி சரவணன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரை கடந்த 8-ந்தேதி வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவரது உடல் நிலை மேலும் மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சக்தி சரவணனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை சிறுவன் சக்தி சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவமுகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து வருகிறார்கள். ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • கடந்த சனிக்கிழமை அருள் தனது நண்பர்கள் யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார்.
    • விடுமுறை நாளில் கடற்கரைக்கு சென்று விளையாடிய போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த அருளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த அருள் (14) என்ற மாணவன் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சனிக்கிழமை அருள் தனது நண்பர்கள் யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார்.

    பின்னர் கடலில் இறங்கி 3 பேரும் குளித்து விளையாடினர். அப்போது வந்த ராட்சத அலையில் 3 பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

    மாணவர்கள் கூச்சல் போட்டதை பார்த்து பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மீட்பு படையினர் அந்த பகுதியில் தேடிய போது யோகேஸ்வரனும் தர்ஷனும் கடல் அலையில் சிக்கி தவித்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் மீட்டனர். அருள் மட்டும் காணவில்லை.

    மாணவரை கடலோர காவல் படையினர் தேடினர். நேற்று ஹெலிகாப்டர் உதவியுடன் அருளை தேடினர். முகத்துவாரம் முதல் அண்ணா சதுக்கம் வரையில் தேடினர். ஆனாலும் அருள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அருளின் உடல் மெரினா கடற்கரைப் பகுதியில் இன்று ஒதுங்கியதை கடலோர காவல் படையினர் பார்த்தனர். அவரல் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    விடுமுறை நாளில் கடற்கரைக்கு சென்று விளையாடிய போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த அருளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    • தனது நண்பர்கள் 6 பேருடன் ஆற்றுக்கு குளிக்க சென்றான்.
    • பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த சோழன்மாளிகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்.இவரது மகன் அருள் (வயது 12). 7-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், அருள் தனது பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலந்துகொள்வதற்கு பள்ளிக்கு சென்றான்.பின், விழா முடிந்தவுடன் அருள் தனது நண்பர்கள் 6 பேருடன் பட்டீஸ்வரம் திருமலைராஜன் ஆற்றுக்கு குளிக்க சென்றான்.ஆற்றில் அருள் குளித்துக்கொ ண்டிருந்த போது, திடீரென நீரில் அடித்து செல்லப்பட்டான்.

    அப்போது அந்த வழியாக சென்ற சிலர் அருளை காப்பாற்ற ஆற்றில் குதித்து அவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.ஆனால் கரைக்கு கொண்டு வந்த சில நிமிடங்களில் அருள் பரிதாபமாக உயிரிழந்தான்.இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய மாணவர் அரசு பஸ் மோதி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை சேர்ந்தவர் சுஜாதா. இவர் கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஷரவன் (வயது10). இவர், அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று சுதந்திர தினவிழா பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க மாணவர் ஷரவன் தனது சைக்கிளில் தேசியக்கொடி கட்டிக்கொண்டு பள்ளிக்கு சென்றார். விழா முடிந்ததும் அவர் வீட்டுக்கு செல்வதற்காக சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அங்குள்ள சாலையை கடந்த போது சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவர் ஷரவன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய மாணவர் அரசு பஸ் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாங்காடு மாடல் பள்ளி அருகில் வசித்து வரும் சேகர் என்பவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • தவறி கீழே விழுந்து டிராக்டரின் சக்கரம் அவரது தலை மீது ஏறியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சேலம்:

    கொளத்தூர் மாங்காடு மாடல் பள்ளி அருகில் வசித்து வரும் சேகர் என்பவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று டிராக்டரில் எட்டாம் வகுப்பு படித்து வரும் அவரது மகன் வெங்கடேஷ் என்பவரை டிராக்டரில் அழைத்து கொண்டு வரும்போது கருங்கல்லூர் அருகே உள்ள வால் கிணத்தூர் பகுதியில் வளைவில் வேகமாக வந்து டிராக்டரை திரும்பும் போது எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்து டிராக்டரின் சக்கரம் அவரது தலை மீது ஏறியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்

    • பாஸ்கர் (வயது 17). இம்மாணவன், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான்.
    • நாவல் மரத்தில் ஏறி பழம் பறிக்கும்போது பாஸ்கர் தவறி கீழே விழுந்தான் இதில் பலத்த அடிபட்ட மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சேர்த்தனர்.

    காகாபாளையம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நெய்யமலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் பாஸ்கர் (வயது 17). இம்மாணவன், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். பள்ளி அருகே உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பள்ளி வளாகம் அருகே உள்ள நாவல் மரத்தில் ஏறி பழம் பறிக்கும்போது பாஸ்கர் தவறி கீழே விழுந்தான் இதில் பலத்த அடிபட்ட மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் உயிரிழந்தான். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×